Published:Updated:

ஸ்டூடன்ட் வித் செலிப்ரிட்டி!

ஸ்டூடன்ட் வித் செலிப்ரிட்டி!

ஸ்டூடன்ட் வித் செலிப்ரிட்டி!

ஸ்டூடன்ட் வித் செலிப்ரிட்டி!

Published:Updated:
##~##

சினிமாக்களில் வருகிற ஹீரோ, ஹீரோயின்கள்... 'பளிச் பளிச்’ என்று மின்னுவதற்குக் காரணமே... அவர்களுக்கு போடப்படும் மேக்கப் என்பது சொல்லித் தெரிய வேண்டிய தில்லை. ஆனாலும்... 'அப்படி என்னதான் செய்வாங்க... இப்படி ஜொலிக்கறதுக்கு?’ என்கிற கேள்வி, எம்.ஜி.ஆர் காலம் தொட்டு... விஜய் காலம் வரை வெளிப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது.

இங்கே, இதுபோன்ற கேள்விகளுடன்... சென்னை, கோட்டூர்புரம், 'நேச்சுரல்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பியூட்டி’ எனும் கல்விக் கூடத்தில் படிக்கும் மாணவ - மாணவிகள், சினிமா மேக்கப் துறையில் கடந்த 47 ஆண்டுகளாக கலக்கிக் கொண்டிருக்கும் சுந்தரமூர்த்தியைச் சந்திக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நீங்க ரஜினி சாருக்கு ஆதர்ச மேக்கப் மேனாமே?''

''அப்போல்லாம் இந்த ஃபீல்டுல நிறைய பேர் கிடையாது. இருக்கிற கொஞ்ச பேர்தான்... எல்லா ஆர்ட்டிஸ்டுகளுக்கும் மேக்கப் போடுவோம். அப்படித்தான் 'அபூர்வ ராகங்கள்' படத்துல சாருக்கு மேக்கப் போடுற வாய்ப்பு கிடைச்சுது. அன்னிக்கு கிடைச்ச அந்த வாய்ப்பு.... 'சந்திரமுகி’ வரைக்கும் தொடர்ந்துட்டே இருக்கு. 'இப்படித்தான் மேக்கப் போடணும்'னு எதையுமே சார் சொல்லவே மாட்டார். என் போக்குல விட்டுருவார். அவருக்கும், டைரக்டருக்கும் பிடிச்ச மாதிரி நானும் மேக்கப் போட்டுடுவேன்.''

ஸ்டூடன்ட் வித் செலிப்ரிட்டி!

''இந்தத் துறையில எப்படி நம்மள மெருகேத்திக்கறது?''

''ஒரு தடவ வெளிநாட்டு ஃபேஷன் ஷோவுல ஒருத்தர் போட்டிருந்த வித்தியாசமான கண்ணாடியைப் பார்த்தேன். அதோட ஸ்டைல், லுக் எல்லாம் ரொம்ப பிடிச்சு போக, அந்த கண்ணாடி என் மனசுலயே இருந்துச்சு. 'பாட்ஷா' படத்துக்காக அதேமாதிரி கண்ணாடியை சாருக்கு போட்டோம். அது செம ஹிட். ஆளாளுக்கு அதேமாதிரி கண்ணாடியை வாங்கி மாட்டிக்க ஆரம்பிச்சாங்க. இப்படி நாம பார்க்கற பல விஷயங்கள்ல இருந்தும் தொடர்ந்து கத்துக்கிட்டே இருந்தா, வேலையில மெருகு ஏறிட்டே இருக்கும்... நம்மளயும் யாரும் அசைக்க முடியாது!''

ஸ்டூடன்ட் வித் செலிப்ரிட்டி!

''கஷ்டமான மேக்கப்னு எதை சொல்வீங்க?''

''வயசானவங்கள, சின்ன பசங்க மாதிரியும்... சின்னவங்கள, வயசானவங்க மாதிரியும் காட்டுறதுதான் ரொம்ப கஷ்டம். பெண்களுக்கு பீரியட்ஸ் நேரத்துல எப்படி மேக்கப் போட்டாலும் ஒட்டாம முகம் எண்ணெய் தன்மையோட இருக்கும். அந்த நேரத்துல எப்படி மேக்கப் போடணும்னு அனுபவத்துலதான் கத்துக்கணும்.''

''சினிமா மேக்கப், பிரைடல் மேக்கப்... என்ன வித்தியாசம்?''

''சினிமா மேக்கப்புல நம்முடைய க்ரியேட்டிவிட்டியை எந்த அளவுக்கு வேணும்னாலும் காட்ட முடியும். அதேசமயம்... சில மணி நேரத்துக்குள்ள போட்டுட்டு... தொடர்ந்து 'டச் அப்' செய்துட்டே இருக்கணும். ஆனா, பிரைடல்ல சம்பந்தப்பட்ட பொண்ணு விரும்பறதைத்தான் போட முடியும். அந்தப் பொண்ணுக்கு, அந்த மேக்கப் சரிப்பட்டு வராதுனு நமக்கு தோணினாலும்... அவங்க சொல்றத செய்துதான் ஆகணும். அப்பத்தான் தொடர்ந்து கஸ்டமர்ஸ் கிடைப்பாங்க.''  

''எங்களுக்கெல்லாம்... எதிர்காலத்துல வேலைவாய்ப்புகள் கியாரன்டியா கிடைக்குமா?''

''இந்த துறைக்கு இறங்கு முகமே கிடையாது. குழந்தை பிறந்தவுடனே பவுடர் அடிச்சு, மை வெச்சு, பொட்டு வைக்கிறோம். அன்னிக்கு ஆரம்பிக்கிற இந்த மேக்கப்... கடைசிவரைக்கும் தொடருதுதானே..! அதனால, இந்த துறையைத் தேர்ந்தெடுத்த உங்க எல்லாருக்குமே நல்ல எதிர்காலம் நிச்சயமா இருக்கு.

ஸ்டூடன்ட் வித் செலிப்ரிட்டி!

சினிமா, சின்னத்திரையிலேயே நிறைய வேலைகள் இருக்கு. உங்கள்ல யார் வேணும்னாலும் மேக்கப் மேன் / மேக்கப் உமன் ஆகலாம். தென்னிந்திய சினிமா ஒப்பனைக் கலைஞர்கள் சங்கத்துல பணம் கட்டி... அசிஸ்டன்ட் மேக்கப் மேன் கார்டு வாங்கிடணும். அதுக்கப்புறம் சினி ஃபீல்டுல உள்ள மேக்கப் மேன்கிட்ட அசிஸ்டன்ட்டா ஒண்ணரை வருஷம் வரைக்கும் செயல்படணும். பிறகு, சீஃப் மேக்கப் மேன் கார்டுக்கு பணம் கட்டி வாங்கி, திறமையை வெச்சு வாய்ப்புத் தேடிக்கிட்டா... நல்ல வருமானம்தான்.''

''இத்தனை வருஷமா இந்த ஃபீல்டுல நிலைச்சுருக்கற ரகசியம்?''

''இது ரொம்பவே சேலஞ்சிங்கான துறை. சூழலுக்கு ஏத்தமாதிரி நடந்துக்கறதுலதான் இருக்கு வெற்றி. எந்த இடம், யாருக்கு போடுறோம், அவரோட கேரக்டர்... எல்லாத்தையும் மனசுல வாங்கிக்கணும். பொறுமை, திறமை ரெண்டுமே ரொம்ப அவசியம். அப்புறம்... புதுசு புதுசா கத்துக்கிட்டே இருக்கணும். இதெல்லாம்தான் அந்த ரகசியம்!''

- சா.வடிவரசு

படம்: சொ.பாலசுப்ரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism