Published:Updated:

குட்டீஸ் குறும்பு!

குட்டீஸ் குறும்பு!

குட்டீஸ் குறும்பு!

குட்டீஸ் குறும்பு!

Published:Updated:
##~##

ஒவ்வொன்றுக்கும்  பரிசு:

குட்டீஸ் குறும்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

200

யெல்லோ பாத்!

சமீபத்தில், என் உறவினரின் இரண்டரை வயது சுட்டிக் குழந்தை மேக்னா, இங்கிலாந்திலிருந்து விடுமுறை நிமித்தம் எங்கள் ஊருக்கு வந்திருந்தாள். அவள் பேசும் மழலை ஆங்கிலம் எங்களை ரசித்து ரசித்து மகிழ வைக்கும். ஒரு நாள் தொலைக்காட்சியில் கடவுள் சிலைக்கு அபிஷேகம் செய்யும் காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதில், சந்தன அபிஷேகம் வர, அந்தச் சுட்டி எங்கள் ஒவ்வொருவரையும் அழைத்து, கண்கள் விரிய, சிறு கைகளை கன்னங்களில் வைத்து ஆச்சர்யத்துடன், ''காட் இஸ் டேக் கிங் யெல்லோ பாத்!'' என்று திரும்பத் திரும்ப கூறினாள். அந்த க்யூட் குட்டியின் புத்திசாலித்தனத்தைக் கண்டு மகிழ்ச்சியின் எல்லைக்கே சென் றோம்.

- மலர்விழி மாரீஸ்வரன், விருதுநகர்

'காகா... போபோ! காகா... வாவா?!’

அப்பளம், வத்தல், வடகம் போன்றவற்றை வாசலில் காய வைத்திருந்தேன். காக்கையின் தொல்லை தாங்கமுடியவில்லை. என் 5 வயது மகள் சிவாத்மிகா விடம் ஒரு குச்சியைக் கொடுத்து, காகங்களை விரட்டச் சொன்னேன். அவளும் ஓடி, ஓடி விரட்டினாள். மறுநாள் அமாவாசை... காக்காவுக்கு சாதம் வைத்தோம். என் மகளை அழைத்து ''கா... கானு சத்தமா கூப்பிடுமா... சாதம் சாப்பிட்டுவிட்டு போகட்டும்'' என் றேன். உடனே அவள், ''போங் கம்மா... நான் கூப்பிடமாட்டேன். நேத்து விரட்ட சொன்னீங்கனு குச்சி எடுத்து விரட்டினேன். அந்த காக்கா எல்லாம் என் மேல கோபமா இருக்கு. நான் கூப்பிட்டா வராது!'' என்று கடும் கோபத்துடன் சீறினாளே பார்க் கலாம்... வீடே சிரிப்பு மழையில் நனைந்தது!

- உமா ஜெகதீசன், திருச்சி

குட்டீஸ் குறும்பு!

'பெரியவன் ஆனா... பெண்டாட்டி பேச்சைக் கேட்பேன்!’

ஒரு விழாவுக்காக குடும்ப நண்பர் வீட்டுக்குச் சென்றோம். அவரின் ஐந்து வயது நிரம்பிய மகன் குறுக்கும் நெடுக்கமாக ''டுர்.. டுர்'' என்று ஒலியெழுப்பியபடியே ஓடிக் கொண்டிருந்தது... எல்லோர் கவனத்தையும் கவர்ந்தது. ஒரு பெரியவர் அவனிடம் ''நீ பெரியவன் ஆனால், என்ன செய்யப் போகிறாய்? டாக்டர் ஆகப்போறியா... வக்கீலா..?'' என்று கேட்டார். அந்தச் சிறுவன் சிறிதும் யோசிக்காமல் ''ஜோரா கல்யாணம் பண்ணிப்பேன். அப்பா மாதிரி பொண்டாட்டி சொன்னதைக் கேட்பேன்'' என்றான். சுற்றிலும் பலத்த சிரிப்பு.

- ராஜலஷ்மி மகாதேவன், கோயம்புத்தூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism