Published:Updated:

வாங்க... அழகாகலாம்!

கம்ப்ளீட் மேக்கப்

வாங்க... அழகாகலாம்!

கம்ப்ளீட் மேக்கப்

Published:Updated:
##~##

 ''மேக்கப் போடணும்னு ஆசை... ஆனா, லிப்ஸ்டிக், ஐலைனர் மாதிரியான குட்டி குட்டி அயிட்டம்ஸ் மட்டும்தான் யூஸ் பண்ணத் தெரியும். முழுமையா மேக்கப் எப்படி போடணும்னு தெரியாது'' என்பவர்களுக்காக... மேக்கப் எப்படி போடுவது என்பது பற்றி இங்கே சொல்கிறார் திண்டுக்கல், பியூட்டிஷியன் லட்சுமி பாண்டியன்.

''மேக்கப் போட்டாலும் சரி, போடாட்டாலும் சரி... எப்போதும் முகத்தைக் கழுவி, துடைச்சு சுத்தமா வெச்சுருந்தாலே பிரைட்டா தெரிவோம்’' என்கிற முன்னுரையுடன் ஆரம்பித்த லட்சுமி பாண்டியன். மேக்கப் டிப்ஸ்களை ஸ்டெப் பை ஸ்டெப்பாக பட்டியலிட்டார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்டெப் 1: சோப் போட்டு முகத்தைக் கழுவித் துடைத்து, உலர்ந்ததும் முகத்தில் கிளென்ஸிங் (Cleansing) அப்ளை செய்து, கீழிருந்து மேல் நோக்கி விரல்களால் மசாஜ் செய்யுங்கள். பின்பு, காட்டன் கொண்டு மென்மையாக கிளென்ஸரை (Cleanser) துடைத்து எடுத்துவிட வேண்டும். ஆயில் ஸ்கின் உள்ளவர்கள், ஜெல் கிளென்ஸர், வறண்ட சருமம் உள்ளவர்கள் கிரீம் கிளென்ஸர் என உபயோகிக்கலாம். முக துவாரத்தில் உள்ள அழுக்குகளை எடுக்க கிளென்ஸரால் மட்டும்தான் முடியும்.

வாங்க... அழகாகலாம்!

ஸ்டெப் 2: கிளென்ஸரால் திறக்கப்பட்ட முக துவாரங்களை மூட, காட்டனை சிறிது ரோஸ்வாட்டரில் நனைத்து கீழிருந்து மேல் நோக்கி முகத்தை துடைக்க வேண்டும். இதற்கு டோனிங் என்று பெயர்.

ஸ்டெப் 3: முகத்தில் எளிதில் வறண்டு போகும் இடங்களில் எல்லாம் மாய்ஸ்ச்சரைஸர் தடவி மென்மையாக அப்ளை செய்துவிடுங்கள்.

ஸ்டெப் 4: கல்லூரி செல்பவர்களுக்கு அதிகம் மேக்கப் தேவையில்லை என்பதால், உங்கள் தோலுக்கு பொருந்திப் போகிற ஷேட் கொண்டு, லாங் லாஸ்ட்டிங் ஃபவுண்டேஷனாக பார்த்து வாங்கி, முகத்தில் ஆங்காங்கே பூசி, மென்மையாக முகம் முழுவதும் அவற்றை பரப்பி, தேய்க்க வேண்டும்.

ஸ்டெப் 5: ஃபவுண்டேஷன் மேல் காம்பேக்ட் பவுடர் லேசாக பூசிக் கொள்ளுங்கள். இது மேக்கப்பை மாலை வரை கலையாமல் பாதுகாக்கும்.

வாங்க... அழகாகலாம்!

ஸ்டெப் 6, 6a: கண் இமைகளில் வாட்டர் புரூஃப் ஐ லைனர், இமை முடிகளுக்கு மைல்டாக மஸ்காரா போட்டுக் கொள்ளுங்கள்.

வாங்க... அழகாகலாம்!

ஸ்டெப் 7: காலேஜ் பெண்களுக்கு லிப்ஸ்டிக் தேவையில்லை. அதேசமயம் உதடுகளின் ஈரப்பதத்தைப் பாதுகாக்க நேச்சுரல் லிப் பாம் அப்ளை செய்யுங்கள். 'க்ளாஸி லுக்’ வேண்டுமென்றால், லிப் க்ளாஸ் போடலாம்.

கல்லூரிக்குப் போகிறவர்கள் என்பதால் தலைமுடியை லூஸ் ஹேராக விட்டு, சின்னதாக பட்டர்ஃப்ளை அல்லது உங்கள் டிரெஸ்ஸுக்கு மேட்சான க்ளிப் போட்டுக் கொள்ளுங்கள். வேண்டுமென்றால் ஃப்ரன்ட் ஹேரை மட்டும் அயர்னிங் செய்து, ஸ்டைலாக முக ஓரத்தில் தொங்கவிட்டுக் கொள்ளலாம். மேலே சொன்ன மேக்கப் செய்வதற்கு 20 நிமிடங்கள்தான் ஆகும். இதற்காக பார்லர் சென்றால், குறைந்தபட்சம் 300 ரூபாய் வரை செலவாகும்.

- உ.சிவராமன்  , படங்கள்: வீ.சிவக்குமார்

மாடல்: சுகன்யா

'பழங்கள்தான் தீர்வு!’

தாரிணி கிருஷ்ணன், ஹெய்ன்ஸ் நியூட்ரி லைஃப் கிளினிக் கன்சல்டன்ட் மற்றும் டயட்டீஷியன், சென்னை:

''நம்முடைய உடல் சூட்டினாலேயே வறண்ட மற்றும் ஆய்லி ஸ்கின் கொண்ட தன்மை நம் முகத்தில் ஏற்படுகிறது. வறண்ட ஸ்கின் கொண்டவர்கள், தினமும் கண்டிப்பாக வால்நட், அக்ரூட்,

வாங்க... அழகாகலாம்!

பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ்களை எடுத்துக் கொள்ள வேண்டும். காலையில் இவற்றை ஒவ்வொன்றிலும் தலா இரண்டாக எடுத்துக் கொள்ளுங்கள். இதுபோக சீஸனில் கிடைக்கும் அத்தனை பழங்களையும் சாப்பிடத் தவறாதீர்கள். முகத்தில் சில இடம் வறண்டு போகிறது என்றால், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை மிகச்சிறிய அளவில் தடவிக் கொண்டு வெளியில் சென்றால், முகம் வறண்டு போகாமல் இருக்கும். ஆய்லி ஸ்கின் கொண்டவர்களுக்கு ஒரே தீர்வு சீஸனில் கிடைக்கும் பழங்களை எடுத்துக்கொள்வது மட்டும்தான். இதன் மூலம் மேலும் உங்கள் ஸ்கின் ஆய்லியாக இல்லாமல் பார்த்துக் கொள்ள முடியும்.''

- அ.பார்வதி  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism