மனிதனுக்கு முழுமையான அன்பும் கவனிப்பும் பெரும்பாலும் தேவைப்படுவது... அவன் நோயுறும்போதுதான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதுபோன்ற நேரங்களில் உறவுகள் உடனிருப்பதில்லை அல்லது இருக்க முடிவதில்லை. இத்தகைய சூழல்களில் நோயாளிகளுக்குத் தேவையான அன்பு, உபசரிப்பு மற்றும் கவனிப்பு என்று அனைத்தையும் முகம் சுளிக்காமல் செய்பவர்கள்... 'நர்ஸ்' என்றழைக்கப்படும் செவிலியர்கள்தான். அப்படிப்பட்ட உன்னதமான நர்ஸிங் துறை பற்றி இங்கே பார்ப்போம்!

''சிகிச்சைகளின்போது மருத்துவர்களுக்கு உதவிகள் செய்வது, சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகளைக் கொடுப்பது, அவர்களை எப்போதும் கண்காணிப்பது என முழுக்க சேவை மனப்பான்மையுடன் செயல்படுபவர்கள் நர்ஸ்கள். மருத்துவமனைகளின் பொது வார்டு துவங்கி, அறுவை சிகிச்சை அரங்கு வரை டாக்டர்களுக்கு இணையாக பணியாற்றுவது இந்த நர்ஸ்கள்தான். பொதுவாக, மருத்துவருக்கும் நோயாளிக்குமான தொடர்பு குறைந்த நேரம் மட்டுமே. ஆனால், நோயாளிகளுடன் நல்ல உறவை ஏற்படுத்தி, அவர்களுடன் அதிக நேரத்தைச் செலவழிப்பது நர்ஸ்களே! இதன் காரணமாகவே இந்தியாவில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் முறையாகப் பயிற்சி பெற்ற நர்ஸுகளுக்கான தேவை... எப்போதும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. நர்ஸிங் பள்ளிகளும், கல்லூரிகளும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கின்றன! இந்தத் துறை பணிகளில் சேர விரும்புபவர்கள், அதற்கென உள்ள டிப்ளோமா, பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளை படிக்க வேண்டும்'' என்று சொல்லும் சென்னை, ஸ்ரீராமச்சந்திரா நர்ஸிங் கல்லூரி முதல்வர் பிரசன்னா பேபி, இதற்கென உள்ள படிப்புகள் மற்றும் அதில் சேர்வதற்கான தகுதிகளைப் பட்டியலிட்டார்.

படிப்பு மற்றும் தகுதி!

ஜி.என்.எம்: 'டிப்ளோமா இன் ஜெனரல் நர்ஸிங் அண்ட் மிட்வைஃப்ரி' (G.N.M -General Nursing and Midwifery): இது மூன்றரை ஆண்டு படிப்பு. இதைப் படிக்க விரும்புகிறவர்கள், ப்ளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும். இந்த டிப்ளோமா படிப்பில், மருத்துவமனைகளில் பணியாற்றும் முதல் நிலை நர்ஸ்களை உருவாக்கும் விதத்தில் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நர்ஸ் பணிக்கு தேவையான அடிப்படை பயிற்சிகள் தொடங்கி அனைத்தும் இந்தப் பாடத்திட்டத்தில் கற்றுத் தரப்படுகின்றன.

ஏ.என்.எம்./ஹெச்.டபிள்யூ (எஃப்): 'ஆக்ஸிலரி நர்ஸ் மிட்வைஃப் அண்ட் ஃபீமேல் ஹெல்த் வொர்க்கர்' (Auxiliary Nurse Midwife / Female Health Worker) என்கிற இரண்டாண்டு சான்றிதழ் படிப்பு, பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்படுகின்றன. இதில் கிராமப்புறங்களில் வசிக்கும் குழந்தைகள், பெண்கள் மற்றும் தனிநபர்களுக்கு சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான அம்சங்களை எப்படிப் பயிற்றுவிப்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்படும். இதில் சேர ப்ளஸ் டூ-வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும்.

டிப்ளோமா இன் போஸ்ட் பேஸிக் நர்ஸிங்: இது இரண்டரை ஆண்டு படிப்பு. பட்டப்படிப்புக்கு இணையான இந்தப் படிப்பில் சேர, ஜி.என்.எம் டிப்ளோமா பெற்றிருக்க வேண்டும். நர்ஸிங் பற்றிய கூடுதல் பாடங்கள் கற்றுத்தரப்படும்.

பி.எஸ்சி. நர்ஸிங்: இது நான்கு ஆண்டு படிப்பு. இதைத் தேர்ந்தெடுப்பவர்கள், ப்ளஸ் டூ வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களை படித்திருக்க வேண்டும். இதில் நர்ஸிங், முதல் உதவி, பேறுகால மருத்துவப் பணியியல் குறித்த அடிப்படைத் தொழில் நுணுக்கங்கள் பாடமாகவும், பயிற்சியாகவும் கற்றுத்தரப்படும்.

எம்.எஸ்சி. நர்ஸிங்: இது, இரண்டாண்டு படிப்பு. இதில் சேர்வதற்கு பி.எஸ்சி. நர்ஸிங் அல்லது டிப்ளோமா இன் போஸ்ட் பேஸிக் நர்ஸிங் படித்திருக்க வேண்டும். இந்தத் துறையில் ஆசிரியர் பணியைத் தொடர விரும்புபவர்களுக்கு இந்தப் படிப்பு உதவிகரமாக இருக்கும்.

படிப்பு மற்றும் தகுதிகளைப் பட்டிய லிட்ட பிரசன்னா பேபி, ''நர்ஸிங் துறையில் பிஹெச்.டி. படிப்பையும் மேற்கொள்ளலாம். அரசு கல்லூரிகளில் ஆரம்பகட்டப் படிப்புகளில் ப்ளஸ் டூ மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவ - மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

சென்னை, மதுரை, சேலம் போன்ற இடங்களில் உள்ள அரசு நர்ஸிங் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம். இதற்கெனவே ஆண்டுதோறும் மருத்துவ கல்வி இயக்ககம் கலந்தாய்வு நடத்துகிறது. இதில் பங்கேற்பதற்கு உரிய வகையில் விண்ணப்பித்து, அதன் மூலமாக அரசு கட்டணத்தில் படிக்கலாம். தனியார் கல்லூரிகளைப் பொறுத்தவரை நேரடி சேர்க்கைதான் நடக்கிறது. இங்கே ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்ச ரூபாய் வரை கட்டணமாக வசூலிக் கப்படுகிறது'' என்று சொன்னார்.

நர்ஸிங் துறையில் ஆண்களுக்கான வாய்ப்புகள், வெளிநாட்டு வேலை அனு பவங்கள், இத்துறையிலிருக்கும் ப்ளஸ், மைனஸ் மற்றும் சிறப்புகள் பற்றியெல்லாம்... அடுத்த இதழில்.

அறிவோம்...

பயிற்சிகள்!

நர்ஸ் என்பவர் யார், அவருடைய கடமைகள், நோயாளிகளை அணுகும் முறைகள், மருந்து மாத்திரைகள், உபகரணங்களை கையாள்வது உள்ளிட்ட அனைத்துவிதமான பயிற்சிகளும் நர்ஸிங் படிப்பில் ஒவ்வொரு ஆண்டும் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுத்தரப்படும். மேலும் கிராமப்புறங்களுக்கு சென்று பணியாற்றுவது, மருத்துவமனைக்கு சென்று பயிற்சி பெறுவது, பேறுகால பயிற்சி போன்றவையும் கற்றுத்தரப்படுவதோடு, மருந்து மாத்திரைகள் பற்றி மருத்துவரீதியாகவும் கற்றுத்தரப்படும்.

பணி வாய்ப்புகள்!

இந்தியா மட்டுமின்றி, உலகெங்கிலும் திறமையான, தகுதியுடைய நர்ஸுகளுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதை பூர்த்தி செய்வதற்காக கூடுதல் கல்லூரிகள், மாணவர்களுக்கு ஊக்கத் தொகை என்று இந்திய அரசு மற்றும் மாநில அரசு களின் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால் இத் துறையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

'இந்தியாவில் நோயாளிகளுக்கும் நர்ஸ்களுக்குமான விகிதம் மிகக்குறை வாக இருக்கிறது. இதை சரிசெய்ய வேண்டுமானால், அடுத்த சில ஆண்டு களில் 6 லட்சத்துக்கும் அதிகமான நர்ஸுகள் தேவைப்படுவார்கள்' என்று கணிக்கப்படுகிறது.

தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் தொடங்கி, நர்ஸிங் ஹோம்கள், கிளினிக்கு கள், குழந்தை காப்பகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார மையங்கள், அனாதை ஆசிரமங்கள், முதியோர் இல்லங்கள், என்.ஜி.ஓ. அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் என பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்புகள் குவிந்துகிடக்கின்றன.

இந்தப் பணிகளுக்கான சம்பளம்... அனுபவம் மற்றும் திறமையைப் பொறுத்தே முடிவு செய்யப்படுகிறது. எனவே, நர்ஸிங் படிப்பவர்கள், படிப்பின்போதே தொழில்ரீதியில் தங்களை மெருகேற்றிக் கொண்டால்... சீக்கிரமே நல்ல சம்பளத்தை வாங்க முடியும். ஆரம்ப சம்பளமாக 10 ஆயிரம் தொடங்கி, பல லட்ச ரூபாய் வரை பெறலாம். வெளிநாடுகள் என்றால் 30 ஆயிரம் தொடங்கி பல லட்ச ரூபாய் வரை கிடைக்கும். வெளிநாடுகளில் பணிபுரிய விரும்புபவர்கள்... நர்ஸிங்கில் பி.எஸ்சி, அல்லது எம்.எஸ்சி. படித்திருக்க வேண்டும். குறிப்பாக பிரிட்டன், அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நர்ஸிங் படித்தவர்களுக்கு எப்போதுமே தேவை அதிகமாக இருக்கிறது.

அரசு மருத்துவமனை, ரயில்வே உள்ளிட்ட நிறுவனங்கள்... ஆண்டுதோறும் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்புகளை வெளியிட்டு, தேர்வுகளையும் நடத்தி, ஆட்களை வேலையில் சேர்க்கின்றன.