Published:Updated:

‘ஸ்பெஷல் சாதா’ சிரிப்பு!

பொன்.விமலா, படம்: வீ.சக்தி அருணகிரி

‘ஸ்பெஷல் சாதா’ சிரிப்பு!

பொன்.விமலா, படம்: வீ.சக்தி அருணகிரி

Published:Updated:
##~##

 ''தீபாவளிக்காக ஸ்பெஷல் ஜோக் சொல்லுங்க'’னு உங்கள் அபிமான நட்சத்திரங்கள் சிலர்கிட்ட போய் நின்னோம். சொல்லி வெச்ச மாதிரியே... ''அது என்ன மைசூர்பாகா... இல்ல பாதுஷாவா... ஸ்பெஷலா சொல்றதுக்கு! சரவெடி மாதிரி 'டப்... டப்’னு உங்களை சிரிக்க வைக்கறதுதானே எங்க டியூட்டி..! ஸ்பெஷலோ, சாதாவோ... இந்தா புடிச்சுக்கோங்க... எவர்க்ரீன் ஜோக்'’னு சொல்லி ஆளாளுக்கு ஒண்ணொண்ணா எடுத்துவிட்டாங்க. படிச்சுக்கோங்க... சிரிச்சுக் கோங்க!

பார்த்திபன்: ''ஒரு நாள் எங்க அம்மாகிட்ட, பக்கத்து வீட்டு அலமேலு அக்கா, 'ஒத்த தலை வலி’னு வேதனையோட சொல்லிட்டிருந்தாங்க. அதுக்கு எங்க அம்மா, 'பத்து போடுங்க அலமேலு’னு சொல்ல, பக்கத்துல நின்னுட்டிருந்த நான், 'பத்து போட வேணாம். அஞ்சு போடுங்க போதும். ரெண்டு பக்கம் தலைவலினா பத்து போடலாம்... ஒரு பக்கம்தானே வலிக்குது... அஞ்சு போட்டாலே போதும்’னு சொல்ல... அலமேலு அக்காவுக்கு தலையே பறந்து போயிடுச்சு. அம்மாவும், அந்தக்காவும் சேர்ந்து கிட்டு என்னை தொரத்தோ தொரத்துனு தொரத்த.... ஐயா, எஸ்கேப்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘ஸ்பெஷல் சாதா’ சிரிப்பு!

தம்பி ராமையா: '' 'கும்கி' ஷூட்டிங் சமயத்துல, யானை மேல உட்கார வெச்சாங்க. என்ன நினைச்சுதோ தெரியல... திடீர்னு தறிகெட்டு ஓட ஆரம்பிச்சுடுச்சு யானை. 'குய்யோ முய்யோ'னு நான் கத்த ஆரம்பிச்சுட்டேன். 'அடப்பாவிங்களா... 'மைனா’வுல தேசிய விருதெல்லாம் குடுத்துட்டு, இப்படி யானையை விட்டு பீதியை கௌப்புறானுங்களே! இந்த ஷாட்டுக்கு அப்புறம் நான் இருந்தா பொண்டாட்டிக்கு... இல்லாட்டி யானைக்குனு முடிவு பண்ணிக்கங்கடா'னு சத்தம்போட்டு சொல்லிட்டு, அழுது புலம்ப ஆரம்பிச்சுட்டேன். ஆனா, என்னைக் காப்பாத்தறதுக்கு முயற்சிக்காம, விடாம படம்பிடிச்சுட்டே இருந்தாங்க. ஒரு வழியா யானை அடங்க, கீழ இறங்கி வந்து பார்த்தா... அந்த ஸீனை ஓடவிட்டு, மொத்த டீமும் விழுந்து விழுந்து சிரிக் குது. வேற வழி... நானும் அவங்ககூட விழுந்து விழுந்து சிரிச்சேன்!''

‘ஸ்பெஷல் சாதா’ சிரிப்பு!

தேவதர்ஷினி: ''நானும் சேத்தனும் ஷூட்டிங்குக்காக வேற வேற ஸ்பாட்கள்ல சுத்தறதால, ஒருத்தருக்கொருத்தர் பாத்துக்கிறதே அபூர்வம்தான். போன்லதான் பேசிக்குவோம். ஒரு தடவை நான் பொள்ளாச்சியில இருந்தப்ப, 'ஏம்மா... எனக்கு ஷூட்டிங் முடிஞ்சு போச்சு. நான் வீட்டுக்குப் போறேன்’னார் சேத்தன்.

நானும், 'ஆமாங்க. எனக்கும் ஷூட்டிங் முடிஞ்சிருச்சு. நானும் வீட்டுக்குதான் போறேன்’னு சொன்னேன். நைட்டு பத்து மணி இருக்கும். அவரு எனக்கு போன் பண்ணி, 'என்னம்மா, 6 மணிக்கே கிளம்பிட்டேனு சொன்னியே, இன்னமும் காணோம்’னு கேட்க, 'நான் பொள்ளாச்சியில இருக்கேன், வர லேட்டாகும்’னு சொன்னதும், அவருக்கு பயங்கர ஷாக். 'என்னது பொள்ளாச்சியா? நாலு நாளா நானும் பொள்ளாச்சியிலதான இருந்தேன்’னு சொல்லி விழுந்து விழுந்து சிரிக்கறாரு.

தினமும் போன்ல பேசிக்கிட்டாலும்... 'யாரு எந்த ஊருல இருக்கோம்’னுகூட ஷேர் பண்ணிக்கலங்கறது புரிஞ்ச அந்த நிமிஷம்... வாழ்க்கையை நினைச்சு ரெண்டு பேரும் விழுந்து விழுந்து சிரிச்சோம்!''

பாண்டியராஜன்: ''உள்ளூர்ல மட்டுமில்லீங்க.... வெளிநாட்டுக்குப் போயிகூட பல்பு வாங்கியிருக்கேன். எம்.ஜி.ஆர் பிறந்த நாளுக்காக பிரான்ஸ் நாட்டுல நடந்த விழாவுக்கு என்னை கூப்பிட்டிருந்தாங்க. மேடையில நான் தமிழ்ல பேசினதை, பிரெஞ்சுல ஒருத் தர் மொழிபெயர்க்க... எதிரே இருந்த அந்த நாட்டுக்காரங்க விழுந்து விழுந்து கைத்தட்டி சிரிச்சாங்க. பிறகு, அந்த நகரத்தோட மேயர் பேச ஆரம்பிக்க... எல்லாரும் விழுந்து சிரிச் சாங்க. நானும் சிரிச்சேன். எல்லாரும் கை தட்டினப்ப நானும் தட்டினேன். ஆனா, எல் லாரும் என்னைப் பார்த்து 'கெக்கபிக்கே’னு சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க.  நெருங்கி வந்த நம்மாள் ஒருத்தர், 'அண்ணே... மேயர், உங் கள பத்திதான் புகழ்ந்து பேசிட்டு இருக்கார். உங்களுக்கு நீங்களே கைதட்டிப்பீங்களா?'னு கேட்க... என் முகம் போன போக்கிருக்கே!''

‘ஸ்பெஷல் சாதா’ சிரிப்பு!

பாக்யராஜ்: '' 'தாவணிக் கனவுகள்' ஷூட்டிங்... பூசாரி மணியடிச்சுக்கிட்டே சூடத்தை ஏத்தி சாமிக்கு ஆரத்தி காண்பிச்சுட்டு, சிவாஜி சார்கிட்ட கொண்டு வந்து நீட்டணும். 'ரிகர்சல் பார்த்தாச்சா?’னு சிவாஜி சார் கேட்டார். 'ஷாட் ரெடி சார்’னு சொல்லி அவரை வரச் சொல்லிட்டேன். கேமரா ஓட ஆரம்பிச்ச பிறகு பார்த்தா... அந்த பூசாரி கேரக்டர்ல நடிச்சவருக்கு மணியடிச்சுக்கிட்டே சூடத்தட்டுல ஆரத்தி காமிக்க முடியல. ஒண்ணு, மணியடிச்சா... ஆரத்தி தட்டும் சேர்ந்தே ஆடுது. இல்ல, ஆரத்தி காமிச்சா... மணியும் சேர்ந்து சுத்துது. டேக் ஓடிட்டே இருக்கு. திரும்பத் திரும்ப எடுத்தும் அவரோட ஆட்டம் மட்டும் நிக்கல. ஒரு கட்டத்துல இப்படியே ஆரத்தி தட்டை ஆட்டினவர், சூடம் மொத்தத்தையும் சிவாஜி சார் மேல கொட்ட... ஒரே கலாட்டாதான்!

'ஏய்யா... ரிகர்சல் பார்த்தாச்சுனு சொன்னியே...'னு சூடம் சுட்ட வேகத்துல கத்தி தீர்த்துட்டார் சிவாஜி சார்.

'சார், மணியாட்டுறதுதானே... டயலாக் மட்டும் ரிகர்சல் பார்த்தா போதும்னு நினைச்சுட்டேன். ஆனா, இப்பத்தான் புரி யது, மணியாட்டுறதுலகூட இவ்ளோ விஷயம் இருக்கறது'னு நான் சொல்ல...

வேதனையை மறந்து விழுந்து விழுந்து சிரிச்சார் சிவாஜி சார்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism