Published:Updated:

வாங்க... அழகாகலாம்!

ஸ்பா மெனிக்யூர்

##~##

ண்டி ஓட்டும்போது, முடியைக் கோதும்போது என்று பலர் கண்களுக்கு முக்கியமாக தென்படுவது நம்முடைய கைகள். அப்படிப்பட்ட கைகளுக்கு தனி அக்கறை எடுத்துக் கொள்ளத்தான் 'ஸ்பா மெனிக்யூர்’ வந்திருக்கிறது. கைகளைப் பளிச்சிட வைக்கும் இந்த அழகுக் கலையைப் பற்றிக் கூறுகிறார் வினிட்டா’ஸ் சலூன் அண்ட் டே ஸ்பா பியூட்டிஷியன் வினிட்டா.

படம் 1, 1ஏ, 1பி: நகங்களில் நெயில் பாலிஷ் போட்டு இருந்தால், 'நெயில் பாலிஷ் ரிமூவர்’ கொண்டு முதலில் துடைத்து எடுத்துவிடுங்கள்.  பிறகு, நெயில் ஷேப்பர் கொண்டு, நகங்களை ஷேப் செய்து ஒரே அளவுக்கு வெட்டிவிடுங்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

படம் 2: ஆன்டி செப்டிக் லோஷன், அரோமா சால்ட், திரவ வடிவில் இருக்கும் கிளென்ஸிங் மில்க், ரோஜா இதழ்கள், தண்ணீர் எல்லாம் கலந்த மக்கில் கை விரல்களைப் பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

வாங்க... அழகாகலாம்!

படங்கள் 3, 3ஏ : வேக்ஸிங் செய்த கைகளில் பூ வடிவில் இருக்கும் 'ஸ்பா ஃப்ளவர்ஸ்’ சோப் கொண்டு சுத்தப்படுத்தி, லெமன் ஃப்ளேவர் சால்ட் ஸ்கிரப்பரால் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.

படம் 4: சருமத்துக்குத் தேவையான சத்துக்களைத் தரும் ஸ்பெஷல் மசாஜ் கிரீம் கொண்டு கைகளையும் விரல் பகுதிகளையும் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

படம் 5, 5ஏ, 5பி: இனி, கிளென்ஸிங் மில்க் கொண்டு நகங்களைச் சுத்தப்படுத்தி, பின் நெயில் புஷ்ஷர், ஆரஞ்சு ஸ்டிக் கொண்டு நகங்களின் இடுக்குகளிலுள்ள அழுக்குகளை நீக்க வேண்டும். க்யூட்டிக்கல் ரிமூவர் கொண்டு நகங்களைச் சுற்றியுள்ள டெட் ஸ்கின்ஸ்களை அகற்றிவிடவேண்டும்.

வாங்க... அழகாகலாம்!

படம் 6 : இனி கைகளுக்கு நெயில் பாலிஷ் போட்டு, அதன் மேல் உங்களுடைய கிரியேட்டிவிட்டியை பயன்படுத்தி நெயில் ஆர்ட் போட்டுவிட்டால் உங்கள் கைகள் மின்னும்.  

வாங்க... அழகாகலாம்!

'மெனிக்யூர் செட்’ கடைகளில் கிடைக்கிறது. இதனைக் கொண்டு வீட்டிலேயே மெனிக்யூர் செய்யலாம். இருபது நிமிடங்களில் செய்யக்கூடிய இந்த அழகுக்கலையை பார்லரில் செய்தால் சாதாரண மெனிக்யூராக இருந்தால் ரூ.390-ம் ஸ்பா மேனிக்யூராக இருந்தால் ரூ.490-ம் செலவாகும்.

மேலும் கைகளையும் நகங்களையும் பராமரிக்க டிப்ஸ்கள் தருகிறார் இதே பார்லரைச் சேர்ந்த பியூட்டிஷியன் சித்ரா.

வெளியில் செல்வதற்கு முன்னரும், தூங்கும் முன்னரும் கைகளில் சன்ஸ்க்ரீன் லோஷன்களை தடவி கைகளின் மென்மையை பராமரியுங்கள்.

•   வெளியில் செல்லும்போது கைகளுக்கு மாய்ஸ்ச்சரைசர் தடை, கையுறை அணிந்து கொண்டால்... சன் டேனால் வரும் கருமையிலிருந்து விடுபடலாம்.

•  பாதாம் ஆயிலை சிறிதளவில் எடுத்துக் கொண்டு அதில் கைவிரல்களைப் பத்து நிமிடம் ஊற வைத்தால் விரல்கள் மென்மையாகும்.

•  கடைகளில் விற்கும் வைட்டமின் இ கிரீம்கள் நகத்துக்குத் தேவையான சக்தியைக் கொடுப்பதனால், அவற்றைக் கொண்டு நகத்தை சுத்தப்படுத்தி பராமரியுங்கள்.

வாங்க... அழகாகலாம்!

தொகுப்பு: லோ.இந்து 

மாடல்: கௌரி ராஜசேகர்

படங்கள்: பா.காளிமுத்து

வாங்க... அழகாகலாம்!

நகங்கள் உடைகின்றனவா?

தாரிணி கிருஷ்ணன், ஹெயின்ஸ் நியூட்ரி லைஃப் கிளினிக் கன்சல்டன்ட் மற்றும் டயட்டீஷியன், சென்னை:

''நகம் வளர்ந்து, விரைவில் உடைந்து போகிறது என்று சொல்பவர்களுக்கு, உடலில் கால்சியம் மற்றும் புரோட்டீன் சத்து குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். நான்-வெஜ் சாப்பிடுபவர்களாக இருந்தால், சிக்கன், மீன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். வெஜிடேரியன்கள்... பால், தயிர், பனீர் மற்றும் பருப்பு வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். தற்சமயம் வெஜிடேரியன்களாக மாறுபவர்கள், தினமும் 400 மில்லி பால் குடித்து வந்தால் நகம் ஆரோக்கியமாக வளரும்.