Published:Updated:

ஒரு தேவதை வந்துவிட்டாள்..!

ரொமான்ஸ் சீக்ரெட்! பரிசுக்குரிய ரொமான்ஸ் - 2

##~##

'ரொமான்ஸ்’, செக்ஸ் சார்ந்ததல்ல. பரஸ்பரம் அன்பை பேச்சிலும், செயலிலும் பரிமாறிக் கொள்ளும்போது உருவாவதுதான், ரொமான்ஸ். அதன் வடிகால்தான் செக்ஸ்! நிஜமான ரொமான்ஸ்களை அப்பட்டமாக சொல்வது, பெண்களுக்கு சங்கோஜமான சமாசாரமே! என்றாலும் முயற்சிக்கிறேன்.

'ஒரு தேவதை வந்துவிட்டாள்... என்னைத் தேடியே!’ என்று தலைப்பிட்டு கல்யாண பத்திரிகை அடித்து அசத்தியவர் என்னவர். அவ்வப்போது... ''மல்லிகா ஷெராவத் மாதிரி பொண்டாட்டிக்கு ஆசைப்பட்டேன். '.....’  படத்துல வர்ற மல்லிகாதான் கிடைச்சுது’ என்றும் (அங்)கலாய்ப்பார். இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்... எங்களின் ரொமான்ஸ் ரகசியங்களை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

குளித்துக் கொண்டிருப்பேன். திடீரென்று கதவைத் தட்டி ''கூப்பிட்டியா..?'' என்பார். ''இல்லையே!'' என்றால்... ''உன்னோட பரந்த முதுகை தேய்ச்சுவிட இங்க யாரு இருக்கா... பாவமா இருக்கேனு பரிதாபப்பட்டு வந்தேன்'' என உருகுவார். நான் திறக்காவிட்டால், 'பூங்கதவே, தாழ்திறவாய்’ எனப் பாடுவார். நான் திறப்பேன். அப்புறம்... (சென்சார் கட்)! இதேபோலத்தான் சில நாட்களில் இரவில்

ஒரு தேவதை வந்துவிட்டாள்..!

பாத்திரங்களைக் கழுவி முடித்துவிட்டு வந்து படுக்கும்போது ''கூப்பிட்டியா..?'' என்று ஆரம்பித்துவிடுவார்.

எங்களுக்கு ஒரே மகள். குடும்ப குரூப் போட்டோவில், அவர் எழுதியிருக்கும் வாசகம் என்ன தெரியுமா... 'அப்பா, பாப்பா, பீப்பா’! என்னுடைய 'நமீதா’ சைஸ் உடம்பைப் பார்த்து, ''உன்னால் குனிஞ்சு நிமிர முடியாதும்மா'' என்று இன்று வரை வீடு பெருக்கி, தண்ணீர் பிடித்து வைப்பதென்ன... பண்டிகை நாட்களில் மருதாணி இடுவதென்ன... அந்த மூன்று நாட்களில் தோசை சுட்டு, காபி போட்டு பரிமாறி, உபசரிப்பதென்ன... என்ன... என்ன! நான் அம்மா வீட்டுக்கு போய்விட்டால்... வாசல் பெருக்கி, கோலம் போடுவதைப் பக்கத்து வீட்டுக்காரம்மா சிலாகித்து சொல்லும்போது, உள்ளுக்குள் சிலிர்க்கும். அன்றிரவு ஸ்பெஷல் விருந்துதான்!

பணிவிடையில் சேவகனாக... பள்ளியறையில் மன்மதனாக... நிர்வாகத்தில் தலைவனாக... துக்கத்தில் தோழனாக... கணவன் வாய்ப்பது வரம்தானே!

- சென்னை வாசகி

ரொமான்ஸ் சீக்ரெட்!

ரசிக்கத்தக்க உங்களின் ரொமான்ஸ்களை... பகிர்ந்து கொள்ளுங்களேன். சிறப்பான ரொமான்ஸ்களுக்கு எலெக்ட்ரிக் ரைஸ் குக்கர் பரிசாகக் காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய முகவரி: 'ரொமான்ஸ் சீக்ரெட்!’,

அவள் விகடன், 757 அண்ணா சாலை, சென்னை - 600 002. இ-மெயிலிலும் அனுப்பலாம்: aval@vikatan.com