Published:Updated:

‘தீபாவளிக்கு ஏங்கறோம்னு நாங்க சொன்னோமா?!’

‘தீபாவளிக்கு ஏங்கறோம்னு நாங்க சொன்னோமா?!’

‘தீபாவளிக்கு ஏங்கறோம்னு நாங்க சொன்னோமா?!’

‘தீபாவளிக்கு ஏங்கறோம்னு நாங்க சொன்னோமா?!’

Published:Updated:
##~##

''ஊர்ல ஃப்ரெண்ட்ஸ்... அண்ணன், அக்கா, தம்பி, தங்கச்சி, சொந்தக்காரங்க இப்படி எல்லாரும் 'டமால்... டுமீல்'னு தீபாவளியை ஜோரா கொண்டாடிட்டு இருக்க... ஹாஸ்டல்ல தங்கியிருக்கற உங்கள நினைச்சாத்தான் பாவமா இருக்கு'' என்றபடி கை நிறைய பட்டாசுகளோடு, மைசூர், 'ரீஜினல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எஜுகேஷன்' கல்லூரி விடுதியில் நாம் ஆஜராக...

''ஹலோ பாஸ்... நாங்க சொன்னோமா... தீபாவளி சமயத்தில் இங்க தன்னந்தனியா கிடந்து தவிக்கிறோம்னு. உங்களைவிட நாங்கதான் சூப்பர் தீபாவளியைக் கொண்டாடுறோம் தெரியும்ல...'' என 'டிங்... டிங்...' கொடுத்து, 'நிஞ்ஜா ஹடோரி' பாணியில் நம்மை வரவேற்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ரெசிடென்ஷியல் காலேஜ்ங்கறதுனால படிப்பு முடியற வரை வீட்டுக்கு போறதுக்கான சான்ஸ் கம்மி. ஆனா, அப்படி போகாம... இங்கேயே டேரா போட்டு, ஃப்ரெண்ட்ஸோட கூத்தடிக்கறதுதான் டார்லிங் (நம்மளத்தான்) எங்களுக்கு என்ஜாய்மென்டே! எங்களுக்கு இது கடைசி வருஷம்ங்கறதால ஆடி தீர்த்துருவோம்ல. தீபாவளிக்கு முதல் நாள் நைட், அழகா மெகந்தி வெச்சுவிடுற பொண்ணுங்க முன்ன போய் ஆஜராகிடுவோம். கையை அழகாக்கிட்டுதான் எழுந்திருக்கவே செய்வோம். நைட் ஒருத்தி தலையில இன்னொருத்தி எண்ணெய் வெச்சு, கட்டில், பெட் எல்லாத்தையும் அழுக்காக்கினு செம ரகளைதான்'' என்று யாழினி முதலில் பற்ற வைத்தார்.

‘தீபாவளிக்கு ஏங்கறோம்னு நாங்க சொன்னோமா?!’

''தீபாவளிக்கு என்ன டிரெஸ் போட போறோமோ... அதுக்கு ஏத்தாப்ல பாசி, மணினு அக்ஸசரீஸ் யார்கிட்ட இருக்கோ... அதைஎல்லாம் செல்லமா சுடறதுக்காக தேடி அலைவோம். இந்த கூத்தெல்லாம் முடியறதுக்குள்ளே விடிஞ்சுடும். ஒரு கேங்கா காலங்காத்தாலயே மேக்ஸிமம் புடவையோட கிளம்பி, சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு மலையேறிடுவோம். மெதுவா ஹாஸ்டலுக்கு திரும்பி வந்து, மெஸ்ல ஏதாவது இருக்கானு பார்த்துட்டு, இல்லைனா... புரியாத இங்கிலீஷ்ல மெஸ்காரன திட்டிட்டு, டி.வி முன்ன ஆஜர் ஆகிடுவோம். அதேசமயம்... பொழுது எப்ப சாயும்னு எதிர்பார்த்துக்கிட்டே இருப்போம்'' என்று ஒரு ட்விஸ்ட் வைத்து ப்ரீத்தி நிறுத்த...

''ஒவ்வொரு ஃபங்ஷனுக்கும் ரிசப்ஷனிஸ்ட் டீமை காலேஜ்ல தேர்ந்தெடுப்பாங்க. அதனால அந்தக் குழுவுல இடம் பிடிக்கறதுக்கு பெரும் போட்டியே இருக்கும். இதையெல்லாம்விட அற் புதமான விஷயம், நைட் தீபாவளி கொண்டாட்டம் ஆரம்பிக்கற நேரத்துல எங்க எல்லாருக்கும் கிரவுண்ட்ல பெரிய அண்டால விதம்விதமான சமையல் ரெடி பண்ணுவாங்க. அந்த வாசனையே ஆளைத் தூக்கும்'' என்று அந்த ட்விஸ்ட்டை உடைத்தார் சரஸ்வதி.

''புரொஃபசர்ஸ் முதற்கொண்டு அத்தனை பேர் பேரையும் எழுதி, குலுக்கிப் போட்டு பத்து பேரை செலக்ட் பண்ணுவாங்க. காலேஜ் சார்புல வாங்கி வெச்சுருக்கற வெடி மொத்தத்தையும் அந்த பத்துபேர் மட்டும்தான் வெடிக்கலாம். அதனால... 'என் பேர் வருமா... உன் பேரு வருமா?'னு கிடந்து அடிச்சுப்போம். அப்படி மட்டும் வந்துச்சுனு வைங்க... அவ்ளோதான். மிஸ் யுனிவர்ஸ் பட்டம் கிடைச்ச மாதிரி ஆனந்தக் கண்ணீர் ஒழுக வெடி வெடிப்போம். இதெல்லாம் வீட்டுக்குப் போனா கிடைக்குமா சொல்லுங்க. நம்ம வீட்டு முன்னாடி வெடி வெடிக்கிறதெல்லாம் ஒரு ஃபங்ஷனா?'' என்று கண்களால் மிரட்டினார் ஸ்ரீலேகா.

‘தீபாவளிக்கு ஏங்கறோம்னு நாங்க சொன்னோமா?!’

''வெடியெல்லாம் போட்ட பிறகு... ஸ்டூடன்ட்ஸ், புரொஃபசர்ஸ், ஸ்டாஃப்ஸ், அவர்களுடைய குடும்பம்னு எல்லாரும் பெரிய குடும்பமா கிரவுண்ட் முழுக்க ஒண்ணா உட்கார்ந்து 'மூன் லைட் டின்னர்’ சாப்பிடுவோம்'' என்று புனர்ஜோதி சொல்ல,

''ஆனா, தீபாவளி அப்ப அமாவாசைதானே வரும்...''னு நாம ஐன்ஸ்டீன் ரேஞ்சுக்கு யோசிக்க...

''சரி, 'நியூமூன் டின்னர்'னு வெச்சுக்கோங்க''னு ஜஸ்ட் லைக் தட் கிராஸ் செய்த புனர்ஜோதி... ''பேரா முக்கியம். அந்த நேரத்துல சாப்பிடுற சுகம் இருக்கே.... இந்த சந்தோஷத்துல... அம்மா, அப்பாவை மிஸ் பண்ற ஏக்கம் எதுவுமே எட்டிப் பாக்காது'' என்று நமக்கும் லேசான ஜெலஸை ஏற்படுத்தினார்.

கடைசியில்... ''சரி சரி... எங்களை பத்தி தெரியாம, விஜயகாந்த் ரேஞ்சுக்கு ஏகத்துக்கு ஃபீல் பண்ணி, வெடியெல்லாம் வாங்கிட்டு வந்துட்டீங்க. அப்படியே திரும்ப போக விட்டா, உங்க மனசு மட்டுமில்ல, எங்க மனசும் காயப்படும். கொடுங்க வெடியை எல்லாம்'' என்று வெடித்துத் தீர்த்தார்கள்!

- இ.பிரியதரிசினி, படங்கள்: மு.லலித்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism