ஒவ்வொன்றுக்கும் பரிசு:

200

'பாட்டிக்கு டான்ஸ் கிளாஸ்!’

மருமகளின் பெற்றோர், எங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது, ''பாரதிக் குட்டிக்கு ஸ்கூல் லீவுதானே... நாங்க ஊருக்குக் கூப்பிட்டுப் போறோமே'' என்று சொன்னதைக் கேட்டு, பேத்திக்கு குஷியாகிவிட்டது. ''ஸ்கூல் லீவுதான். ஆனா, அவளுக்கு பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ்லாம் இருக்கே'' என்றேன் நான். அதனால், அவள் ஊருக்குப் போகவில்லை. அடுத்த வாரம் மற்றொரு மகன் வீட்டுக்கு நான் புறப்பட்டேன். உடனே பாரதி, ''ம்... ஜாலியா கிளம்பிட்டே... உன்னையும் டான்ஸ் கிளாஸ்ல சேர்த்தாத்தான் சரிப்படும்!'' என்று சீற... 'குட்டிக்கு கோபத்தைப் பாரு’ என்று வியந்ததுடன், எழுபது வயதைக் கடந்த நான், டான்ஸ் கற்றுக் கொள்வதை கற்பனை செய்து சிரித்துத் தீர்த்தேன்.

- எஸ்.ராஜம், வில்லிவாக்கம்

'வாங்க... பெக்கர் சார் வாங்க!’

என் தங்கை மகளின் வயது ஐந்து. படுசுட்டி. குழந்தையிலிருந்தே நல்ல பண்புகளை அவளுக்கு சொல்லிக் கொடுக்க விரும்பிய தாய், பலவிதமான அறிவுரைகளை போதித்தாள். குழந்தையும் ஆர்வமுடன் கற்றுக்கொண்டது. அதில் ஒன்று... 'வீட்டுக்கு யார் வந்தாலும் அவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்று, உள்ளே வந்து உட்காரச் சொல்லணும்’!

ஒரு நாள் பிச்சைக்காரர் வந்து நிற்க... தாய் ஏதோ வேலையாக உள்ளே இருக்க, '’வாங்க சார்... வாங்க! உள்ளே வந்து உட்காருங்க. அம்மா ஏதோ வேலையா இருக்காங்க'' என்று சொன்னதோடு நிற்காமல்... உள்ளே போய் தாயை அழைத்து வர, வந்து நிற்பவரைக் கண்ட தாய், 'சிரிப்பதா... இல்லை... குழந்தையைக் கடிந்து கொள்வதா’ என்று தவித்துப் போனாள்.

- சாவித்திரி விஸ்வநாதன், போரூர்

குழந்தைக் காவலன்!

என்னுடைய மூன்று வயது பேரனும், ஒரு வயது பேத்தியும் பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது வாயில் சிறிய சாக்பீஸ் துண்டை போட்டுக் கொண்டாள் பேத்தி. உடனே அதை எடுத்து வெளியே போட்டுவிட்டு, ''பாப்பாவை ஜாக்கிரதையா பாத்துக்கோ. அவ வாயில ஏதாவது போட்டுக்கிட்டா உடனே என்கிட்ட வந்து சொல்லு'’ என்று பேரனிடம் சொல்லிவிட்டு சமையலறைக்குச் சென்றுவிட்டேன். பத்து நிமிடங்கள் கழித்து என்னுடைய பேரன் ஓடி வந்து, ''பாட்டி, பாப்பா வாயில பல் எடுத்து போட்டுனு இருக்கா. இப்ப அவ வாயில பல் இருக்குது!'' என்று அவசரம் அவசரமாகச் சொல்ல... அங்கிருந்த அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தோம்.

- ஜெயலட்சுமி வசந்தராஜன், கல்லாவி