Published:Updated:

பட்பட்... படார் படார்...

ஜாலியைவிட முக்கியம் பாதுகாப்பு!பொன்.விமலா, படங்கள்: வீ.சக்திஅருணகிரி, ஆர்.எம்.முத்துராஜ்

பட்பட்... படார் படார்...

ஜாலியைவிட முக்கியம் பாதுகாப்பு!பொன்.விமலா, படங்கள்: வீ.சக்திஅருணகிரி, ஆர்.எம்.முத்துராஜ்

Published:Updated:
##~##

 குட்டி மத்தாப்புகளாகட்டும்... ஆயிரம் வாலா... பத்தாயிரம் வாலா சரவெடிகளாகட்டும்... 'யார் வீட்டில் அதிகமாக பட்டாசு வெடிக்கிறார்கள்' என 'கெத்து’ காட்டுவதில் பலருக்கும் இங்கே கொள்ளைப் பிரியமே!

''பல ஆயிரங்கள் செலவு செய்து பட்டாசு வாங்கி காசை கரியாக்குவதற்குப் பதில், வேறு ஏதாவது பொருள் வாங்கிச் சேமிக்கலாம்'’ என்று தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பாக வீட்டில் பேச்சு ஆரம்பிக்கும். ''ஆமாம்... ஆமாம்... எனக்கெல்லாம் பட்டாசே தேவையில்லை' என்று குட்டீஸ்களும் கோரஸ் பாடும். ஆனால், தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்கும்போது... ''சும்மா கொஞ்சம்போல மத்தாப்பு, கொஞ்சம் போல சரவெடி வாங்கலாமா டாடீ'’ என்று ஆரம்பிக்கும் பேச்சு... தீபாவளி முதல் நாளன்று, பல ஆயிரங்களுக்கு பில் போட்ட பிறகே ஓயும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''தீபாவளி நெருக்கத்துலதான் ஆர்வம் பொங்க ஆரம்பிக்கும். இந்த வருஷம் தீபாவளிக்கு அதிகபட்சமா 1,000 ஷாட்ஸ் வாணவேடிக்கை வந்திருக்கு. 16 முதல் 20 ஆயிரம் ரூபாய் விலையிலகூட இந்த வாணவேடிக்கைகள் கிடைக்குது. ஷாட்ஸ்களுக்கு வழக்கம்போல வரவேற்பு இருக்கு'' என்று இந்த ஆண்டும் பரபரக்கப் போகும் பட்டாசு வியாபாரம் பற்றி பெருமையோடு கூறுகிறார் விருதுநகர் 'குட் வீல்’ பட்டாசு கடை உரிமையாளர் ராமகிருஷ்ணன்.

பட்பட்... படார் படார்...

இப்படியெல்லாம் ஆசை ஆசையாக பட்டாசுகளை வாங்கி வெடிக்கும் போது... கூடவே, பைசா செலவில்லாமல் வாங்க வேண்டிய முன்னெச்சரிக்கையை வாங்க பலரும் மறந்துவிடுகின்றனர்... விளைவு? சந்தோஷ தீபாவளி, தீராத வலியாக மாறிவிடுகிறது.

''தீபாவளி என்றாலே பலருக்கும் உற்சாக வெள்ளம் கரைபுரண்டோடும். ஆனால், எங்கள் துறையில் இருப்பவர்களுக்கு... பதற்றம் பற்றிக் கொள்ளும். ஒவ்வொரு ஆண் டும் தீபாவளி நேரத்தில் பட்டாசு விபத்தில் சிக்குபவர்களை மீட்கும் பணியில் ஈடுபடும்போது எங்களுக்குக் கிடைக்கும் அனுபவம்தான் காரணம்'' என்று வருத்தத்தோடு சொல்லும் தேனி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் உமையகுமார், முன்னெச்சரிக்கையாக பட்டாசுகள் வெடிப்பதற்காக தந்த டிப்ஸ்...

