##~## |
'அழகாக இருக்க வேண்டும்' என்று நினைக்காதவர்கள் யாரும் இருக்கிறார்களா... என்ன? த்ரெடிங், வேக்ஸிங், ஹேர்கட்டிங் என்று பல காரணங்களுக்காக பார்லர் செல்வது இயல்பான விஷயமாகிவிட்டது. அந்த வகையில், அழகுக்கான விதம்விதமான லேட்டஸ்ட் ட்ரீட்மென்ட்ஸ் வந்து கொண்டே இருக்கின்றன.
இதைப் பற்றி பேசும், ‘The Visible Difference Salon and School Of Cosmetology’ நிறுவனர் வசுந்தரா, ''நம் முகத்தை அழகாக காண்பிப்பதில் முக்கிய பங்கு வகிப்பவை... கண்கள். அழகான இமைகள் ஆயிரம் கதை பேசும். 'எனக்கு இமை முடி குறைவாதான் இருக்கு' என்று வருந்துபவர்களுக்காகவே 'ஐலேஷ் எக்ஸ்டென்ஷன்' (Eyelash extension) வந்துள்ளது. தற்போது மார்க்கெட்டில் கருமை நிறம் துவங்கி, நம் உடைக்கு ஏற்ற கலர்களில் எல்லாம் 'ஐலேஷ்' கிடைக்கிறது. இதை எப்படிப் பயன்படுத்துவது என்று பார்க்கலாம் வாருங்கள்'' என்றபடி பார்லருக்குள் அழைத்துச் சென்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

படம்: 1 - க்ளன்சிங் மில்க் போட்டு முகத்தை தெளிவாக மிருதுவாக துடைத்தெடுத்து கொள்ளுங்கள்.
படம்: 2 - இனி முகம் மற்றும் கழுத்துக்கு ஃபவுண்டேஷன் க்ரீமை அப்ளை செய்து எல்லா இடமும் க்ரீம் ஒரே அளவில் தெரிவது போல சமன் செய்து கொள்ளுங்கள். அடுத்ததாக லூஸ் பவுடர், காம்பேக்ட் போட்டு முகத்தை மெருகேற்றிக் கொள்ளுங்கள்.

படம்: 3 - பிரவுன் பிளாக் கலந்த ஐப்ரோ பென்சிலால் புருவத்தை பிரகாசமாக்கிக் கொள்ளுங்கள்.

படம்: 4 - 'ஐப்ரோ வாக்ஸ் பென்சில்’ கொண்டு புருவத்தை ஷேப் செய்தால், புருவம் கலையாமல் இருக்கும்.
படம்: 5 - நீங்கள் அணிந்திருக்கும் உடைக்கேற்ப இரண்டு கலர்களில் ஐஷேடோ போட்டுக் கொள்ளுங்கள்.
இதுபோக... கண்களுக்கு ஐலனைர், மஸ்காரா போட்டுக் கொள்ளுங்கள்.
படம்: 6 - ஐலேஷ் எக்ஸ்டென்ஷனை எடுத்து அதில் வாட்டர் புரூஃப் நான்-டாக்ஸிக் கம்மை தடவி...
படம்: 7 - கண் இமைகளின் மேலே ஒட்டிவிடுங்கள். தேவைப்படும்போது ஐலேஷை ஒட்டிக் கொள்ளுங்கள்.
இனி, உங்கள் கண்கள் ஜொலிஜொலிக்கும்.
இந்த கண் மேக்கப்பை வீட்டிலேயே போட்டுக் கொள்ள முடியும். இதற்கான பொருட்கள் அத்தனையும் கடைகளில் கிடைக்கின்றன. ஒருவேளை பார்லருக்கு போக விரும்பினால்... 800 ரூபாய் செலவாகும்!
- அ.பார்வதி,
படங்கள்: ப.சரவணகுமார்
மாடல்: அஷ்ஜினா அக்பர்

கருவளையத்தை விரட்ட... தடுக்க!
''கண்களைச் சுற்றி வரும் கருவளையத்தை எப்படிப் போக்குவது... அது வராமல் இருக்க என்ன செய்வது..?'' என்று எல்லோருக்குள்ளும் இருக்கும் பொதுவான கேள்விகளுக்கு விடை அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த நியூட்ரிஷியன் மற்றும் டயட்டீஷியன் கன்சல்டன்ட் டாக்டர் தாரிணி கிருஷ்ணன்.
''கண் வறட்சிக்கு முக்கிய காரணமே... தூக்கமின்மை மற்றும் உடம்புக்குத் தேவையான ஓய்வு கிடைக்காமல் இருத்தல் போன்றவையே. இதன் காரணமாகவே கண்களைச் சுற்றி கருவளையம் வருகிறது. நேரத்துக்கு தூங்கி எழுவதும், நிறைய தண்ணீர் குடிப்பதாலும் கருவளையம் வராமல் தடுக்க முடியும். கண்கள் வறட்சியைத் தடுக்க எள் எண்ணெய் தடவி வரலாம். கண்டிப்பாக உணவுகளில் வைட்டமின் நிறைந்த மீன், சிக்கன்... பீட்டா கரோட்டின் நிறைந்த பப்பாளி, கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளையும் சேர்த்து வந்தால்... கண்ணுக்கு போதிய சக்தி கிடைப்பதோடு, கருவளையம் வராமல் காக்கும்.''