Published:Updated:

"எப்பவும் என்கேஜ்டாவே இருங்க... லைஃப் இந்த்ரஸ்டா இருக்கும் !"

ஜில் ஜில் காஷ்மீர்... தில் தில் காவ்யா !

தென்றல் வீசும் தேனியில் இருந்து, ஜில் ஜில் காஷ்மீருக்கு 'தில்’ ட்ரிப் அடித்திருக்கிறார் காவ்யா!

"எப்பவும் என்கேஜ்டாவே இருங்க... லைஃப் இந்த்ரஸ்டா இருக்கும் !"
##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'இது, காலேஜ் டூரோ... ஃபேமிலி ட்ரிப்போ... இல்லீங்க. காடு, மலை, பனியில ட்ரக்கிங், ரிவர் கிராஸ்ஸிங், மவுன்டன் க்ளைம்பிங்னு ரிஸ்க்கி ப்ளஸ் ஜாலி ட்ரிப்'' என்று குரலில் குதூகலம்  கூட்டுகிறார் தேனி, நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பி.காம் மாணவியான காவ்யா.

''சின்ன வயசுல இருந்தே சமூகசேவையில எனக்கு ஆர்வம். அதனாலதான் காலேஜ்

"எப்பவும் என்கேஜ்டாவே இருங்க... லைஃப் இந்த்ரஸ்டா இருக்கும் !"

ல என்.எஸ்.எஸ்-ல சேர்ந்தேன். இந்தியா முழுக்க சிறப்பான ஸ்டூடன்ட்ஸை மாநில வாரியா ஸ்பெஷல் கேம்ப்புக்கு தேர்வு செய்வாங்க. தமிழ்நாட்டுல பல்வேறு கல்லூரிகள்ல இருந்து தேர்வான 20 ஸ்டூடன்ட்ஸ்ல (அதில் 10 பேர் பெண்கள்), நானும் ஒருத்தி! சோஷியல் சர்வீஸ் மட்டுமில்லாம கல்ச்சுரல்ஸ், லீடர்ஷிப், சேவை மனப்பான்மை, படிப்புனு எல்லா விஷயத்துலயும் நான் பெஸ்ட் பெர்ஃபார்மரா இருந்ததால... கிடைச்ச வாய்ப்பு அது! ஆனா, 'அவ்ளோ தூரமெல்லாம் அனுப்ப முடியாது. அதுவும் காஷ்மீர்னா... நோ'னு சொல்லிட்டாங்க வீட்டுல. ரெண்டு நாள் சாப்பிடாம அடம் பிடிச்சுதான் கன்வின்ஸ் பண்ணினேன் (கேர்ள்ஸ், நோட் பண்ணுங்கப்பா... நோட் பண்ணுங்கப்பா!)'' என்று தொடர்ந்தவரின் வார்த்தைகளில் நாமும் பயணித்தோம் காஷ்மீருக்கு!

''பாட்னி டாப், சனாசர் மலைப்பகுதிகள்ல கேம்ப் நடந்துச்சு. தமிழ்நாட்டு ஸ்டூடன்ட்ஸ் 20 பேர், பயிற்சி தர மிலிட்டரி ஆபீஸர்ஸ் 5 பேர், உதவிக்கு 3 பேர்னு மொத்தம் 28 பேர். மவுன்டன் க்ளைம்பிங்ல கயித்தைப் பிடிச்சுக்கிட்டு மேல ஏறும்போது ஒரு ஆர்வத்துல கடகடனு ஏறிட்டு, உச்சியில இருந்து கீழ பார்த்தா... இதயம் படபடனு துடிக்குது! தெரிஞ்ச சாமி பெயரையெல்லாம் சொல்லிட்டேதான் கீழ இறங்கினேன். அடுத்ததா, ரிவர் கிராஸிங்... ஆத்தோட ஒரு கரையில இருந்து இன்னொரு கரைக்கு, கயித்தைப் பிடிச்சு தொங்கிகிட்டே போகணும்! கீழ விழுந்தா... அந்த ஐஸ் ஆத்துல விறைச்சிப் போயிடுவோம். பசங்க தைரியமா களத்துல இறங்கிட, நடுங்கி நின்ன நாங்க, 'இதுக்காகத்தானே தேர்வாகி கேம்புக்கு வந்திருக்கோம்’னு எங்களுக்குள்ளயே ஒரு கூட்டுத் தீர்மானம் போட்டு பூஸ்டை ஏத்திக்கிட்டு இறங்கினோம்... கலக்கினோம்!

"எப்பவும் என்கேஜ்டாவே இருங்க... லைஃப் இந்த்ரஸ்டா இருக்கும் !"

இப்படி ஏகப்பட்ட பயிற்சி. 'மத்த எல்லா ஸ்டேட் ஸ்டூடன்ட்ஸைவிட தமிழ்நாடு ஸ்டூடன்ட்ஸ் தைரியமா செய்தீங்க!’னு மிலிட்டரி ஆபீஸர்ஸ் பாராட்டினதை மறக்கவே முடியாது!'' எனும் காவ்யா,

''எங்களால பத்து நாள்கூட அந்த குளிரைத் தாங்க முடியல. ஆனா, நம்ம ராணுவ வீரர்கள் 110 கோடி மக்களைப் பாதுகாக்கறதுக்காக வருஷம் முழுக்க அங்கேயே இருந்து போராடறாங்க. அவங்களுக்கெல்லாம் பணிவான சல்யூட்!'' என்று சிலிர்த்தார்.

காவ்யாவும் சல்யூட் அடிக்கப்பட வேண்டியவர்தான். பரதம், வெஸ்டர்ன், ஃபோல்க் என்று பல கோப்பைகளை கைவசம் வைத்திருக்கும் இவர், யாரும் அழைப்பு வைக்காமலே... தன்னார்வத்தின் காரணமாக தொண்டு நிறுவனங்களில் ஆஜராகிவிடுகிறார். குழந்தைகள், முதியவர்களுக்கு விடுமுறை நாட்களில் சேவை செய்வது, எய்ட்ஸ் விழிப்பு உணர்வு நாடகம் போடுவது என சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதோடு, விடுமுறை நாட்களில் சாலைகளில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியையும் செய்கிறார்!

''எப்பவும் என்கேஜ்டாவே இருங்க... லைஃப் இன்ட்ரஸ்டா இருக்கும்!'' என்கிறார் காவ்யா, துள்ளும் டீன் மனதுடன்!

- மோ.கிஷோர்குமார்,
ஸ்ரீ.நித்தீஷ்
படங்கள்: சொ.பாலசுப்பிரமணியம்