Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

##~##

 கன், கையில் பேட் எடுத்தால்... உலகமே வைத்த கண் வாங்காமல் வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால், ஒருநாள்கூட அதை நேரிலோ அல்லது டி.வி. வழியாகவோ அவனுடைய தாய் பார்த்ததில்லை. ஆச்சர்யமாக இருக்கிறதுதானே... சச்சின் டெண்டுல்கரின் அம்மா, ரஜ்னி டெண்டுல்கரை நினைத்தால்!

'மகன் விளையாடுவதைப் பார்த்தால், பதற்றமாகிவிடும்' என்று கடந்த 24 ஆண்டுகளாக விரதம் காத்த அந்தத் தாய், தன் மகன் விளையாட்டிலிருந்து ஓய்வுபெறும் 200-வது டெஸ்ட் போட்டியின்போது, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ஆஜராக... அவரைச் சுற்றித்தான் அத்தனை மீடியாக்களும் திரண்டு நின்றன அன்று!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'200-வது டெஸ்ட் மும்பையில் நடக்க வேண்டும்' என்பது சச்சினின் விருப்பமே..! அதற்குக் காரணம், 'தள்ளாத வயதில், வீல் சேருடன் நடமாடும் என் அம்மா, நான் விளையாடுவதை முதல் முறையாக நேரில் பார்க்க வேண்டும்' என்று 40 வயது மகன் ஆசைப்பட்டதுதான்!

நமக்குள்ளே...

உலக அரங்கில் உன்னதமான இடத்துக்கு மகனை உயர வைத்த தாய்...

அந்தத் தாயை, உலகமே மதிக்க வேண்டும் என்பதற்காக உரிய மரியாதையைச் செய்த மகன்...

சிந்தனையைத் தூண்டுகிறதல்லவா!

சரி... நம்மவர்களில் எத்தனை அம்மாக்கள் இப்படி விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்?

'முதல்ல படி. அப்புறம் விளையாடப் போகலாம்' என்று உடல் நலனுக்கான முக்கியத்துவத்தை, இரண்டாம் இடத்துக்கு தள்ளுவதுதானே பெரும்பாலான வீடுகளில் வாடிக்கையாக இருக்கிறது!

நமக்குள்ளே...

'மதிப்பெண்கள்' என்பதை மட்டுமே இலக்காக கொண்டு நம் கல்வி முறை சுழன்று கொண்டிருப்பதால், குழந்தைகளை பந்தயக் குதிரைகளாகவே மாற்றி வைக்கிறோம். இயற்கையாகவே குழந்தைகளிடம் துளிர்விடும் விளையாட்டு மீதான ஈர்ப்பை, துளிரிலேயே கிள்ளி வைக்கிறோம்... வேறு வழியின்றி! எல்லாவற்றையும் மீறி... இளைஞர்கள், சிறுவர்கள் என்று கணிசமானோரை ஓரளவுக்காவது விளையாட வைத்துக் கொண்டிருப்பதே சச்சின் போன்ற துருவ நடசத்திரங்கள்தான்.

அதிக இளைஞர்கள் நிறைந்திருக்கும் தேசம்தான், 'ஆரோக்கிய தேசம்'! உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடுதான் நம்முடையது. என்றாலும், நம் இளைஞர்களை பரிபூரண‌ உடல் நலம் கொண்டவர்களாக நாம் வளர்த்துக் கொண்டிருக்கிறோமா..?

இதையும் சிந்திக்கலாம்தானே தோழிகளே!

உரிமையுடன்

நமக்குள்ளே...

ஆசிரியர்