''தயவுசெய்து வீட்டுக்குள்ளோ... வீட்டுக்கு மிகஅருகிலோ பற்ற வைக்காமல், திறந்தவெளியில் வைத்து வெடியுங்கள். ராக்கெட் பட்டாசுகளை மைதானங்களில் மட்டுமே வெடிப்பது நல்லது. பெரும்பாலும் தீ விபத்துகள் ராக்கெட்டுகளால்தான் நடக்கின்றன. குறிப்பாக குடிசைகள் இருக்கும் பகுதிகளில் ராக்கெட் வைப்பதை முற்றாக தவிருங்கள். பெரியவர்களின் கண்காணிப்பில்தான் குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும். டின், பாட்டில், தேங்காய் சிரட்டை போன்ற பொருட்களைப் பயன்படுத்தி வெடிகளை வெடிப்பதில் குழந்தைகளுக்கு அலாதி இன்பம். ஆனால், இது ஆபத்தையே வரவழைக்கும். குழந்தைகள், சட்டை பாக்கெட்டில் பட்டாசுகளை வைத்துக் கொள்ள அனுமதிக்காதீர்கள்.

பட்டாசு வெடிக்கும் முன்பாக தண்ணீர் மற்றும் மணல் அருகில் இருப்பது போல பார்த்துக் கொள்வது நல்லது. உடலில் தீ பற்றிக் கொண்டுவிட்டால்... பயந்து ஓடாமல் தண்ணீர் ஊற்றி அணைப்பதோ அல்லது தரையில் புரண்டு உருளவோ செய்ய வேண்டும். விபத்து ஏதும் நிகழ்ந்தால்... உடனடியாக 101 மற்றும் 108 ஆகிய அவசர எண்களை அழைத்து தகவல் சொல்லுங்கள்.''

பட்பட்... படார் படார்...

பாதுகாப்பு மற்றும் முதலுதவி குறித்து பேசிய சென்னை, அப்போலோ மருத்துவமனையின் சரும சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரியா, ''பலமான பட்டாசுகளா இருந்தா... குழந்தைகள்கிட்ட கொடுத்து வெடிக்கச் சொல்லாதீங்க. பட்டாசு கொளுத் தறதுக்கு முன்ன, இறுக்கமான காட் டன் உடைகளைப் போட்டுக்க சொல்லுங்க. தப்பித் தவறி விபத்து நடந்தா... உடனே தண்ணீர் ஊத்தி அணைக்கணும். துணியைப் போட்டு அணைக்கிறோம்னு, நைலான் துணி களைப் போட்டு போர்த்தக் கூடாது. அதுவே தீக்காயத்தை அதிகப்படுத்தி டும். கனமான காட்டன் போர் வையை போர்த்தி தீயை அணைக்க முயற்சி பண்ணலாம்.

தீக்காயம் ஏற்பட்டா... அதுக்காக கடைகள்ல விற்கப்படுற கண்ட கண்ட மருந்துகளை நீங்களே வாங்கிப் போடறது... இங்க் ஊத்தறது... மஞ்சள் போடறதுனு எதையும் செய்யக் கூடாது. முதல் வேலையா சுத்தமான தண்ணியை ஊத்தி காயங்களை அலசணும். உடனடியா மருத்துவமனைக்கு கூட்டிட்டு போகணும். கண்ணில் தீப்பொறி பட்டாலும், சுத்தமான தண்ணியில கண்ணை அலசுறது முக்கியம். தயவுசெய்து கால்கள்ல செருப்பில்லாம பட்டாசு வெடிக்காதீங்க'' என்ற டாக்டர்,

''நாய்ஸ் பொல்யூஷன்... ஏர் பொல்யூஷன் இதுக்கெல்லாம் பட்டாசுகளும் முக்கியமான காரணம். இதனால நமக்குத்தான் ஆபத்து. அதனால... பட்டாசுகளைத் தவிர்க்கறது ரொம்ப ரொம்ப நல்லது'' என்று தன் கருத்தையும் பதிவு செய்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism