Published:Updated:

''வெற்றிக்கு வழி சொல்லும் டீம் வொர்க்..!''

மகிழ்ச்சியில் பொங்கும் மகளிர் வங்கித் தலைவிம.பிரியதர்ஷினி, படங்கள்: க.பாலாஜி

''வெற்றிக்கு வழி சொல்லும் டீம் வொர்க்..!''

மகிழ்ச்சியில் பொங்கும் மகளிர் வங்கித் தலைவிம.பிரியதர்ஷினி, படங்கள்: க.பாலாஜி

Published:Updated:
##~##

யிரம் கோடி ரூபாய் முதலீட்டுடன், இந்திய வரலாற்றில் முதல்முறையாக... ஆரம்பமாகிவிட்டது... 'பி.எம்.பி.' என்று சுருக்கமாக அழைக்கப்படும்... 'பாரதிய மகிளா பேங்க்'! நவம்பர் 19 அன்று... பெண்களுக்கென்றே பிரத்யேகமாக துவங்கப்பட் டிருக்கும் இந்த வங்கியின் 'சேர்பர்சன் மற்றும் மேனேஜிங் டைரக்டர்' எனும் மிகப்பெரிய பொறுப்பை ஏற்றிருக்கிறார்... தமிழகத்தைச் சேர்ந்த உஷா அனந்த சுப்ர மணியன்! அறிவிப்பு வெளியான ஐந்தரை மாதங்களிலேயே வங்கியை ஏழு இடங்களில் நடைமுறைக்குக் கொண்டு வந்திருப்பதில் ஏகபெருமை, உஷாவுக்கு!

மத்திய நிதியமைச்சர், நிதியமைச்சகத் துறை செயலாளர்கள், வங்கிகளின் உயர் அதிகாரிகள் என்று பலரிடமும் சர்வசாதாரணமாக பேசும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருக்கும் 'பவர்ஃபுல்' பெண்மணி. புத்தம் புது வங்கியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் வேலைகளில் பிஸியாக இருக்கும் உஷா, இடையில் நமக்காகவும் கொஞ்சம் நேரம் ஒதுக்கினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனி, அவரிடம் பேசியதிலிருந்து...

''பிப்ரவரி 28, 2013 அன்றுதான், பெண்களுக்கு என்று தனி வங்கி துவங்க இருப்பதை அறிவித்தார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். அதையடுத்து, நானும் என் குழுவினரும் இணைந்து ப்ளூ பிரின்ட் ஒன்றை ரெடி செய்து அமைச்சரிடம் கொடுத்தோம். பல்வேறு வங்கிகளில் வேலையில் இருந்த பெண்கள் சிலரை ஒருங்கிணைத்து, கமிட்டியை ஆரம்பித்து, என்னைத் தலைவியாக

''வெற்றிக்கு வழி சொல்லும் டீம் வொர்க்..!''

நியமித்தார். தனியாக வங்கி துவங்குவதில் ஆரம்பித்து, அதன் செயல்பாடுகள் எப்படிஎல்லாம் இருக்க வேண்டும், எதற்கெல்லாம் கடன் கொடுக்கலாம், பெண்களை எப்படி இந்த வங்கியை நோக்கி ஈர்ப்பது என்பது வரை கமிட்டி உறுப்பினர்கள் கலந்து பேசினோம். அதன் விளைவாகத்தான் நவம்பர் 19 அன்று, சென்னை, மும்பை, கொல்கத்தா, கவுஹாத்தி, பெங்களூரு, அகமதாபாத், லக்னோ என ஏழு இடங்களில் வங்கித் தொடங்கப்பட்டுவிட்டது. இந்த வங்கியில் பணிபுரிபவர்கள்... பெரும்பாலும் பெண்கள்தான். இவர்கள், பல வங்கிகளில் வேலை பார்த்தவர்கள். உதாரணமாக, சென்னை வங்கிக் கிளையின் தலைவியாக இருக்கும் நித்யசுந்தரி, 'பேங்க் ஆஃப் பட்டியாலா'வில் பணியாற்றியவர்.

பெண்கள் எந்த வேலை செய்தாலும் கடும் உழைப்பைக் கொட்டுவார்கள். அதையேதான் நானும் செய்தேன். அத்தனை ஆண்களுக்கு இடையிலும் என்னை மேலே கொண்டு வந்தது... உழைப்பு. என் வெற்றிக்கு காரணமாக நினைப்பது டீம் வொர்க். என்னதான் நீங்கள் உயர்பதவியில் இருந்தாலும், கீழே வேலை பார்க்கும் குழுவை ஒருங்கிணைத்து செல்லத் தெரியவில்லை என்றால்... அது உங்களின் தோல்வியே!'' என்று தீர்க்கமாகச் சொல்லும் உஷா... படித்தது... வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான்.

''வெற்றிக்கு வழி சொல்லும் டீம் வொர்க்..!''

''மயிலாப்பூரில் பள்ளிப் படிப்பு, பிரசிடென்ஸி கல்லூரியில் பி.எஸ்சி, மெட்ராஸ் யுனிவர்ஸிட்டியில் எம்.எஸ்சி ஸ்டாஸ்டிக்ஸ் என முடித்த நான், சென்னை, அண்ணா சாலை எல்.ஐ.சி-யில் முதலில் வேலையில் சேர்ந்தேன். 82-ல் திட்ட அதிகாரியாக, 'பேங்க் ஆஃப் பரோடா'வில் பணியாற்றினேன். கேரளா, ஆந்திரா, தமிழ் நாடு, பாண்டிச்சேரி ஆகிய பகுதிகள் என் பொறுப்பில். ஒவ்வொரு மாநில மக்களும் ஒவ்வொரு குணாதிசயம் கொண்டவர்கள். அந்தக் காலகட்டம் எனக்கு மிகவும் பிடித்த தாக இருந்தது. பிறகு, பஞ்சாப் நேஷனல் பேங்கில் இரண்டு வருடம் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர். இப்போது மகளிர் வங்கி தலைவி!'' என்று சிரிக்கிறார் உஷா.

கணவர் அனந்த சுப்ரமணியன் கம்பெனி செகரட்டரியாக மும்பையில் பணிபுரிகிறார். மகன், 'வெங்கட் ஆனந்த்' என்கிற பெயரில் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளராக டெல்லியில் பணியாற்றுகிறார். மகனுடன் டெல்லியில் வசிக்கும் இவருடைய இன்னொரு குடும்ப உறுப்பினர்... செல்ல நாய் ஆப்பிள்!

மகளிர் வங்கியின் திட்டங்கள் சில...

ஆண்களும் கணக்கு ஆரம்பிக்கலாம். கடனும் வாங்கலாம். பெண்களுக்குப் பயன்படும் வகையிலான தொழில்களைச் செய்யும் ஆண்களுக்கும் கடன் தரப்படும். உதாரணமாக, பெண்களுக்கான நைட்டி உற்பத்தி செய்கிறவர், பெண்களுக்கு 40 சதவிகிதம் வேலைவாய்ப்பு தருகிற கம்பெனிகள் இப்படி பல.

•  பொதுவுடமை வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நான்கு சதவிகிதம் வட்டி தரப்படுகிறது. இங்கு நாலரை சதவிகிதம் வட்டி. ஒரு லட்சத்துக்கு மேல் இருப்பு வைத்திருப்பவர்களுக்கு ஐந்து சதவிகித வட்டி.

•  டே கேர் சென்டர் ஆரம்பிக்க, வீட்டில் இருந்தபடியே ஊறுகாய், மதிய உணவு தயாரிக்க, கூடுதல் ஆட்களை நியமித்து தொழிலை விரிவுபடுத்த... என பலவாறாக கடன் திட்டங்கள் உண்டு. இவற்றுடன் கார், வீடு, வீட்டு உபயோக பொருட்கள் என மற்ற வங்கிகள் போலவே கடன் கொடுப்பது இங்கும் உண்டு.

•  இல்லத்தரசி, வேலைக்கு போவோர், சுயதொழில் செய்ய விரும்புவர்கள் என தன்மைக்கேற்ப சேமிப்பதற்கும், கடன் வாங்குவதற்கும் சொல்லித் தருவது; ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் என்.ஜி.ஓ-க்களுடன் கைகோத்து, வெற்றிகரமான சுயஉதவிக் குழுக்களை அடையாளம் கண்டு கடன் கொடுப்பது; திறமையான மகளிருக்கு சுயதொழில் கற்றுக்கொடுத்து, கடன் கொடுப்பது; விவசாயம் செய்யும் பெண்களுக்கு கடன் கொடுப்பது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism