Published:Updated:

எட்டு மொழிகளில் அசத்தும் சிட்டு !

சோஃபியா....

எட்டு மொழிகளில் அசத்தும் சிட்டு !

'இரண்டு மொழிகளை அறிந்த ஒருவன், இரண்டு பேருக்குச் சமம்’ என்பார்கள். ஆனால், இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் சி, சி , ஜாவா... இவற்றைத் தாண்டி மாணவிகள் பலருக்கு தங்கள் தாய்மொழியே தெரிவது இல்லை!

இவர்களிடமிருந்து அதிகம் வித்தியாசப்படுகிறார் சோஃபியா ரபேல். தமிழ், ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி, மலையாளம், மராத்தி, கன்னடம் என்ற ஏழு மொழிகளோடு கொரிய மொழியையும் கற்று, கொஞ்சும் குரலில் பேசும் இவர், இந்த எட்டு மொழிகளிலும் பேச்சோடு மட்டுமில்லாமல் எழுதுவது, படிப்பது, பாடுவது என எல்லாவற்றிலும் அசத்துகிறார். இந்த சோஃபியா... சென்னை, லயோலா கல்லூரியில் எம்.எஸ்சி., ஃபுட்       கெமிஸ்ட்ரி இறுதியாண்டு படிக்கும் இருபத்திரண்டு வயது மாணவி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''எப்படி இப்படி?!'' என்று நாம் ஆச்சர்யமாகக் கேட்க, 'ழ’கர சுத்தமான அழகுத் தமிழில் பேசினார் சோஃபியா.

''அப்பாவுக்கு சொந்த ஊர் நெய்வேலி. அம்மாவுக்கு சிதம்பரம். நான் சிதம்பரத்துலதான் பிறந்தேன். பொறந்த நாலு மாசத்துல அப்பாவுக்கு டிரான்ஸ்ஃபர் கிடைச்சதால குஜராத்துக்குப் போயிட்டோம். அங்க குஜராத்தி கத்துக்கிட்டேன்.

##~## அப்புறம் சண்டிகருக்கு வந்தப்போ, ஸ்கூல் அடிமிஷனுக்கு இந்தி தேவையா இருந்தது. என் அம்மா அவசரமா இந்தி கத்துக்கிட்டு, எனக்கும் சொல்லிக் கொடுத்து ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட்ல என்னை சேர்த்தாங்க. 2 வரைக்கும் ஃபர்ஸ்ட் லேங்வேஜ் இந்தி, செகண்ட் லேங்வேஜ் பஞ்சாபினு இங்கிலீஷ் மீடியத்துல படிச்சேன்.

பெங்களூரு கிறிஸ்து ஜெயந்தி காலேஜ்ல பி.எஸ்சி. பயோடெக்னாலஜி சேர்ந்தேன். அங்கே ஹாஸ்டல்ல தங்கி படிச்சப்போ நாலு மொழிகள்லயும் நான் விடற 'ஜூ’-வைப் பார்த்துட்டு, எல்லா ஸ்டேட் பொண்ணுங்களும் எனக்கு ஃப்ரெண்ட்ஸ் ஆனாங்க. அப்படியே அவங்ககிட்ட மலையாளம், கன்னடம், மராத்தியும் கத்துக்கிட்டேன். 'ச்சும்மா ஃபன்’னுக்காகனு இல்லாம, புக்ஸ் வாங்கி இந்த ஏழு மொழிகளையும் பேச, எழுத, படிக்கனு இன்னும் ஆழமா கத்துக்கிட்டதுதான் இதுல ஸ்பெஷல்!

மாநில மொழிகள்கூட ஒரு சர்வதேச மொழியும் கத்துக்கலாமேனு, கொரியன் மொழியும் கிளாஸ் போய் கத்துக்கிட்டேன்! இப்போ யாமறிந்த மொழிகள் எட்டு!'' என்று பெருமையாக சொல்லும் சோஃபியா, இந்த மொழி அறிவால் தனக்குக் கிடைத்திருப்பது மிகுந்த தன்னம்பிக்கை என்கிறார்!  

''இந்த லாங்குவேஜ் ஸ்கில்லாலயே எனக்கு நண்பர்கள் வட்டம் ரொம்ப பெருசானதால, யார்கிட்டயும் தயக்கமில்லாம என்னால் பேச, பழக முடியுது. அதுவே மேடைகள்ல பேசற தைரியத்தையும், தன்னம்பிக்கையையும், பேச்சுப் போட்டிகள்ல 'பெஸ்ட் டிபேட்டர்’ அவார்டுகளையும் வாங்கித் தந்தது. காலேஜ் முழுக்க நான் பிரபலங்கறதால சொஸைட்டி இம்ப்ளிமென்ட்ல பங்கெடுத்துக்கிட்டேன். பர்சனாலிட்டி கன்டெஸ்ட்ல எப்பவும் நான்தான் ஃபர்ஸ்ட்.

இந்த ஆர்வம் இன்னும் அதிகமாக பரதநாட்டியம், சங்கீதம், கீ-போர்டு, பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் எழுதுறது, வீதி நாடகம், மேடை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குறதுனு எல்லாத்துலயுமே கலக்க ஆரம்பிச்சேன். பல மொழிகள் தெரியுங்கறதால டி.வி. காம்பியரிங், இன்ஃபோசிஸ் வேலை, கால்சென்டர் வேலைனு நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. ஆனா, படிப்பை முடிச்சுட்டு ஃபுட் இண்டர்ஸ்ட்ரியில வேலை செய்யணும்ங்கறதுதான் என்னோட விருப்பம்!'' எனும் சோஃபியாவுக்கு கல்லூரியில் செல்லப் பெயர், 'ஆல் இண்டியா ரேடியோ!’

கதம்ப மொழி கேர்ளிடம் விடைபெற்றோம்... குட் பை, வணக்கம், நமஸ்கார்!

- இரா.மன்னர் மன்னன்,
க.நாகப்பன்
படம்: ச.இரா.ஸ்ரீதர்