Published:Updated:

ஃபிரெஞ்சு தயாரிப்பில் இந்திய ஃபேஷன்!

ஃபிரெஞ்சு தயாரிப்பில் இந்திய ஃபேஷன்!

ஃபிரெஞ்சு தயாரிப்பில் இந்திய ஃபேஷன்!

ஃபிரெஞ்சு தயாரிப்பில் இந்திய ஃபேஷன்!

Published:Updated:
##~##

''அணியும் உடை ஃபேஷனாக, டிரெண்டியா இருப்பதோடு, நமக்குப் பாதுகாப்பையும், கண்ணியத்தையும் தரவேண்டும். கவர்ச்சிகரமாக ஆடைகள் உருவாக்குவதில் எனக்கு விருப்பம் இல்லை’' என்று ஃபிரெஞ்சு கலந்த ஆங்கிலத்தில் கலகலவென பேசுகிறார் விர்ஜினி டி மாலே.

ஃபிரெஞ்சு தேசத்து ஆடை வடிவமைப்பாளரான இவர், சென்னை, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள 'சமஸ்டா பொட்டிக்' ஷாப் உரிமையாளர் ம்ரிதுளிகா மேனன் மதிராஜுடன் இணைந்து, 'மாவி கலக்ஷென்ஸ்' (MAVIE collections) ஆடை அறிமுக விழாவுக்காக, சமீபத்தில் சென்னை வந்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நான் பிறந்தது... ஃபிரெஞ்சு காலனி நாடான மொரொக்கோ. உங்கள் நாட்டின் பிரபல கதக் நடனத்தை கற்றுக் கொள்வதற்காக 89-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்தேன். எங்கள் நாட்டில் நான் அணிந்திருந்த ஆடைகளைஎல்லாம் இங்கே அணிந்தால் மேலும், கீழும் பார்ப்பார்கள். அதனால், உங்கள் நாட்டுக்குத் தகுந்த மாதிரியும், எனக்குப் பொருந்துவது மாதிரியுமான ஆடைகளைத் தேடினேன்... தேடினேன்... தேடிக்கொண்டே இருந்தேன். ஒன்றுகூட கிடைக்கவில்லை. 'நாமே ஏன் இந்திய பாணி உடைகளை வடிவமைத்துக் கொள்ளக் கூடாது’ என்று தோன்றியது...'' என ரீவைண்ட் செய்த விர்ஜினி, அந்த நொடியில் இந்திய ஆடை வடிவமைப்பாளர் அவதாரத்தையும் எடுத்துவிட்டார்.

''என்னுடைய அம்மா ஒரு நடிகை. அவர் ஆடைகளை அணியும் விதமே... அவ்வளவு அழகாக இருக்கும். தன்னுடைய ஆடைகளை, தானே வடிவமைப்பார். பழைய ஆடைகளை மொத்தமாக மாற்றி அமைத்து, அத்தனை அழகாக தைத்துவிடுவார். அதையெல்லாம் பார்த்துப் பார்த்தே வளர்ந்தவள் என்பதால், நானே ஆடைகளை வடிவமைக்கத் தொடங்கினேன். அதுவே என்னை ஆடை வடிவமைப்பாளராக வடித்தெடுத்துவிட்டது. கிழக்கு மற்றும் மேற்கத்திய மக்களின் ஆடை பழக்கங்களை இணைத்து, என் கற்பனைகளையும் சேர்த்ததில் பிறந்ததுதான்... 'மாவி கலெக்ஷன்ஸ்'. இது, என் தயாரிப்பு ஆடைகளுக்கான பிராண்ட் பெயர்'' என்று சொல்லும்போது, அவர் கண்களில் தெரிந்தது, பெரிதாக சாதித்து, ஓர் நிலைக்கு வந்ததன் நிறைவு!

ஃபிரெஞ்சு தயாரிப்பில் இந்திய ஃபேஷன்!

''நான் வண்ணங்களின் காதலி. ஆடைகள் அனைத்தையுமே லினென், சில்க், ஷிபான், ஹேண்ட்லூம் என வண்ணமிகு இயற்கையான நூல்களைக் கொண்டு, உடலுக்கு இதம் மற்றும் கச்சிதமாக இருக்கும் வகையில் தைப்பதே என்னுடைய ஸ்டைல். பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் துறையில் நீடிக்கிறேன். எங்கள் நாட்டின் 'கத்லீன் போறோ' போன்ற பெரிய ஓவியர்களெல்லாம் என் வாடிக்கையாளர்கள் என்பதை நினைத்தாலே... என் மனம் இனிக்கின்றது. அத்தனைக்கும் காரணம்... ஆடைகளின் மீது நான் கொண்ட காதல்தான்'' என்று சொல்லும் இந்த ஆடைகளின் காதலி, ஃபிரெஞ்சு வாடை வீசும் நம்முடைய புதுச்சேரியில் 'ரெட் கோர்ட்யார்ட்' என்கிற பெயரில் 'பொட்டீக் ஷாப்' நடத்தி வருகிறார். இவர் வடிவமைத்த ஆடைகள் மட்டுமல்லாது, பிறருடைய ஓவியங்கள், அணிகலன்கள் என பலவும் இந்த ஷாப்பை அலங்கரிக்கின்றன!

ஃபிரெஞ்சு தயாரிப்பில் இந்திய ஃபேஷன்!

- அ.பார்வதி 
படங்கள்: எஸ்.கேசவசுதன்
மாடல்: அர்ச்சனா

ஃபிரெஞ்சு தயாரிப்பில் இந்திய ஃபேஷன்!
ஃபிரெஞ்சு தயாரிப்பில் இந்திய ஃபேஷன்!

விர்ஜினி டி மாலே, இந்திய பெண்களுக்காக சொன்ன டிப்ஸ்...

•  டஸ்கி நிறமாக இருப்பவர்கள் மஞ்சள், ஆரஞ்சு போன்ற நிற உடைகளைக் கண்டிப்பாகத் தவிருங்கள்.

•  பெரும்பாலான இந்திய பெண்கள்... பிரவுன், கிரே போன்ற ஷேடு கொண்ட உடைகளைத்தான் அதிகம் விரும்புகிறார்கள். இப்படிப்பட்ட உடைகளை அணியும்போது, அது அவர்களுடைய தோல் நிறத்தை ஒட்டியே இருப்பதால், ஆடைகள் பிரதானமாக்கப்பட்டு, ஆள் குறைத்துக் காட்டப்படும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

•  நீலம், மயில் பச்சை, பச்சை, மெஜந்தா போன்ற நிறங்கள்தான் உங்களை அழகுசுந்தரியாக வெளிக்காட்டும்.

•  உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் லூசான ஆடைகள் அணியும்போது மேலும் பருமனாகத் தெரிவீர்கள் (இந்தியாவில் நான் பார்க்கும் பருமனான பல பெண்கள் செய்யும் மிகப்பெரிய தவறு இது). பருமனாக இருப்பவர்கள், சரியான வளைவுகள் கொண்ட ஆடைகளாகத் தேர்ந்தெடுத்து அணிய வேண்டும்.

• நாற்பது வயதுக்கும் மேற்பட்ட பெண்மணிகள், சேலைதான் நமக்குச் சரியாக இருக்கும் என்று எண்ணுகிறார் கள். இது அவசியமில்லாத பயம் (இவர்களுக்காகவே அட்டகாசமான கவுன்களை நான் வடிவமைத்திருக்கிறேன்). சற்று குண்டாக இருந்தாலும் புடவைதான் நமக்கான சாய்ஸ் என்று நினைத்துக் கொள்வதும் தவறு (இவர்களுக்கென்றே கவுன் வடிவமைத்துள்ளேன். இது உடலை மெலிதாகக் காட்டும்).

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism