Published:Updated:

பணத்தைக் கொட்டும் பாக்கு மட்டைத் தட்டு!

பொன்.விமலா, படங்கள்: க.தனசேகரன்

##~##

 நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு, பெயர் வைத்தல், பிறந்த நாள், காதுகுத்து, பூப்புனித நீராட்டு விழா... என தொன்றுதொட்டு நமது வீடுகளில் விசேஷங்களுக்கும் விருந்துகளுக்கும் பஞ்சமே இல்லை. பத்தாண்டுகளுக்கு முன்பு வரை இப்படிப்பட்ட விசேஷங்களில் வாழை இலையில்தான் விருந்து பரிமாறுவார்கள். நாகரிகம் பெருகியதில், தற்போது 'பஃபே’ முறையில்தான் விருந்து. இங்கே முக்கிய இடம் பிடிப்பது, பாக்கு மட்டைத் தட்டு. சுற்றுச்சூழல் பற்றிய விழிப்பு உணர்வு பெருகி வரும் நிலையில்... 'சூழலுக்கு கேடு விளைவிக்காத பொருள்’ என்பதால், இந்தத் தட்டுக்கு நல்ல வரவேற்பு. இதுவே.. பெண்களுக்கு வரப்பிரசாதமான தொழிலாகவும் இதை உருவெடுக்க வைத்துள்ளது!

''ஆயிரம் சதுரடி இடமிருந்தால்கூட போதும்... மாசம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்'' என்று உற்சாகம் பொங்கச் சொல்கிறார், பாக்கு மட்டைத் தட்டு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நாமக்கல், கண்ணகி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''ப்ளஸ் டூ முடிச்சவுடனேயே கல்யாணம் ஆகிடுச்சு. 'வீட்டு வேலைகள்ல மட்டுமே முழு பலத்தையும் பயன்படுத்தக் கூடாது. ஏதாவது தொழில் பண்ணணும்'னு ரொம்ப நாளா மனசுக்குள்ள ஓடிட்டே இருந்துச்சு. அதனால... வேஸ்ட் கிளாத்ல மிதியடி, கிராஃப்ட் வொர்க்னு எதையாவது பண்ணிட்டே இருப்பேன். ஒரு நாள், 'இந்தியன் வங்கி மூலமா இலவச சுயவேலை வாய்ப்பு பயிற்சி'னு பேப்பர்ல விளம்பரம் பாத்தேன். உடனே அங்க போய், பாக்கு மட்டைத் தட்டு தயாரிக்குற தொழிலைக் கத்துகிட்டேன்.

பணத்தைக் கொட்டும் பாக்கு மட்டைத் தட்டு!

பயிற்சி முடிஞ்சதும், என் கணவர்தான் ஊக்கம் கொடுத்து, தொழிலுக்கு முதலீடா அஞ்சு லட்ச ரூபாய் பணமும் கொடுத்தார். பல விதமான சைஸ்கள்ல தட்டுகளைத் தயாரிக்கற மாதிரியான மெஷின்களை வாங்கி, தொழிலை ஆரம்பிச்சேன். பாக்கு மட்டைத் தட்டு தயாரிக்கறது, ரொம்ப கஷ்டமான வேலை கிடையாது. சரியான பயிற்சியும் ஆர்வமும் இருந்தா... ரொம்ப சுலபமா கத்துக்கலாம். ஆரம்பத்துல நான் மட்டும்தான் வேலை செஞ்சுட்டு இருந்தேன். இப்போ ரெண்டு பேர் என்கூட சேர்ந்து வேலை பாக்கறாங்க'' என்ற கண்ணகி, தட்டு தயாரிக்கும் விதம் பற்றி விவரித்தார்.

''பாக்கு மட்டைகள் எல்லா ஊர்கள்லயுமே பரவலா கிடைக்குது. ஏப்ரல், மே மாதங்கள் பாக்கு மட்டைகள் தாராளமா கிடைக்கும். இந்த காலகட்டத்துல வாங்கினா... மட்டையோட சைஸ் பெருசா இருக்கறதோட, விலையும் கம்மியா கிடைக்கும். ஆயிரம் மட்டைகள்ல 1,500 தட்டுகள் வரைக்கும் செய்ய முடியும். தினப்படி உற்பத்திக்கு தேவையான பாக்கு மட்டைகள் எடுத்து தண்ணியில அரை மணி நேரம் ஊற வெச்சு... அழுக்கு, மண்ணெல்லாம் போற மாதிரி நல்லா துடைச்சு, மெஷின்ல அடுக்கி வெச்சுட்டு, மெஷினை ஓடவிட்டா... வரிசையா தட்டுகளா வந்து வெளியில விழும். சரியானபடி கட் ஆகாம வந்து விழுற தட்டுகளை கத்தரிக்கோலால வெட்டி சரி பண்ணிக்கலாம். ஒருநாளைக்கு குறைஞ்சது ஆயிரம் தட்டுகள் வரைக்கும் செய்யலாம். முறைப்படி இந்த தொழிலை பண்ணினா... பாதிக்குப் பாதி லாபம்!''

- கண்ணகியின் கண்களில் பெருமை பொங்குகிறது!