Published:Updated:

“இங்கிவனை யான் பெறவே...”

'வேலைக்குப் போறோம்’ - பரிசுக்குரிய படைப்பு!

##~##

நானும் என் கணவரும் வீட்டாரை எதிர்த்துக் கொண்டு காதல் மணம் புரிந்தவர்கள். அரசுப் பணியில் இருந்த எனக்கு திடீரென்று சென்னைக்கு மாற்றலாக, கணவரும் தன் பணியை சென்னைக்கு மாற்றிக் கொண்டார். என் அலுவலகத்தில் அனைவரும் நட்புறவாகப் பழகினாலும், ஆனந்த்... மிகுந்த சகோதர பாசத்துடன் பழகினார். சென்னைக்குப் புதிது என்பதால், தன் வீட்டருகே எங்களுக்கும் வீடு பார்த்துக் கொடுத்தார்.

தொடர்ந்து ஆனந்தமாக சென்ற எங்கள் வாழ்வில் திடீரென்று புயல். கணவருக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட, பிரபல மருத்துவமனையில் சிகிச்சை அளித்தோம். நான்கு ஆண்டுகளாக உறவினர்கள் யாரும் எட்டிப் பார்க்காத நிலையில், ஆனந்த் அண்ணனும், அவர் மனைவியும்தான் ஆதரவாக இருந்தனர். எத்தனையோ பாடுபட்டும் என்னவரைக் காப்பாற்ற முடியவில்லை. இவ்வளவு நடந்தும் ஊருக்கு தகவல் சொல்லியும், போனில் இரண்டொரு வார்த்தைகளை (அதிலும் பெரும்பாலான குத்தல் வார்த்தைகளை) மட்டுமே பேசி, என்னை மேலும் அழ வைத்தன, உறவுகள். இந்நிலையிலும், கணவரின் இறுதிச்சடங்கு மற்றும் ஈமக்கிரியைகளை ஆனந்த் குடும்பத்தினர் முன்னின்று செய்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“இங்கிவனை யான் பெறவே...”

என்னைப் போன்ற லட்சக்கணக்கான வாசகிகளைக் கொண்டுள்ள 'அவள் விகடன்' இதழில், இந்த மனித தெய்வங்களைப் பற்றி எழுதுவது, நான் பெற்ற பாக்கியம். வாரிசு இல்லாமல் அனாதையாக இருக்கும் எனக்கு, ஓர் உற்ற துணையை அமைத்துத் தரவும் ஆனந்த் அண்ணன் குடும்பத்தினர் தற்போது முயற்சித்து வருகின்றனர்.

வேலையின்போது பலவித இன்னல்களைச் சந்திக்கவே வாய்ப்புகள் அதிகமிருக்கும் காலம் இது. இதற்கு நடுவே, உடன்பிறவா ஒரு சகோதரன் எனக்குக் கிடைத்ததை எண்ணி எண்ணியே தினமும் மகிழ்கிறேன்.

- எஸ்.நிர்மலா, சென்னை-20

வேலைக்குப் போறோம்!

பஸ்ஸில், பைக்கில், டிரெய்னில் அரக்கப்பரக்க அலுவலகத்துக்குப் போகும் நீங்கள்... சந்தோஷம், துக்கம், முகம் தெரியாத நட்பு, புரமோஷன், அவமானம், ஜோக்ஸ்... என்று தினம் தினம் எதிர்கொள்பவை எத்தனை எத்தனையோ! உங்கள் நெஞ்சைத் தொட்ட விஷயத்தை 'நச்’சென்று எழுதி அனுப்புங்கள். எங்கள் நெஞ்சைத் தொடும் படைப்புக்கு இண்டக்ஷன் ஸ்டவ் பரிசு காத்திருக்கிறது!

அனுப்ப வேண்டிய முகவரி: 'வேலைக்குப் போறோம்', அவள் விகடன், 757 அண்ணா சாலை, சென்னை-600 002. இ-மெயிலிலும் அனுப்பலாம்: aval@vikatan.com