Published:Updated:

சென்னையைக் கலக்கிய சிறப்பு சேலைகள்!

வே.கிருஷ்ணவேணி, படங்கள்: ஆ.முத்துக்குமார்

##~##

 ன்றைய டிரெண்ட்... வகைவகையான டிசைன்கள் கொண்ட ஆடைகளே! என்றாலும், பாரம்பரிய சேலைகளுக்கும் மவுசு குறையவில்லை. சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நவம்பர் 5-10 வரை நடைபெற்ற 'குச்சேய் சில்க்ஸ் எக்ஸ்போ-2013' நிகழ்வுக்கு குவிந்த பெண்கள் கூட்டம்... பெங்கால், பீகார், கர்நாடகா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், வாரணாசி என ஒவ்வொரு பகுதிக்குமான ஸ்பெஷல் மற்றும் கைவேலைப்பாடுகள் கொண்ட சேலைகளை வாங்கிக் குவித்ததே இதற்கு சாட்சி!

''ஜார்கண்ட் மாநிலத்தில் மிகப்பிரபலமானது, குச்சேய் சில்க் சேலைகள். ஜார்க்கண்ட் மாநில அரசு அனுமதியோடு இந்தக் கண்காட்சியை பல மாநிலங்கள்ல நடத்தியிருக்கோம். தமிழ்நாட்டுல இதுதான் முதல் தடவை. முதல் நாளில் இருந்தே பெண்கள் கூட்டம் அலைமோதிச்சு. ஆண்களும் கூடவே வந்து நின்னு... பார்த்துப் பார்த்து செலக்ட் பண்ணி எடுக்கறதைக் கண்டு ஆச்சர்யப்பட்டோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சென்னையைக் கலக்கிய சிறப்பு சேலைகள்!

பஹல்பூரோட தசர் சில்க்ஸ் சேலைகள், கண்ணைக் கவர்ற மாதிரி டிசைன்களோட இருக்கும். ஒரு சேலை, 2,000 ரூபாய்ல இருந்து 5,000 ரூபாய் வரை விலை. கொண்டு வந்த அத்தனை சேலைகளும் வித்துடுச்சு. மைசூர் சில்க், பீகார் மாநில மதுபானி பிரின்டட் வொர்க் சேலை,

சென்னையைக் கலக்கிய சிறப்பு சேலைகள்!

ஜார்க்கண்ட் மல்வாரி சில்க் சேலை, வெஸ்ட் பெங்கால் மட்கா சில்க் சேலை, ரா சில்க், கதர் சில்க்னு எல்லாத்தையும் விரும்பி வாங்கினாங்க'' என்று பூரிப்புடன் சொன்னார் கண்காட்சி பொறுப்பாளர் ராஜ்குமார்.

கை நிறைய, விதம்விதமான சேலைகளுடன் நின்றிருந்த அண்ணாநகர் கீதா, ''சில்க் புடவையில புதுசா என்ன வெரைட்டி வந்தாலும், உடனே வாங்கிடுவேன். என் பொண்ணுக்கும் சில்க் சேலைனா ரொம்ப இஷ்டம். அவளுக்கு இப்போதான் கல்யாணம் ஆச்சு. மறுவீட்டுக்கு போகும்போது சேலைகள் கொடுக்கணும். அதுக்காகத்தான் வந்தேன். மொத்த பர்ச்சேஸையும் இங்கயே முடிச்சுட்டேன். 500 ரூபாய்ல இருந்து 30 ஆயிரம் ரூபாய் வரைக்கும் சேலைகளை குவிச்சுருக்காங்க. விலைக்குத் தகுந்த வேலைப்பாடுகளும் இருக்கு. அதனாலதான் யோசிக்காம இவ்வளவு சேலைகளை வாங்கியிருக்கேன்'' என்று சிரித்தபடியே நடந்தார் சேலைகளுடன்!