Published:Updated:

ரீ-கிரைண்டிங்!

ரீ-கிரைண்டிங்!

ரீ-கிரைண்டிங்!

ரீ-கிரைண்டிங்!

Published:Updated:
##~##

ம்மி, ஆட்டுக்கல் (குடக்கல்), திருகைக்கல், உரல்...

'இதெல்லாம் எங்கேயும் கேள்விப்பட்டது மாதிரிகூட இல்லையே!'னு மண்டையை சொறிய றீங்களா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதெல்லாம் ரொம்ப ஓவருங்க. இதுங்கள் லாம்தான் முந்தைய தலைமுறையோட கிரைண்டர், மிக்ஸி எல்லாமும்! கால வேகத்துல.... கால்ல றெக் கையைக் கட்டிட்டு பறக்கற நம்ம தலைமுறைக்கு, இதெல்லாம் சரிப்பட்டு வராதுனு நினைக்கலாம். ஆனாலும், பாரம்பரியமான அந்த அம்மி மாதிரி யான சாதனங்களால முந்தைய தலைமுறை அடைஞ்ச பலன்... நிறைய! ஒருவேளை மறுபடியும் அம்மி, ஆட்டுக்கல்லுனு பயன்படுத்த ஆரம் பிச்சா... எப்படி இருக்கும்?

• ரிப்பேர் செலவே இல்லாத ஜீவ சாதனங்கள்.

•  ஆயிரங்களை அள்ளிக் கொடுத்து ஜிம்மில் கிடைக்கும் உடற்பயிற்சி... இங்கே இலவசம். கூடவே, வீட்டு சமையல் வேலையும் முடிந்த பரவசம்!

•  நம் கைப்பட அரைத்து சமைப்பதால், சுவை மற்றும் தரமான உணவு... நூற்றுக்கு நூறு கியாரண்டி.

•  சோடா மாவு போன்றவற்றை உணவில் கலக்க வேண்டிய அவசியம் இல்லாமல், உரிய பக்கு வத்திலே மாவு அரைக்கப்படுவதால்... உண வின் சுவை மேலும் உறுதியாகும்.

ரீ-கிரைண்டிங்!

•  மின்சார செலவை சுத்தமாகக் குறைப்பதன் மூலம் பாக்கெட் பலமாகும். சுற்றுப்புறச் சூழலும் கெடாது.

•  மருத்துவக் குணமுள்ள பொருட்களை, அவற்றின் தன்மை கெடாமல் அரைத்துப் பயன்படுத்த, இவற்றுக்கு இணையே இல்லை.

•  'கரன்ட் இல்லையே' என்கிற கவலை இல்லையே!.

குறிப்பு: இன்றைக்கு கிராமங்களில் அடிக்கடி மின்சாரம் தடைபடுவதால், வீட்டுக் கொல்லைப் புறத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் அம்மிக்கல், ஆட்டுக்கல் போன்றவற்றை தட்டி எழுப்பிக் கொண்டுள்ளனர் சிலர். ஆனால், நகர்ப்புறங்களில்... திருமணத்துக்கு அம்மி மிதித்து, மெட்டி போடு வதற்கே வாடகைக்குத்தான் அம்மி வாங்குகிறார்கள்!

- சா.வடிவரசு, ஓவியம்: எஸ்.இளையராஜா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism