Published:Updated:

குட்டீஸ் குறும்பு!

குட்டீஸ் குறும்பு!

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

குட்டீஸ் குறும்பு!

200

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 'ரெயின் அங்கிள்’!

ன் கணவர் தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரருகில் சென்ற ஏழு வயது பேத்தி, ''தாத்தா! டி.வி-யில ரெயின் அங்கிள் என்ன சொன்னார்...?'' என்று ஆர்வத்தோடு கேட்க... சற்றே குழப்பமாகிப் போனார். பிறகு, வானிலை அறிக்கை கூறும் ரமணனைத்தான் அப்படி குறிப்பிடுகிறாள் என்பதை புரிந்து கொண்டவர், ''அவர் என்ன சொன்னா உனக்கென்னமா..?'' என்று கேட்க... ''இல்லை தாத்தா...! அவர் நாளைக்கு மழை வரும்னு சொன்னா... மழை வரும்! எங்களுக்கு ஸ்கூல் லீவு விட்டுடுவாங்க! நானும் இப்போ ஹோம்வொர்க் எழுதாம விளையாடிட்டு, சாவகாசமா எழுதுவேன்!'' என்று அவள் உற்சாகமாய்ச் சொன்னதும்... இந்த காலத்து சுட்டிகளின் 'முன்கூட்டி திட்டமிடும் மூளை’யைக் கண்டு 'குபீர்’ என்று சிரித்துவிட்டோம்.

- ரா.திரிபுரசுந்தரி, திருக்கோவிலூர்

குட்டீஸ் குறும்பு!

'பகவான் என்ன லோடு மெஷினா?’

ன் பாட்டி, யாரிடம் பேசினாலும், ''பகவான் மேலே பாரத்தைப் போடு; எல்லாத்தையும் அவன் பார்த்துப்பான்'' என்று அடிக்கடி சொல்வது வழக்கம். இரண்டாம் வகுப்புப் படிக்கும் என் சித்தப்பா பையன், ''ஏன் பாட்டி... எப்போ பார்த்தாலும் பகவான் மேலேயே பாரத்தைப் போடச் சொல்றே? அவர் என்ன லோடு மெஷினா?’' எனக் கேட்க... குடும்பத்தோடு சிரித்தோம். பேரனின் புத்திசாலித்தனத்தை, பாட்டியும் வெகுவாக ரசிக்கத் தவறவில்லை.

குட்டீஸ் குறும்பு!

- எஸ்.நிர்மலா, மதுரை

ப்ளஸ் டூவுக்கு 12 இட்லி!

காலைவேளையில் அலுவலகத்துக்கு அவசர அவசரமாக நான் கிளம்பிக் கொண்டிருந்ததால்... ''சுப்ரஜாவுக்கு நான் டிபன் ஊட்டி விடுகிறேன் அக்கா'' என்று, என் கையிலிருந்த தட்டை ஆசையுடன் வாங்கிக் கொண்டாள் என் தங்கை. உணவை ஊட்டிக் கொண்டிருந்தவள், ''என்ன இவ்வளவு மெதுவாகவும், கம்மியாகவும் சாப்பிடுறே..? மூணாவது படிக்கும் நீ மூணு இட்லியாவது சாப்பிட வேண்டாமா..?'' என்றாள். அதற்கு என் மகள், ''ப்ளஸ் டூ படிக்கிற நீங்க ஏன் சித்தி பன்னிரண்டு இட்லி சாப்பிட மாட்டேங்கிறீங்க..?'' என்று பதில் கேள்வியைப் போட்டவுடன்... குழந்தையின் பேச்சுத் திறமையை வியந்து, ரசித்து சிரித்தோம்.

- சித்ரா சிவகுமார், பரங்கிப்பேட்டை