நம்மில் பலருக்கும் 'எப்படியாவது சினிமா உலகத்தில் நுழைந்து சாதிக்க வேண்டும்’ என்கிற செல்லுலாய்ட் கனவு இருக்கும். அந்தக் கனவு நிஜமாக, நம்மை தயார்படுத்திக் கொள்ள சில படிப்புகள் இருக்கின்றன. தனியார் கல்லூரிகளில் இத்தகைய படிப்பில் சேர்ந்தால் லட்சங்களில் செலவாகும் சூழ்நிலையில்... குறைந்த கட்டணத்தில், உதவித் தொகையுடன் இத்தகைய படிப்புகளை அரசே வழங்கி வருகிறது என்றால், சந்தோஷ சங்கதிதானே!

ஸ்டார்ட்... கேமரா... ஆக்ஷன்!

பலருடைய திரைத்துறை கனவையும் நிஜமாக்கிய பெருமை கொண்டது, சென்னையில் உள்ள 'எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்’. இயக்குநர் ஆபாவாணன், கேமராமேன் பி.சி.ஸ்ரீராம், நடிகை சுஹாசினி... என்று பல ஜாம்பாவன்கள் இங்கே பட்டை தீட்டப்பட்டவர்கள்தான். இங்கே மொத்தம் ஏழு பிரிவுகளில் நடத்தப்படும் மூன்றாண்டு டிப்ளோமா படிப்புகளில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்தால்... இந்த வரிசையில் உங்களுடைய பெயரும் நாளை இடம் பெறக்கூடும்!

1. சினிமோட்டோகிராஃபி, 2. ஃபிலிம் பிராசஸிங்

கல்வித் தகுதி: பன்னிரண்டாம் வகுப்பு (இயற்பியல் மற்றும் வேதியியல் பாடப்பிரிவு அல்லது தொழிற்சார்ந்த பாடப் பிரிவில் புகைப்படக் கலையை சிறப்புப் பாடமாகக் கொண்டது), இதற்கு இணையான படிப்பு, டிப்ளோமா இன் எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், டிப்ளோமா இன் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் இதில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி.

3. சவுண்ட் ரெக்கார்டிங் அண்ட் சவுண்ட் இன்ஜினீயரிங்

கல்வித் தகுதி: பன்னிரண்டாம் வகுப்பு (இயற்பியல் மற்றும் வேதியியல் பாடப்பிரிவு அல்லது தொழிற்சார்ந்த பாடப் பிரிவில் ரேடியோ மற்றும் டி.வி அல்லது வீட்டு உபயோக எலெக்ட்ரானிக்ஸ் சாதனம் பற்றிய சிறப்புப் பாடம் கொண்டது), இதற்கு இணையான படிப்பு, டிப்ளோமா இன் எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், டிப்ளோமா இன் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் இதில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி.

4. டைரக்ஷன் ஸ்கிரீன் ப்ளே ரைட்டிங் அண்ட் டி.வி. புரொடக்ஷன்

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து ஏதாவது ஒரு பட்டம்.

5. ஃபிலிம் எடிட்டிங் அண்ட் டி.வி. புரொடக்ஷன்

கல்வித் தகுதி: பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி.

அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் வயது வரம்பு: எஸ்.சி/எஸ்.டி - 24 வயதுக்குள்.

மற்ற அனைத்துப் பிரிவினர் - 22 வயதுக்குள்.

டைரக்ஷன், ஸ்க்ரீன்பிளே அண்ட் டி.வி. புரொடக்ஷன் படிப்புக்கு: எஸ்.சி/எஸ்.டி- 26 வயதுக்குள்.

மற்ற அனைத்துப் பிரிவினர்- 24 வயதுக்குள்.

முதுகலை டிப்ளோமா படிப்புகள்!

6. டிப்ளோமா இன் அனிமேஷன் அண்ட் மல்டி மீடியா டெக்னாலஜி, 7. டிப்ளோமா இன் 3டி அனிமேஷன் அண்ட் கிராஃபிக்ஸ் என இரு பிரிவுகளில் நடத்தப்படுகின்றன.

கல்வித் தகுதி: ஃபைன் ஆர்ட்ஸ், விஷ§வல் கம்யூனிகேஷன், மாஸ் கம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக் மீடியா, அனிமேஷன், விஷ§வல் எஃபெக்ட்ஸ் என ஏதாவதொரு இளங்கலை பட்டம் அல்லது எம்.ஜி.ஆர். திரைப் படக்கல்லூரியில் பெற்ற ஏதாவது ஒரு டிப்ளோமா.

வயது வரம்பு: எஸ்.சி/எஸ்.டி - 26 வயதுக்குள்.

மற்ற அனைத்துப் பிரிவினர் - 24 வயதுக்குள்.

மொத்த படிப்புகளுக்கும் குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி:

எஸ்.சி / எஸ்.டி - தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட / சீர்மரபினர் - 40% மதிப்பெண்கள்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பு - 45% மதிப்பெண்கள்.

பொதுப்பிரிவினர் - 50% மதிபெண்கள்.

ஆண்டு கட்டணம்:

எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 3,500 ரூபாய் (கல்விக் கட்டணம் இல்லை).

பிற பிரிவினர்: 18 ஆயிரத்து 500 ரூபாய்.

விடுதியில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்களே இருக்கின்றன. இதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆண்டுதோறும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் சமயத்தில் இப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். மதிப்பெண்கள் மட்டுமல்லாது, சினிமா துறையில் உள்ள ஆர்வம், திறமையை அறிவதற்கான எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்படும். ஒவ்வொரு கோர்ஸுக்கும் 14 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இதில் திரைத்துறையைச் சேர்ந்தவர்களின் வாரிசுக்கு ஓரிடமும், வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டைச் சேர்ந்த மாணவருக்கு ஓரிடமும் வழங்கப்படும்.

ஹைலைட்ஸ்!

இப்படிப்புகளில், முதலாம் ஆண்டு முழுவதும் கதை, திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு பயிற்சிகள் தரப்படும். அடுத்த இரண்டு ஆண்டுகளும், தனித்தனியாக துறை சார்ந்த பாடங்கள் முழுமையாகக் கற்றுத் தரப்படும்.

வாரம்தோறும் சினிமாத் துறையைச் சார்ந்த ஒருவர், மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதுடன், சந்தேகங்களையும் தீர்த்து வைப்பார். தேவையான உபகரணங்கள், நூலகம், திரையரங்கம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இங்கே இருக்கின்றன.

தொடர்புக்கு : எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், சி.ஐ.டி. வளாகம், தரமணி, சென்னை. போன்: 044 - 2254 2212. இணையதளம்: http://www.tn.gov.in/miscellaneous/mgrinstitute.html

- சா.வடிவரசு, படங்கள்: க.பாலாஜி