Published:Updated:

படி... படி... அடுத்தபடி!

படிப்பே விளையாட்டு... விளையாட்டே படிப்பு!

##~##

 டிப்புக்கு இடையே, ஓய்வுநேரங்களில் விளையாடுவதே பெரிய உற்சாகம். அதேசமயம், விளையாட்டையே முழுநேர படிப்பாக கொள்ளலாம் என்றால்... சூப்பர்தானே! சென்னை, நந்தனம், 'ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வியியல் கல்லூரி, 1920-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது முழுக்க விளையாட்டு படிப்புகளுக்கான கல்லூரி. பிஹெச்.டி உள்ளிட்ட ஏழு பகல் நேரப் படிப்புகள் மற்றும் இரண்டு மாலை நேரப் படிப்புகள் இங்கே நடத்தப்படுகின்றன.

பகல் நேரப் படிப்புகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

1.  டிப்ளோமா இன் ஃபிஸிகல் எஜுகேஷன் (டி.பி.எட்):

காலம்: இரண்டாண்டு. இடங்கள்: 40

தகுதி: ப்ளஸ் டூ-வில் 45 சதவிகித மதிப்பெண். மாநில/ தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருந்தால், 40 சதவிகித மதிப்பெண்.

பணி வாய்ப்பு: ஆரம்ப, தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்.

2.  பேச்சுலர் ஆஃப் ஃபிஸிகல் எஜுகேஷன் (பீ.பி.இ):

காலம்: மூன்றாண்டு. இடங்கள்: 80

தகுதி: ப்ளஸ் டூ தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பை, தமிழ்நாடு ஃபிஸிகல் எஜுகேஷன் அண்ட் ஸ்போர்ட்ஸ் யுனிவர்சிட்டியின் கீழ் முடித்திருக்க வேண்டும்.

பணி வாய்ப்பு: ஆரம்ப, தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்.

மேற்கண்ட இரண்டு படிப்புகளுக்கும் வயது வரம்பு: எஸ்.சி/எஸ்.டி 17-30 வயது; ஓ.சி., பி.சி., எம்.பி.சி. பிரிவினர் 17-25 வயது; விதவை/ஆதரவற்ற பெண்கள், 17-40 வயது.

படி... படி... அடுத்தபடி!

3. பேச்சுலர் ஆஃப் ஃபிஸிகல் எஜுகேஷன் (பீ.பி.எட்):

காலம்: ஓராண்டு. இடங்கள்: 180

தகுதி: பீ.பி.இ., பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம் போன்ற ஏதாவது ஒரு பட்டம். அல்லது அதற்கு இணையாக தமிழ்நாடு ஃபிஸிகல் எஜுகேஷன் அண்ட் ஸ்போர்ட்ஸ் யுனிவர்சிட்டியின் கீழ் ஏதேனும் ஒரு பட்டம் (தமிழ் நாடு திறந்தநிலை பல்கலைக் கழக பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது).

பணி வாய்ப்பு: உயர்நிலை பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர், உதவி உடற்கல்வி இயக்குநர்.

4. பேச்சுலர் ஆஃப் மொபிலிடி சயின்ஸ் (பீ.எம்.எஸ்)

பீ.பி.எட். படிப்புக்கு இணை யான இந்த ஓராண்டு பட்டப் படிப்பானது, உடல் ஊனமுற் றோருக்காகவே சிறப்பாக தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. எப்படி நடக்க வேண்டும் என்பது தொடங்கி, எந்தெந்த விளையாட்டை எப்படி விளையாடுவது போன்ற பல்வேறு விதமான பயிற்சிகளும் இப்பபடிப்பில் வழங்கப்படும்.

காலம்: ஓராண்டு.

இடங்கள்: 20

தகுதி: ஏதாவது ஒரு பாடப் பிரிவில் பட்டம் அல்லது அதற்கு இணையாக, தமிழ்நாடு ஃபிஸிகல் எஜுகேஷன் அண்ட் ஸ்போர்ட்ஸ் யுனிவர்சிட்டியின் கீழ் ஏதேனும் ஒரு பட்டம் (தமிழ் நாடு திறந்தநிலை பல்கலைக் கழகப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியாது).

பணிவாய்ப்பு: உயர்நிலைப் பள்ளி மற்றும் சிறப்புப் பள்ளி களில் உடற்கல்வி ஆசிரியர்.

5. மாஸ்டர் ஆஃப் பிஸிகல் எஜுகேஷன் (எம்.பி.எட்)

காலம்: இரண்டு ஆண்டுகள்

இடங்கள்: 60

தகுதி: பீ.பி.இ, பீ.பி.எட், பீ.எம்.எஸ். அல்லது இதற்கு இணையான தமிழ்நாடு ஃபிஸி கல் எஜுகேஷன் அண்ட் ஸ்போர்ட்ஸ் யுனிவர்சிட்டியின் கீழ் ஏதேனும் ஒரு பட்டம் அல் லது முதுகலை டிப்ளோமோ பட்டம்.

பணி வாய்ப்பு: உடற்கல்வி இயக்குநர் மற்றும் பள்ளி/கல் லூரிகளில் உடற்கல்வி ஆசிரியர்.

மேற்கண்ட மூன்று படிப்புகளுக்கும் வயது வரம்பு: 21-30 வயதுக்குள் (மாநில, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பரிசு பெற்றவர்கள் மற்றும் விளையாட்டு ஆசிரியராக பணி அனுபவம் உள்ளவர் களுக்கு சலுகை உண்டு).

6, 7. எம்.ஃபில் மற்றும் பிஹெச்.டி.

ஃபிஸிகல் எஜுகேஷன் பாடப் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்கள், இந்த இரண்டு பாடப் பிரிவுக்கும் விண்ணப்பிக்கலாம். இவற்றில் எம்.ஃபில்-க்கு 22 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பி.ஹெச்.டி-க்கு 8 வழிகாட்டிகள் உள்ளனர் (ஒரு வழிகாட்டியிடம் 8 மாணவர்கள் வீதம் படிக்கலாம்). வயது வரம்பு இல்லை. இப்படிப்பை முடித்தவர்கள், ஃபிஸிகல் எஜுகேஷன் யுனிவர்சிட்டி மற்றும் கல்லூரிகளில் விரிவுரையாளர் மற்றும் இயக் குநர் பணிகளில் சேர முடியும்.

தேர்வு முறை.!

50 சதவிகித இடங்கள், அரசு இட ஒதுக்கீட்டின்படியும், மீதி கல்லூரி நிர்வாகம் மூலமாகவும் நிரப்பப்படும். இதில், கல்லூரி நிர்வாக இடங்களில் கிறிஸ்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக செலுத்த வேண்டிஇருக்கும் (விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம், புத்தகம் மற்றும் சீருடை உள்ளிட்ட அனைத்துக்கும்).

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில், விண்ணப்பங்கள் வழங்கப்படும். ஜூலையில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். ஓடுதல், குதித்தல், எறிதல் மற் றும் ஏதேனும் ஒரு விளையாட்டு என தேர்வு நடத்தப்படும். இதில் பெறும் மதிப்பெண்கள், தகுதி பாடத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள், விளையாட்டு போட்டிகளில் பங்களித்துப் பெற்ற சான்றிதழ்கள் போன்றவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மாலை நேரக் கல்லூரி!

பி.ஜி டிப்ளோமா இன் ஸ்போர்ட்ஸ் கோச்சிங் (டென்னிஸ், கிரிக்கெட், ஸ்விம்மிங்)

ஓராண்டு முதுகலை டிப் ளோமா படிப்பான இது, மாலை நேர படிப்பாக நடத்தப் படுகிறது. இதில் 12 இடங்கள் ஒதுக்கப்பட்டு, முழுக்க முழுக்க ஸ்போர்ட்ஸ் கோச் சிங், டென்னிஸ் பயிற்சி, கிரிக் கெட் பயிற்சி, நீச்சல் பயிற்சி போன்றவை வழங்கப்படு கின்றன. இதில் சேர ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றி ருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை. ஆண்டுக்கு 15 ஆயி ரம் ரூபாய் கட்டணம்.

எம்.எஸ்சி.

இது, மாலை நேர இரண் டாண்டு முதுகலை பட்டப் படிப்பு. ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் பட்டப்படிப்பை முடித் திருக்க வேண்டும். இதில் ஃபிட்னஸ், நியூட்ரிஷனல் கேர் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப் படும். மொத்தம் 20 இடங்கள் உண்டு. வயது வரம்பு இல்லை. இப்பயிற்சி பெற்ற வர்கள், உடற்பயிற்சி நிலையம் தொடங்கலாம். பயிற்சியாளர் அல்லது ஆலோசகராகவும் பணியாற்ற முடியும். இதற்கான பயிற்சி கட்டணம், ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாய்.

கல்லூரியின் சிறப்பு!

மாணவர்களுக்கு தேவையான அனைத்து விளையாட்டு மைதானங்களும் சிறப்பு அம்சங்களோடு இங்கே உள்ளன. நீச்சல் குளம், நூலகம், விடுதி வசதிகளும் உண்டு.

தொடர்புக்கு: ஒய்.எம்.சி.ஏ உடற் கல்வியியல் கல்லூரி, 333, அண்ணா சாலை, நந்தனம், சென்னை-35, போன்: 044 24344816.

இணைய தளம்: www.ymcacollegeofphysicaleducation.edu.in.

- சா.வடிவரசு

படி... படி... அடுத்தபடி!

விளையாட்டு பல்கலைக்கழகம்!

'தமிழ்நாடு பிஸிகல் எஜுகேஷன் அண்ட் ஸ்போர்ட்ஸ் யுனிவர்சிட்டி’ விளையாட்டு படிப்புகளுக்காகவே இந்தியாவில் தொடங்கப்பட்டிருக்கும் முதல் பல்கலைக்கழகம். இதில் 11 துறைகளும், அதன் மூலமாக 24 முழுநேர படிப்புகளும், 71 தொலைதூர படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் கீழ், ஒய்.எம்.சி.ஏ உடற் கல்வியியல் கல்லூரி உள்ளிட்ட 10 அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் சென்னை, கோவை, சேலம், திருச்செந்தூர், நாமக்கல், கம்பம், தத்தனூர் மற்றும் சிவகங்கை போன்ற பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன.

தொடர்புக்கு: தமிழ்நாடு பிஸிகல் எஜுகேஷன் அண்ட் ஸ்போர்ட்ஸ் யுனிவர்சிட்டி, 8-வது மாடி, ஈ.வி.கே சம்பத் மாளிகை, கல்லூரி சாலை, சென்னை-600 006, போன்: 044 2825 2245 / 47, இணைய தளம்: www.tnpesu.org.