Published:Updated:

‘அது ஒரு ஆனந்தத் தொல்லை!’

- இது ஒரு தீபாவளி டிரெய்லர், ஸாரி... டெய்லர்!வே.கிருஷ்ணவேணி, படங்கள்: ப.சரவணகுமார்

‘அது ஒரு ஆனந்தத் தொல்லை!’

- இது ஒரு தீபாவளி டிரெய்லர், ஸாரி... டெய்லர்!வே.கிருஷ்ணவேணி, படங்கள்: ப.சரவணகுமார்

Published:Updated:
##~##

 'ஹய்ய்யா... தீபாவளி வந்துடுச்சே!’ - இது நாம்...

'ஹய்யோ... தீபாவளி வந்துடுச்சா!' - இது டெய்லர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என்னதான் வரும்படி அதிகரிக்கும் என்றாலும், தீபாவளி முடிவதற்குள்ளாக டெய்லர்களின் தாவு தீர்ந்துவிடும். ''அண்ணே, எனக்கு 'நய்யாண்டி' ஹீரோயின் நஸ்ரியா போட்டிருக்கிற நெக் டிசைன் மாதிரி இருக்கணும். ஸ்லீவ்ல இவ்வளவு ஷார்ட் இருக்கணும்...'’ என்றெல்லாம் விலாவாரியாக சொல்லிட்டு, ''டூ டேஸ்ல கொடுத்துடுவீங்கதானே?'' என்று நூறு ரூபாய் பத்திரத்தில் எழுதாத குறையாக, வீட்டுக்குக் கிளம்பிவிடுவார்கள். ஆனால், தீபாவளிக்கு முந்தைய சில தினங்களில் என்ன நடக்கும்... என்பது நாமறிந்ததுதானே!

இதற்காகவே 24x7 என உழைக்கும் டெய்லர்களின் அனுபவங்களைக் கேட்போமா...

 ‘அது ஒரு ஆனந்தத் தொல்லை!’

சுஜாதா (வஸ்த்ரா பொட்டீக்ஸ், கே.கே.நகர், சென்னை): ''பத்து வருஷமா நம்ம பொண்ணுங்க டிரெஸ்ஸிங் சென்ஸ்ல ரொம்ப அட்வான்ஸ்டா இருக்காங்க. எந்த ஹீரோயினாவது கொஞ்சம் வித்தியாசமான டிசைன்ல போட்டிருந்தா போச்சு. 'அதேமாதிரி வேணும்’னு வந்து நிப்பாங்க. டி.வி விளம்பரங்கள், வெப்சைட்ஸ், இப்படி புது டிசைன்களைப் பார்த்துட்டா போதும்... பிரின்ட் அவுட் எடுத்துட்டு வந்து நீட்டுவாங்க. அதுவும் அதிகபட்ச டைம்... அஞ்சு நாள்தான் கொடுப்பாங்க. ஆனா, இதையெல்லாம் நாங்க சிரமமா நினைக்கறதே இல்லை. சொல்லப்போனா... அது ஒரு ஆனந்த தொல்லை!

ஒரு வருஷ தீபாவளி அன்னிக்கு நைட் ஒரு மணி வரையிலும் கண் முழிச்சி தைச்சு கொடுத்துட்டு வீட்டுக்குப் போனார் எங்க டெய்லர். இதுல, அவரோட தலைதீபாவளியே முடிஞ்சு போச்சு. ஊருக்கே துணி தைச்சுக் கொடுக்கற டெய்லர்கள்... அவங்களுக்குனு ஆசையா ஒரு புது துணி கூட தைச்சுப் போட்டுக்க முடியாதுங்கறதுதான் நிலவரம்.''

சுஜாதா சொல்லும் டிப்ஸ்: பிளவுஸ், சுடிதார்னு காஸ்ட்லி டிரெஸ் எதுவா இருந்தாலும், லைனிங் கிளாத் வெச்சு தைக்காம இருக்காதீங்க. அப்பத்தான் துணியோட ஆயுள் கூடுதலா இருக்கும்.

என்னதான் நாம பணத்தைக் கொடுத்தாலும்... நாம ஒவ்வொருத்தரும் அழகழகா ஜொலிக்கறதுக்காக... சிரத்தை எடுத்துக்கற டெய்லர்கள், நம்ம நேசத்துக்குரியவங்கதானே..! அவங்களுக்காக சத்தமா சொல்லுவோம்... ஹேப்பி தீபாவளி!

 ‘அது ஒரு ஆனந்தத் தொல்லை!’

காதர் ஷரீஃப் (ஷா அண்ட் ஷா ஃபேஷன்ஸ், கோடம்பாக்கம், சென்னை): ''போன தீபாவளியப்ப ஒரு கஸ்டமர், '16 வருஷமா எத்தனயோ டெய்லர்கிட்ட பிளவுஸ் தைச்சிருந்தாலும், என் மனைவி திருப்தி ஆனதில்லை. இவ்வளவு வருஷம் கழிச்சு நீங்கதான் அந்த ரெக்கார்டை பிரேக் பண்ணியிருக்கீங்க... நன்றி’னு சொன்னார். அதுதான் என்னுடைய மறக்க முடியாத தீபாவளி. இதுக்குக் காரணமே... சிரத்தை எடுத்து தைக்கறதுதான். விசேஷ காலங்கள்ல 'டபுள் சார்ஜ் கொடுக்கிறேன்.... தைச்சுக் கொடுங்க’னு கஸ்டமர்கள் வருவாங்க. பணத்துக்கு ஆசைப்பட்டு அவசர அவசரமா தைச்சுக் கொடுத்தா... பேருதான் கெட்டுப்போகும். அதனால, 'கோடி ரூபா கொடுத்தாக்கூட முடியாது'னு கவுண்டமணி ஸ்டைல்ல... பணிவா சொல்லி அனுப்பிடுவேன்.''

காதர் சொல்லும் டிப்ஸ்: நீங்க 700 ரூபாய்க்கு (துணியோட விலை 400 ரூபாய்க்குள்ளதான் இருக்கும்) ஒரு ரெடிமேட் சுடிதார் வாங்கறீங்க. அதை வாங்கிட்டு வந்து அப்படியே போட்டுக்கிட்டா... முதல் தடவையே தையல் பிரிஞ்சு அவஸ்தையைக் கொடுக்கும். ரெடிமேட் தையலோட குணம் அப்படி. ரீ-ஸ்டிச்சிங்குனு போய் நின்னா... டெய்லர்கள் பலரும் சம்மதிக்கவே மாட்டாங்க. கஷ்டப்பட்டு ஒரு டெய்லரை பிடிச்சுட்டாலும்... இருநூறு ரூபாய்க்கு குறையாம கேப்பார். ஆக, அந்த சுடிதாரோட விலை 900 ரூபாய். அந்த 400 ரூபாய் துணியை நேரடியா டைலர்கிட்ட கொடுத்து தைச்சுருந்தா.... அதிகபட்சமா 600 ரூபாய்க்குள்ளயே முடிஞ்சுடும்.

 ‘அது ஒரு ஆனந்தத் தொல்லை!’

மாலதி, (சாரதா டெய்லர்ஸ் மற்றும் பூஜா ஃபேஷன்ஸ், தி.நகர், சென்னை): ''நான் நிம்மதியா தீபாவளி கொண்டாடி 20 வருஷம் ஆகுது. கடை ஆரம்பிச்சு இருபது வருஷம் ஆகிடுச்சே! இப்படித்தான் தீபாவளி நெருக்கத் துல கடைக்கு வந்த ஒரு கஸ்டமர், 'என்ன, பிளவுஸை தைச்சுட்டீங்களா?'னு கேட்டாங்க. கடையில இருந்த பொண்ணு, 'நீங்க எந்தத் துணியையும் இங்க கொடுக்கலையே...'னு சொல்ல, 'ரெண்டு நாளைக்கு முன்ன வந்தேனே... கிஃப்டா வந்த சேலையைக் கொடுத்து, அதுல இருக்கற துணியை வெச்சு ஜாக்கெட் தைக்கச் சொன்னேனே. நீங்கதான் வாங்கி வெச்சீங்க. அவசரம்னுதானே உங்ககிட்ட வந்தேன். மிஸ் ஆகியிருந்தா நீங்கதான் பொறுப்பு'னு சொன்னாங்க. 'ரெண்டு நாளைக்கு முன்ன நீங்க வந்தது உண்மை. ஆனா, துணி எதையும் கொடுக்கலையே'னு கடை பொண்ணு திருப்பிச் சொல்ல... ஒரே சண்டையா போச்சு.

கடை முழுக்க தேடியும் கிடைக்கல. வேற வழியில்லாம, 'சேலைக்கான பணத்தை தவணை முறையில திருப்பிக் கொடுக்கிறேன்'னு சொல்லி, அந்த மாசத்துக்கான பணத்தை கையோட கொடுத்துவிட்டேன். கொஞ்ச நாள் கழிச்சு வந்தவங்க, பணத்தைத் திருப்பி கொடுத்துட்டு, 'நான்தான் மறதியில கையோட வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிட்டேன். ஸாரி'னு சொல்லிட்டுப் போனாங்க. பொதுவா... என்கிட்ட வரக்கூடிய கஸ்டர்மர்கள் எக்காரணத்தைக் கொண்டும் அவசர அவசரமா தைச்சுத் தர சொல்லமாட்டாங்க. நானும் அப்படிப்பட்ட ஆர்டர்கள ஏத்துக்கவே மாட்டேன்.''

மாலதி தந்த டிப்ஸ்: ஒரே நேரத்தில் நிறைய டிரெஸ்களை மொத்தமா தைக்கறதவிட, மாதம் ஒண்ணு, ரெண்டுனு தைச்சுக்கிட்டா... புதுசு புதுசா அணியுற உணர்வு தொடர்ந்து கிடைச்சுட்டே இருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism