Published:Updated:

வாங்க... அழகாகலாம்!

கர்லிங் ஹேர்ஸ்டைல்

வாங்க... அழகாகலாம்!

கர்லிங் ஹேர்ஸ்டைல்

Published:Updated:
##~##

 'கர்லிங் ஹேர்' விஷயத்தில் கல்லூரிப் பெண்களுக்கு எப்போதுமே அதீத கிரேஸ் உண்டு. பர்மனென்ட்டாக வேண்டாம் என்பவர் களுக்காக, ஒரு நாள் மட்டுமே தாங்கக் கூடிய 'கர்லிங் ஹேர்ஸ்டைல்' பற்றி சொல்லித் தருகிறார்.... கோவை Profile beauty parlour’ பியூட்டி ஷியன் சத்யப்ரியா.

முதலில் 'கர்லிங் அயர்ன் ராடை' பத்து நிமிடம் சார்ஜ் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

படம் 1: தலை முடியை படத்தில் காட்டியிருப் பது போல நான்கு பாகமாக பிரித்து, சுருட்டி க்ளிப் கொண்டு மாட்டிவிடுங்கள்.

படம் 2: இனி, ஒரு பாகத்திலிருக்கும் முடியை 'கர்லிங் அயர்ன் ராட் கொண்டு ஸ்ட்ரெயிட்டன் செய்து, முடியின் நுனி பாகத்தை மட்டும் ராடில் சுருட்டி, சிறிது நேரம் வைத்திருந்தால்... முடி சுருண்டு வரும். இதுதான் கர்லிங். இப்படி மற்ற மூன்று பாகங்களையும் செய்து கொள்ள வேண்டும்.

வாங்க... அழகாகலாம்!

படம் 3: படத்தில் காட்டியுள்ளது போல உச்சந் தலை முடியை சீவி, மேடு போல அமைத்து தலையில் ஹேர்பின் கொண்டு குத்திவிடுங்கள்.

படம் 4: இடது பக்கம் இருக்கும் முடியை படத் தில் காட்டியுள்ளது போல சீவி, வலது பக்கத்தில் இருக்கும் கர்லிங் முடிகளோடு ஹேர்பின் கொண்டு இணைத்து விடுங்கள். இதேபோல வலது புறம் உள்ள முடியை, இடது புறத்தில் ஹேர்பின் கொண்டு குத்திவிடுங்கள்.

படம் 5: இனி நீங்கள் செய்த ஹேர்ஸ்டைல் ஷைனிங்காக இருப்பதற்காக 'ஷைனிங் ஸ்பிரே' அடித்துவிடுங்கள். முகத்தில் ஸ்டைலாக விழும் முடியை ஸ்ட்ரெயிட்னிங் செய்துவிடுங்கள்.

படம் 6: பிளாஸ்டிக் அல்லது நிஜ ரோஜா பூவை, வலது பக்க முடியில் ஹேர்பின் கொண்டு குத்திவிட்டால்... கர்லிங் ஹேர்ஸ்டைல் ரெடி.

வாங்க... அழகாகலாம்!

''இந்த ஹேர்ஸ்டைல் மாடர்ன், டிரெடிஷனல் என்று எல்லாவிதமான உடைகளுக்கும் பொருந்தும். இதை வீட்டில் செய்வதற்கு இருபது நிமிடங்களே போதும். பார்லரில் செய்து கொள்ள 500 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்'' என்று டிப்ஸுடன் முடித்தார் சத்யப்ரியா.

கட்டுரை, படங்கள்: ர.சதானந்த்

வாங்க... அழகாகலாம்!

வலுவான... நீளமான முடி வேண்டுமா?!

சென்னையை சேர்ந்த 'ஹெய்ன்ஸ் நியூட்ரி லைஃப் கிளினிக்'கில் 'கன்சல்டன்ட்'டாக இருக்கும் டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணனிடம் கேட்டபோது...

''உடம்பில் புரோட்டீன் சத்து குறைவாக இருப்பவர்களுக்கு முடி இழப்பு, முடி வலுவின்றி இருத்தல் போன்ற பிரச்னைகள் எல்லாம் கிளம்பும். புரோட்டீன் சத்து நிறைந்த கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, சுண்டல் வகைகள் போன்ற உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அசைவ உணவுகளில் மீன், முட்டை, சிக்கன் சேர்க்கலாம். அதிலும் மீன் சாப்பிடுபவர் களுக்கு தலைமுடி மிக அழகாகவும், வலுவாகவும் இருக்கும்.

இன்றைய டீன் ஏஜ் பெண்கள் தலைக்கு எண்ணெய் வைப்பதையே குற்றம் போல பார்க்கிறார்கள். இரவு நேரத்தில் எண்ணெய் வைத்து மறுநாள் காலையில் தலைக்கு குளித்தால்... உடலில் உள்ள உஷ்ணம் தணி யும். தலைமுடியும் ஆரோக்கியத்தோடு பொலிவாக இருக்கும்'' என்று அழகுக் குறிப்புகள் தந்தார்.

- அ.பார்வதி     

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism