Published:Updated:

‘அவர் பிழைத்திருப்பார்!’

‘வேலைக்குப் போறோம்’ - பரிசுக்குரிய படைப்பு!

‘அவர் பிழைத்திருப்பார்!’

‘வேலைக்குப் போறோம்’ - பரிசுக்குரிய படைப்பு!

Published:Updated:
##~##

நான் ஒரு தையல் டீச்சர். சென்னை, தி.நகரில் உள்ள ஒரு பள்ளியில் பகுதி நேரமாக ஐந்து வருடங்களுக்கு முன்பு வேலை பார்த்தேன். எனக்கு மதியம் 2 மணிக்குதான் வகுப்பு என்பதால், வீட்டிலிருந்து ஒரு மணிக்கு '27 சி’ பஸ் பிடித்துச் செல்வேன். ஒரு நாள், தி.நகர் பஸ் ஸ்டாண்ட் அருகே ரோட்டில் ஒரே கூட்டமாக இருந்தது. பஸ்ஸிலிருந்து இறங்கி சென்று பார்த்தால்... அங்கு ஒருவர் கீழே விழுந்து கிடந்தார். அவர் வாயிலிருந்து ரத்தம் 'குபுக் குபுக்’ என கொப்பளித்துக் கொண்டிருந்தது.

எல்லோரும் வேடிக்கை பார்த்தபடி நிற்க, ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்ட நான், அவருடைய சட்டைப் பையில் இருந்த செல்போனை எடுத்து, அதில் பதிவாகியிருந்த ஏதோ ஒரு நம்பரைத் தொடர்பு கொண்டேன். அதேவேகத்தில், ''ஐயா, நான் பேசும் இந்த நம்பருக்குரியவர்... ரத்த வாந்தி எடுத்து மயக்க நிலையில் கிடக்கிறார். அவர் யார் என்ற விவரம் எனக்குத் தெரியாது. மனிதாபிமானத்துடன் இதை உங்களுக்குத் தெரிவிக்கிறேன். நீங்களும் சிரமம் பார்க்காமல் இந்த நபரின் வீட்டுக்குத் தெரியப்படுத்துங்கள்'' என்று கூறிவிட்டு, செல்போனை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு நிமிர்ந்தேன். சரியாக அங்கே ஆஜராகியிருந்த இரண்டு போலீஸ்காரர்கள்... ''சிறப்பாக செயல்பட்டீர்கள்'' என்று என்னிடம் சொன்னதுடன்... ஆம்புலன்ஸுக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சுற்றியிருந்தவர்களும் என்னைப் பாராட்டினார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘அவர் பிழைத்திருப்பார்!’

நானோ... 'அந்த மனிதர் எப்படியாவது பிழைத்துவிட வேண்டும்’ என்று கடவுளிடம் வேண்டியபடியே வேலைக்கு ஓடினேன். 'அவர் பிழைத்து நல்லபடியாக வாழ்ந்து கொண்டிருப்பார்!’ என அந்நாளைய நிகழ்வு, இப்போதும் மனதில் அலைமோதியபடியே இருக்கிறது!

- மாலா பழனிராஜ்,  சென்னை-600 127

வேலைக்குப் போறோம்!

ஸ்ஸில், பைக்கில், டிரெய்னில் அரக்கப்பரக்க அலுவலகத்துக்குப் போகும் நீங்கள்... சந்தோஷம், துக்கம், முகம் தெரியாத நட்பு, புரமோஷன், அவமானம், ஜோக்ஸ்... என்று தினம் தினம் எதிர்கொள்பவை எத்தனை எத்தனையோ! உங்கள் நெஞ்சைத் தொட்ட விஷயத்தை 'நச்’சென்று எழுதி அனுப்புங்கள். எங்கள் நெஞ்சைத் தொடும் படைப்புக்கு இண்டக்ஷன் ஸ்டவ் பரிசு காத்திருக்கிறது!

அனுப்ப வேண்டிய முகவரி: 'வேலைக்குப் போறோம்', அவள் விகடன், 757 அண்ணா சாலை, சென்னை-600 002. இ-மெயிலிலும் அனுப்பலாம்: aval@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism