##~## |
''ஹலோ... நான் உங்க அன்பு 'ஆர்ஜே', எஸ்டிஎஸ் பேசறேன். உங்க பேரை தெரிஞ்சுக்கலாமா?''
''திவ்யா...''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''வெரிகுட் திவ்யா.. எங்கருந்து பேசறீங்க?''
''ட்ரிப்ளிகேன்ல இருந்து மேடம்.''
''எங்கருந்து? ஸாரி... கேட்கல...''
''ட்ரிப்ளிகேன்.''
''ப்ளீஸ்... டி.வி. வால்யூமை கம்மி பண்ணுங்க, மேடம்.''
''மேடம் இல்ல... ஸ்டூடன்ட்''
''ஸாரி... உங்க வாய்ஸ் மெச்சூர்டா இருந்தது. ஓ.கே... என்ன படிக்கறீங்க?''
''ப்ளஸ் டூ.''
''என்ன சப்ஜெக்ட்?''
''காமர்ஸ்.''
''ஓ... ஃப்யூச்சர் ஃபினான்ஸ் மினிஸ்டர் ரெடியா கிறீங்கனு சொல்லுங்க'' (சிரிப்பு)

''சரி, என்ன ஜோக் சொல்லப் போறீங்க?''
''ஒரு ஸ்நேக்கும் மங்கியும் ஷாப்பிங் போச்சாம். நான் புது சட்டை பர்ச்சேஸ் பண்ண வந்தேன்னு ஸ்நேக் சொல்லுச்சாம்.''
''வாட் அ ஜோக்.. வாட் எ ஜோக்...''
''ஜோக் இன்னும் முடியல.. மங்கி என்ன பர்ச்சேஸ் பண்ணுச்சுனு கேளுங்க.''
''ஓ.கே. மங்கி என்ன பர்ச்சேஸ் பண்ணுச்சு?''
''ஒரு அம்பர்லா பர்ச்சேஸ் பண்ண வந்தேன்னு சொல்லுச்சாம்''
''எதுக்கு அம்பர்லா?''
''ஸ்நேக் இன் த மங்கி ஷேடோ’னு தானே சொல்லுவாங்க. அதுக்குத்தான் அம்பர்லா.''
''குட் காமெடி.. ஓ.கே... இந்த சாங்கை யாருக்கு டெடிகேட் பண்ணப் போறீங்க?''
''என்னோட ஃப்ரெண்ட்ஸுக்கு, அங்கிளுக்கு, ஆன்ட்டிக்கு.''
''உங்களுக்காக சூப்பரான சாங் வருது. என்ஜாய் பண்ணுங்க.''
''சரி மேடம், அதென்ன உங்க பேரு எஸ்டிஎஸ்... நீங்க ஏதும் அரசியல்வாதி வீட்டு பொண்ணோ?''
''பொலிட்டீஷியன்..? நோ... நோ! என் பேரு Seந்Taமிழ்ச்Seல்வி. அதைத்தான் 'ஷார்ட்'டாக்கிட்டேன்!''
மொத்த வார்த்தைகள்: 139;
ஆங்கிலம்: 70; தமிழ்: 69
ஹலோ: தமிழ்ல எப்படி சொல்றதுனு தெரியலையே! ஆர்ஜே: (ரேடியோ ஜாக்கி) வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர்; நெக்ஸ்ட் காலர்: அடுத்து அழைப்பவர்; வெரிகுட்: மிகவும் நல்லது; ட்ரிப்ளிகேன்: திருவல்லிக்கேணி; ப்ளீஸ்: தயவுசெய்து; டி.வி: தொலைக்காட்சி; வால்யூம்: அளவு; மேடம்: அம்மையீர்; ஸ்டூடன்ட்: மாணவர்; ஸாரி: மன்னிக்கவும்; வாய்ஸ்: குரல்; மெச்சூர்ட்: முதிர்ச்சி; ப்ளஸ் டூ: பன்னிரண்டாம் வகுப்பு; சப்ஜெக்ட்: பாடம்; காமர்ஸ்: வணிகவியல்; ஃபியூச்சர்: எதிர்காலம், ஃபினான்ஸ்: நிதி, மினிஸ்டர்: அமைச்சர், ரெடி: தயார், ஜோக்: நகைச்சுவை; மங்கி: குரங்கு; ஸ்நேக்: பாம்பு; பர்ச்சேஸ்: வாங்குவது; ஷாப்: கடை; அம்பர்லா: குடை; காமெடி: நகைச்சுவை; டெடிகேட்: சமர்ப்பணம்; ஃப்ரெண்ட்ஸ்: நண்பர்கள்; அங்கிள், ஆன்ட்டி: மாமா, மாமி; சூப்பர்: பிரமாதம்; சாங்: பாடல்; பொலிட்டீஷியன்: அரசியல்வாதி; நோ நோ: இல்லை இல்லை; ஷார்ட்: சுருக்கமாக; என்ஜாய்: மகிழுங்கள்.
- தமிழ் டீச்சர்