Published:Updated:

அ முதல் ஃ வரை! - 3

சவால்களுக்கு சல்யூட்! சா.வடிவரசு

##~##

 காவல்துறையில், காவலர் பணி பற்றியும் அதில் சேர்வதற்கான தகுதிகள் பற்றியும் கடந்த இதழில் பார்த்தோம். அதே துறையில் உள்ள மற்ற பணி வாய்ப்புகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.

பதவிகள் பலவிதம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

காவல்துறையில், காவல்துறை இயக்குநர் (DGP) பதவியே தமிழகத்தின் உயர்ந்த பதவியாகும். அவருக்கு கீழ், துணை இயக்குநர் (ADGP), காவல்துறைத் தலைவர் (IGP) துணைத் தலைவர் (DIG), காவல்துறைக் கண்காணிப்பாளர் (SP), கூடுதல் கண்காணிப்பாளர் (ASP), கூடுதல் துணை கண்காணிப்பாளர் (ADSP), துணைக் கண்காணிப்பாளர் (DSP), ஆய்வாளர் (Inspector), உதவி ஆய்வாளர் (Sub-Inspector), தலைமைக் காவலர் (Head Constable), முதல்நிலைக் காவலர் (Pc-I), இரண்டாம்நிலைக் காவலர் (Pc-II) என பல பதவிகள் இருக்கின்றன.

இரண்டாம் நிலை காவலர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட சில பதவிகளுக்கு நேரடியாக தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி வேலையில் சிறப்புடன் திகழ்ந்தால் பதவி உயர்வு பெறலாம். குரூப்-1 தேர்வில் வெற்றிபெற்று நேரடியாக டி.எஸ்.பி ஆக முடியும். ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றி பெற்றால்... ஏ.எஸ்.பி அல்லது எஸ்.பி ஆக முடியும். மற்ற பதவிகள் அனைத்தையும் பதவி உயர்வு மூலம்தான்.

அ முதல் ஃ வரை! - 3

உடனுக்குடன் தீர்வு!

''எல்லா துறைகளிலுமே பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியிலான பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன. என்றாலும், காவல்துறையில் இப்படிப்பட்ட பிரச்னைகள் எழுந்தால்... அது பூதாகாரமாகிவிடுகிறது. என்னவோ, அந்தத் துறையில் மட்டுமே இப்படிப்பட்ட பிரச்னைகள் இருப்பது போல பெரிதுபடுத்தப்படுகிறது'' என்பதுதான், காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் பலரின் கருத்தாக இருக்கிறது.

பெண்களுக்கான பிரச்னைகளுக்காக மகளிர் காவல் நிலையம் இருக்கிறது. அதுவே காவல் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு என்றால்... மற்ற துறைகளைப் போலவே காவல் துறையிலும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் தொடர்பான புகார்களை பெற்று, அதற்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க 'விசாகா கமிட்டி’ செயல்பட்டு வருகிறது. பெண் போலீஸாருக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் தொடங்கி, பல்வேறு பிரச்னைகளுக்கு நேரிலோ அல்லது தபாலிலோ இந்த கமிட்டியிடம் புகார் அளிக்கலாம். உடனே அந்த புகாரின் மீது தீவிர விசாரணை நடத்தி, புகார் உறுதியாகும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள்.

கஷ்டங்கள்... இஷ்டங்களாகணும்!

தமிழகக் காவல்துறையின் முதல் பெண் போலீஸாக 1973-ம் ஆண்டு பணியில் சேர்ந்து 39 ஆண்டுகள் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்ற வசந்தி, சில விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்...

'’இது ஒரு வேலை என்பதைத் தாண்டி, சேவை செய்வதற்கான வழி என்றுதான் சொல்ல வேண்டும். காவல் பணிக்கு வேண்டிய தகுதிகளோடு தேர்வாகி வருபவர்களுக்கு அரசாங்கம் ஆண்டுதோறும் பல கோடி ரூபாயைச் செலவழித்து பயிற்சிகளையும், வசதிகளையும் வழங்கி வருகிறது. இதை ஒவ்வொருவரும் மக்களுக்குச் செய்கிற சேவையாக நினைத்து அவர்களது நன்மைகளை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அப்படி செயல்படாமல் போனால், அது காவல் பணிக்கு செய்கிற துரோகம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வேலையைப் பொறுத்தவரையில் பல்வேறு சூழல்களில் பல்வேறு விதமான கஷ்டங்கள் வரும். கஷ்டமாகப் பார்க்காமல் கொஞ்சம் கொஞ்சமாக பழகிக் கொள்ள வேண்டும்.

பெண்களுக்கு இந்த வேலையில் பல பிரச்னைகள் பணியில் சேரும்போதும், சேர்ந்த பிறகும் வரும். வீட்டிலேயேகூட இந்த வேலைக்கு அனுமதிக்க மாட்டார்கள். திருமணத்துக்கு பிறகு குடும்பம், குழந்தை, வேலை போன்றவற்றை சரிவர கவனித்துக் கொள்ள இயலாமல் போகலாம். பெண் போலீஸ், ஒரு ஆணுடன் பேசிக் கொண்டிருந்தாலே ஏதாவது கதை கட்டும் சூழல் அதிகம். யாரோ ஒரு சிலர் செய்கிற தவறுக்காக அனைத்து பெண் போலீஸையும் கேவலமாகப் பேசும் சூழ்நிலை உள்ளது. இதையெல்லாம் பொருட்படுத்தக் கூடாது. நம்மை நாமே கொஞ்சம் கொஞ்சமாக பட்டை தீட்டிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பதவி உயர்வு, சம்பள உயர்வு, அதிகார உயர்வு போன்றவற்றை பெற முடியும்'' என்று நம்பிக்கையூட்டும் வகையில் தன் அனுபவங்களைப் பகிர்ந்தார் வசந்தி!

அறிவோம்...

காவல் துறையின் பல்வேறு பிரிவுகள்!

 1. சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரிவு

2. ஆயுதம் அல்லது தமிழ்நாடு சிறப்புப் படை

3. பொதுமக்கள் பாதுகாப்பு

4. பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை

5. கடலோர காவல் துறை

6. குற்றப் புலனாய்வு மற்றும் உளவுத்துறை

7. பொருளாதார சிறப்புப் பிரிவு

8. செயல்பாடு - தமிழக ஆயுதப்படை மற்றும் ஆயுதப்படை பள்ளி

9. ரயில்வே காவல் துறை

10. சமூக நீதி மற்றும் மனித உரிமைகள்

11. சிறப்புப் பிரிவு - உளவு மற்றும் பாதுகாப்பு

12. குற்றப் பிரிவு

13. போக்குவரத்துக் காவல் பிரிவு

14. மதுவிலக்கு அமல் பிரிவு

15. குடிமையியல் பாதுகாப்புப் பிரிவு

16. பயிற்சிப் பிரிவு

இவை தவிர இன்னும் சில பிரிவுகளும் உள்ளன. காவல் துறைக்கு தேர்ந்தெடுக்கப் படுபவர்கள், இவற்றில் எந்தத் துறையில் வேண்டுமானாலும் பணியாற்ற முடியும்.

காவல்துறை அமைப்பு!

அ முதல் ஃ வரை! - 3

க்டோபர் மாத நிலவரப்படி... தமிழகத்தில் உள்ள 1,498 காவல் நிலையங்கள், 198 மகளிர் காவல் நிலையங்கள் அனைத்தையும் சேர்த்து தமிழக காவல்துறையில் 98,862 பேர் பணி புரிகிறார்கள். வடக்கு மண்டலம், மத்திய மண்டலம், மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலம் என நான்காகப் பிரிக்கப்பட்டு... ஒவ்வொரு மண்டலமும் ஒரு காவல்துறைத் தலைவரை (Inspector General of Police) தலைமையாகக் கொண்டு இயங்கி வருகிறது. இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு ஒரு காவல் துறை துணைத் தலைவர் (DIG) மேற்பார்வை செய்கிறார்.

சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய பெரிய நகரங்கள், காவல்துறை ஆணையாளரை (Commissioner of Police) தலைமையாகக் கொண்டு இயங்குகின்றன. ஒவ்வொரு மாவட்டமும் ஒரு காவல்துறை கண்காணிப்பாளரை (Superintendent of Police) தலைமையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.