Published:Updated:

ஒரு டீ... ரெண்டு பிஸ்கட்.... நாலு 'கடி'!

ஒரு டீ... ரெண்டு பிஸ்கட்.... நாலு 'கடி'!

ஒரு டீ... ரெண்டு பிஸ்கட்.... நாலு 'கடி'!

''நான்-ஸ்டாப் மழையில நனைஞ்சு போயிருக்கற தமிழக மக்களே... இப்போ எங்க மொக்கை மழையில கொஞ்சம் நனைய வாரீர் வாரீர் வாரீர்!''னு அழைச்சாங்க சென்னை, எத்திராஜ் கல்லூரியோட கடி ஜோக்ஸ் பொதுக்குழு கேர்ள்ஸ்!

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அம்ப்ரல்லா ரெடியா..?!

 ''மாப்ள... என் ஜாதகப்படி நான் பெரிய ஆளா வருவேனாம்டா!''

''இப்பவாச்சும் புரியுதா மச்சி... நான் ஏன் ஜாதகத்தை நம்பறதில்லைனு!''

 ''பக்கத்து கிளாஸ்ல நம்ம புரொபசர் ஜோக் அடிக்கறார்னு நினைக்கிறேன்...''

''எப்படிடா சொல்ற?!''

''பசங்க எல்லாம் ரொம்ப சைலன்டா இருக்காங்க... நோட் பண்ணியா..?!''

 ''இந்த விடுமுறையில பிறர் சந்தோஷப்படும்படி யாராச்சும் எதாச்சும் பண்ணீங்களா..? அதை கிளாஸ்ல பகிர்ந்துக்கோங்க...''

ஒரு டீ... ரெண்டு பிஸ்கட்.... நாலு 'கடி'!

''சார்... லீவுக்கு நான் எங்க மாமா வீட்டுக்குப் போயிருந்தேன். மாமாவுக்கு ஒரே ஒரு பொண்ணு. லீவ் முடிஞ்சு நான் கிளம்பினப்போ என் மாமாவும், அத்தையும் ரொம்ம்ம்ம்ப சந்தோஷப்பட்டாங்க! நான் என் கடமையத்தானே சார் செஞ்சேன்..?!''

 ''அந்தக் காலத்துலேயே பத்திரிகையை ஆதரிச்சவர் யார் தெரியுமா?''

'' 'சந்தா’ சாகிப்!''

ஆசிரியர்: தம்பி... 'வாய்மை’ என்றால் என்ன..?

மாணவன்: அது வந்து... அது வந்து... லிப்ஸ்டிக் அய்யா...!

ஒரு டீ... ரெண்டு பிஸ்கட்.... நாலு 'கடி'!

கணவன்: என்ன புக் படிக்கிறே..?

மனைவி: பிளட் பத்தின புக் படிக்கிறேன்!

கணவன்: ஏன்?

மனைவி: டாக்டர் சொல்லிட்டார், நாளைக்கு எனக்கு 'பிளட் டெஸ்ட்'டாம்!

 பாய்ஸின் புலம்பல்ஸ்...

ஒரு டீ... ரெண்டு பிஸ்கட்.... நாலு 'கடி'!

நீங்க ராக்கி கட்டி ரக்ஷாபந்தன் கொண்டாடும் போது...

நாங்க ஏன் தாலி கட்டி 'வெட்டிங் டே’ கொண்டாடக் கூடாது...

பணிப்பெண்: சார், உங்களுக்கு எந்த மாதிரி செருப்பு வேணும்?

ஹீரோ: அப்படி கேளுங்க... 24 மணி நேரமும் நான் நடக்கணும். நல்லா நடக்கணும், வருஷம் புல்லா நடக்கணும்... பட்... செருப்பு தேயாம இருக்கணும்.

நம்ம லேடி சந்தானம்: அதுக்கு நீ செருப்ப கையில் எடுத்துட்டுதான் நடக்கணும்.

 ''டார்லிங்... இந்த டிரெஸ் எனக்கு அழகா இருக்கா..?''

''ம்!''

''இந்த ஹேர் ஸ்டைல் எனக்கு சூட் ஆகுதா..?''

''ம்!''

ஒரு டீ... ரெண்டு பிஸ்கட்.... நாலு 'கடி'!

''நேத்துதான் வாங்கினேன்... இந்த கம்மல் அழகா இருக்கா..?''

''ம்!''

''என் கண்ணாடி வளையல் சலசலக்கற சத்தம் பிடிச்சிருக்கா..?''

''ம்!''

''நீங்க என்ன ரொம்பத்தான் வர்ணிக்கறீங்க... வெட்கமா இருக்கு எனக்கு!''

தொகுப்பு: வே.கிருஷ்ணவேணி

படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்