பிரீமியம் ஸ்டோரி

 'கொஞ்சம் தேநீர்... நிறைய அரட்டை... வருக!’

- பொயட்டிக்கலா அப்பாயின்ட்மென்ட் கேட்டோம், சென்னை எத்திராஜ் காலேஜ் கேர்ள்ஸ்கிட்ட!

''டீயில சர்க்கரையும், அரட்டையில சந்தோஷமும் தூக்கலா இருக்கணும்னு.!''னு சொன்னபடி கலகலனு ஆஜர் ஆனாங்க பொண்ணுங்க!

So ல்லு Ma க்கா Soல்லு
##~##

''அதாவது... அழகு ராணிகளே''னு ஆரம்பிச்சு நாம 'சொல்லு மக்கா சொல்லு’ விதிகளை விளக்க, ''அதுக்கு முன்னால இங்க ஒரு பஞ்சாயத்து இருக்கு!''னு கொதிப்போட வந்தாங்க அனுஷ்யா.

''இருக்கற ஆக்டர்ஸ்லயே ஹேண்ட்ஸம் பேச்சுலர், கார்த்தி. இப்போ அவரும் குடும்பஸ்தனாயிட்டாரு. இந்தக் கொடுமைய எங்க போய் சொல்றது?''னு புலம்பினவங்க, ''சரி... ஹீரோயின்ஸ் எல்லாரும் லேட்டாதானே கல்யாணம் பண்ணிக்கறாங்க. இந்த ஹீரோஸ் மட்டும் ஏம்ப்பா சீக்கிரமே செட்டில் ஆகணும்னு நினைக்கறாங்க. இனி ஹீரோஸும் லேட்டாதான் கல்யாணம் பண்ணிக்கணும்னு இந்த கேர்ள்ஸ் கூட்டுக்குழு தீர்மானம் நிறைவேற்றுது!''னு மைக் இல்லாமலே பிளிற,

''யெஸ்ஸ்ஸ்!''னு கோரஸ் கொடுத்தாங்க கேர்ள்ஸ்!

''ஓவரா வாயடிக்கற உங்களோட 'வாய்'மைக்கு சவாலா முதல் ரவுண்ட்!''னு நாம அறிவிக்க,

''வாய் மையா..? யூ மீன் லிப்ஸ்டிக்..?''னு கேட்டுட்டு நிஷாந்தினி கெக்க பிக்கே ஆக...

''ஜோக் அடிச்சுட்டாங்களாமாம்!''னு அவங்களை அவுட் ஆக்கினாங்க கலைஸ்ரீ.

'' 'ஏழைக் கிழவன் வாழைப் பழத்தோல் வழுக்கி விழ, உதவிக்குப் போன வாலிபர் உயிர் ஊசல்’ - இந்த டங்க் டிவிஸ்டரை ஆறு முறை சொல்லணும்!''னு நாம சொல்ல,

''கடினமா இல்ல... ஆனா, சுலபமாவும் இல்ல. சரி முயற்சிப்போம்..!''னு முன்னால வந்தாங்க சஹானா. அவங்களைத் தொடர்ந்து பட்டாளத்துல ஒவ்வொருத்தரா களத்துல இறங்க, வாழைப்பழம் பஞ்சாமிர்தமானதுதான் மிச்சம். பகீர் பகீரத முயற்சிகளுக்கு அப்புறம்... ஒரு வழியா ஐந்து முறை சரியா சொல்லி, ஆறாவது முறையில தப்பு பண்ணினாலும் பத்து மார்க் வாங்கினாங்க ராமலட்சுமி!

So ல்லு Ma க்கா Soல்லு

''அடுத்த ரவுண்ட்ல அசர வைக்கறோம் பாருங்க...''னு தயாரான பொண்ணுங்ககிட்ட,

''ஒரு பாடலோட முடிவு... அடுத்த பாடலோட ஆரம்பமா வர்ற மாதிரி அமைஞ்சுருக்கற தமிழ் பாமாலை 'அபிராமி அந்தாதி’யோட முதல் வரி என்ன..?''னு கேட்க,

''அதெல்லாம் யாருக்குத் தெரியும்..?''னு அரண்டாங்க கேர்ள்ஸ்.

''சரி... 'களவாணி’ படத்துல வர்ற 'ஒரு முறை ஒரு முறை’ பாட்டோட 'லீட்’ என்ன..?''னு கேட்க,

''ஆங்... இப்படிக் கேட்டாதானே பதில் சொல்ல முடியும்!''னு குஷியானாங்க பொண்ணுங்க.

''டம்ம டும்மா டம்ம டம்ம டும்மா...''னு வைஷ்ணவி தகர டப்பா சவுண்ட்ல தப்பா அலர,

''டம்ம டும்மா டம்ம டம்ம டும்மா.. டம்ம டும்மா டம்ம டா டும்மா... டம்ம டும்மா டம்ம டம்ம டும்மா... டம்மா டும்மா ஹோய்...''னு சரியா டமுக்கடிச்சு, பத்து மார்க் வாங்கினாங்க பானுப்ரியா.

''நீங்க மட்டும்தான் கேள்வி கேப்பீங்களா. நாங்களும் கேப்போம்!''னு வெரப்பா வந்தாங்க சஹானா. சபை சைலன்ட்டாக... ''ஏ டு இஸட் வரைக்கும் இருபத்தி ஆறு எழுத்துக் களும் வர்ற மாதிரி ஒரு ஆங்கில வாக்கியம் சொல்லுங்க பார்க்கலாம்...''னு சொல்ல, ''கேள்வியே ஆச்சர்யமா இருக்கேனு''னு ஆர்வமானாங்க ப்ரீத்தி. ஆனா எல்லாருமே 'தெரியல’னு சரண்டர் ஆக, The quick brown fox jumps over the lazy dog!’னு சொன்ன சஹானா முகத்துல பெருமை... பெருமை... பெருமையோ பெருமை!

''இப்படியெல்லாம் ஆட்டைய திசை திருப்பினா... கடுமையான பெனால்டி இருக்கும்''னு சஹானாவை மியூட் பண்ணின நாம, கடைசி ரவுண்டுக்கு வந்தோம்.

'' 'மைக்’ மோகன் பேக்கரி ஷாப் போறார். 'மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேக்கு தா கேக்கு தா’னு பாடியே கேக் கேட்கறார்’ - இந்த (ஆர்யபட்டா காலத்து) ஜோக்கை அஞ்சு நிமிஷத்துல யாரு மொபைல்ல டைப் பண்ணிட்டு வராங்க பார்ப்போம்...''னு நாம நாட்டாமை சேர்ல உட்கார, ரண்டக்க ரண்டக்க ரகளை ஸ்டாப் ஆகி மௌனராகம் பாடினாங்க பொண்ணுங்க.

‘kekutha, kekutha’னு டைப் பண்ணின ரக்ஷனாவை நாம ரிஜெக்ட் பண்ண, ‘cake tha, cake tha’னு டைப் பண்ணிட்டு வந்த வைஷ்ணவி யையும் நாம எலிமினேட் பண்ண, கடைசியில, ‘cake ku tha cake ku tha’னு மிகச் சரியா(!) டைப் பண்ணி தான் ஒரு எஸ்.எம்.எஸ். எக்ஸ்பர்ட்னு நிரூபிச்சாங்க ராமலட்சுமி!

''தெரியுமே... ராமலட்சுமிக்கு முதல் பரிசா காலேஜ் பேக், பானுப்ரியாவுக்கு இரண்டாவது பரிசா ஹாட் சாஸ் பேன், எங்க எல்லாருக்கும் பார்டிசிபேஷன் பிரைஸா பெர்ஃப்யூம்! சரியா?''னு கேட்டு அசரடிச்சாங்க ரக்ஷனா.

''ஃப்ரீயா விடுடி... பார்லிமென்ட்லயே பார்டிசிபேஷன் மட்டும்தான் நடக்குது!''னு பஞ்ச் வச்சு முடிச்சாங்க ரூபா!

- க.நாகப்பன்
படங்கள்: அ.ரஞ்சித்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு