Published:Updated:

உருக்குலைத்த விபத்து... உயர வைத்த தன்னம்பிக்கை..!

வே.கிருஷ்ணவேணி, படம்: ஆ.முத்துக்குமார்

உருக்குலைத்த விபத்து... உயர வைத்த தன்னம்பிக்கை..!

வே.கிருஷ்ணவேணி, படம்: ஆ.முத்துக்குமார்

Published:Updated:
##~##

 ன்பதாவது படித்துக் கொண்டிருந்த மாளவிகா... விளையாட்டாக ஒரு விபத்தில் சிக்கியபோது, பறிபோயின இரண்டு கைகள். ஆனால், அடுத்தடுத்து துளிர்த்த நம்பிக்'கை'கள், இன்றைக்கு ஒரு சாதனை மனுஷியாக அவரை ஊருக்கு அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றன. சாதாரண கஷ்டங்களுக்கே... 'ச்சே என்ன இந்த வாழ்க்கை?' என்று வெறுக்கும் பலருக்கும்... 'வாழ்வென்றால் போராடும் போர்க்களமே' என்பதை புரிய வைக்கிறது மாளவிகாவின் அடுத்தடுத்த வெற்றிகள்!

ஆம், தன் மீது விழுந்த பரிதாபப் பார்வைகளுக்கெல்லாம்.... பள்ளி இறுதி வகுப்பு தனித் தேர்வர்களில் முதலிடம், பி.எஸ்சி, எம்.எஸ்சி, எம்ஃபில் என்று வரிசையாக பட்டங்கள்; பிஹெச்.டி செய்வதற்கான முயற்சி; சமூக சேவகர், ஆராய்ச்சியாளர்... இப்படி பலவித பரிமாணங்கள் காட்டி, இந்த பத்தாண்டுகளில் படுவேகமெடுத்து ஜொலித்துக் கொண்டிருக்கிறார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை, ஷெனாய் நகரில் தாயுடன் வசிக்கும் மாளவிகாவை சந்தித்தோம்.

''கும்பகோணம்தான் பூர்விகம். ஆனா, அப்பாவோட வேலை காரணமா என்னோட சின்ன வயசுல, ராஜஸ்தான் மாநிலம், பிக்கானிர் பகுதியில எங்க குடும்பம் இருந்துச்சு. ஒன்பதாவது படிக்கறப்பவே கதக், மியூசிக், டிராயிங், எம்ப்ராய்டரினு பல திறமைகளை வளர்த்துக்கிட்டேன். அந்த சமயத்துல, ஒரு நாள் பிக்கானிர் ஆயுத கிடங்குல ஏற்பட்ட தீ விபத்துல சிதறின ஒரு குண்டு, எங்க வீட்டுக்குப் பக்கத்துல வந்து விழுந்துச்சு. விளையாட்டுத்தனமா அதை எடுத்து வீட்டுல வெச்சுருந்தேன். ஒரு நாள் அதை வெச்சு விளையாடிட்டு இருந்தப்ப, 'டமார்’னு வெடிச்சதுல... கை ரெண்டும் முழங்கை வரை சிதறிடுச்சு. இது நடந்தது 2002 மே மாசம். அப்ப எனக்கு வயசு 14.

உருக்குலைத்த விபத்து... உயர வைத்த தன்னம்பிக்கை..!

என்னைப் பார்க்க வந்தவங்கள்ல பலரும், 'கை இல்லாம இனி என்ன பண்ணப் போறியோ?’னு பரிதாபப்பட்டாங்க. கை போனதைவிட, இந்த பரிதாபங்கள்தான் என்னை அதிகமா கஷ்டப்படுத்திச்சு 'ஒண்ணும் கவலைப்படாதே... உன்னால முடியும். தைரியத்தை கைவிட்டுடாதே’னு சொல்லிச் சொல்லி அம்மாதான் தேத்தினாங்க. அவங்க கொடுத்த நம்பிக்கையில... அடுத்த ஒண்ணரை வருஷத்துல எழுந்து நின்னேன்'' என்று சொல்லும் மாளவிகா, மேல்சிகிச்சைக்காக சென்னை வந்திருக்கிறார்.

''சென்னைக்கு வந்த நாலு மாசத்துல தனியார் கோச்சிங் சென்டர் மூலமா பத்தாவது படிச்சு, 97% மார்க் வாங்கி, மாநில அளவுல தனித்தேர்வர்கள்ல முதல் இடம் பிடிச்சது, என்னோட மிகப்பெரிய சாதனை. இதைப் பார்த்துட்டு நிறைய ஸ்கூல்ல இருந்து ஃப்ரீ ஸீட் கொடுக்கறேன்னு அழைச்சாங்க. வீட்டுக்குப் பக்கத்திலேயே இருந்த அண்ணா ஆதர்ஷ் ஸ்கூல் காமர்ஸ் குரூப்ல சேர்ந்தேன். ஃப்ரீ ஸீட் கொடுத்தவங்க பேரை காப்பாத்த, தீவிரமா படிச்சு பன்னிரண்டாம் வகுப்புல 95% மார்க் எடுத்தேன். பிறகு, டெல்லி செயின்ட் ஸ்டீபன் காலேஜ்ல பி.ஏ. எக்கனா மிக்ஸ், ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க்ஸ்ல மாஸ்டர் டிகிரி எல்லாம் முடிச்சு, டெல்லி யிலயே பெண்களுக்கான பாதுகாப்பு, விழிப்பு உணர்வு மற்றும் கற்றல்திறன் குறை பாடு உள்ள குழந்தைகள் பற்றிய ஆராய்ச்சி களை செய்து, எம்.ஃபில் முடிச்சேன்'' என்பவருக்கு, 2004-ம் ஆண்டிலேயே 'விஸ்டம் இன்டர்நேஷனல்' பத்திரிகை, 'அவுட்ஸ் டாண்டிங் மாடல் ஸ்டூடென்ட் அவார்டு’ கொடுத்திருக்கிறது. தி.மு.க. அறக்கட்டளையின் ஒரு லட்ச ரூபாய் நிதி, அன்றைய கேரளா முதல்வர் உம்மன் சாண்டியின் பணப் பரிசு,  அப்துல் கலாமின் பாராட்டுகள் என்று அள்ளிக் குவித்திருக்கிறார் அப்போதே!

''இப்பகூட, குடும்பமும் சமுதாயமும் மாற்றுத்திறனாளிகளைப் பார்க்கிற விதம் பத்தி ஒரு கட்டுரையை சென்னை பல்கலைக் கழகத்துல சமர்ப்பிச்சேன். இதுக்காக இந்த வருஷத்துக்கான 'ரோலிங் கப் அவார்டு’ கொடுத்திருக்காங்க'' என்றபடியே தான் வாங்கிக் குவித் திருக்கும் பரிசுகளை நம் முன் அடுக்கினார் மாளவிகா.

உருக்குலைத்த விபத்து... உயர வைத்த தன்னம்பிக்கை..!

அத்தனையையும் பெருமிதத் தோடு பார்த்துக் கொண்டிருந்த அம்மா ஹேமா, ''எப்பவும், 'உனக்கு பரிசு முக்கியமில்லை. உன்னோட உடல் நிலைமையைப் பார்த்து யாரும் பரிதாபப்படற அளவுக்கு இல்லாம, பலருக்கும் ஒரு ரோல் மாடலா இருக்கறதே உனக்குக் கிடைச்ச வெற்றிதான்’னு தன்னம் பிக்கை ஊட்டிக்கிட்டே இருப்பேன். அந்த தன்னம்பிக்கைதான் அவ ளோட வெற்றிக்கு முக்கிய கார ணம்'' என்றார் பெருமிதமாக.

தொடர்ந்த மாளவிகா, ''நீங்க ஒரு கையால செய்ற வேலைகளை, நான் ரெண்டு கையால செய்றேன். அவ்வளவுதான் எனக்கும், மத்தவங்களுக்குமான வித்தியாசம். இப்போ மறுபடியும் டான்ஸ் மூவ்மென்ட் களை போட முயற்சி செஞ்சுட்டு இருக்கேன். இன்னொண்ணு தெரி யுமா... நான் கவிதையும் எழுதுவேன்'' என்றவர், சிலவற்றை வாசித்துக் காண்பித்துவிட்டு,

''மாற்றுத்திறனாளிகள் படிக்கிற ஸ்கூல்ல நான் படிக்கல. என்கூட இருந்த ஃப்ரெண்ட்ஸ் யாரும் என்ன விலக்கி வைக்கல. அதனால தான் இன்னிக்கு இவ்வளவு தூரம் வர முடிஞ்சுது. இதேபோல எல்லா மாற்றுத் திறனாளிகளுக்கும் வாய்ப்பு கிடைக்கணும். எங்களை பரிதாபமா பார்க்கறத விட்டுடுங்க. பலவீனங் களைப் பத்தி பேசறதையும் விட்டு டுங்க. அதெல்லாம் ரொம்பக் காயப் படுத்தும். மாற்றுத்திறனாளிங்க மேல உங்களுக்கு அக்கறை இருக் குனு நினைச்சா... இதை மட்டும் செய்தாலே போதும்...'' என்று நெகிழ்ச்சியான குரலில் வேண்டு கோள் வைத்தார்!

நிஜம்தானே!

******

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism