##~## |
''இந்த உலகத்திலேயே நாம்தான் சரியான ரொமான்ஸ் தம்பதி’' என்று அடிக்கடி சொல்லிக் கொள்வதில்... என்னவருக்கும் எனக்கும் ஏக கர்வம்தான்! வீட்டு வேலைகள் தொடங்கி... ரொமான்ஸ் வரை எல்லாவற்றிலுமே ஃபிப்டி ஃபிப்டிதான்!
சமையலறையில் வேலை செய்து கொண்டிருக்கும்போது, எதிர்பாராமல் வந்து கட்டிப்பிடிப்பார். ''நீங்கள் என்ன சினிமா ஹீரோவா?'' எனக் கேட்டால், ''நான் ரியல் ஹீரோ... என் செல்லக்குட்டியை இப்படித்தான் கட்டிப்பிடிப்பேன்'' என்று கொஞ்சுவார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சாயங்காலம் ஆபீஸிலிருந்து வரும்போது ஸ்வீட்ஸ் வாங்கி வருவார். அதை என் வாயில் மொத்தமாக வைத்து, அவருடைய பங்கை என் வாயிலிருந்து கடித்துக் கொள்வார். நானும் அப்படியே. இதேபோல்தான் சப்போட்டா பழத்தையும் கடித்து உண்போம். இப்படி சாப்பிடும்போது பழத்தின் 'டேஸ்ட்’டே தனிதான். ஆம்... இனிக்காத பழம்கூட இனிக்கும். வாரத்தில் இரண்டு, மூன்று தடவையாவது இப்படிச் சாப்பிடாவிட்டால், அந்த வாரம் நிறைக்காது எங்களுக்கு!

டி.வி. பார்க்கும்போதெல்லாம்... முத்தமழைதான். ஒருவர் மீது ஒருவர் மடியில் படுத்துக்கொண்டு மாறிமாறி முத்தங்களில் கொஞ்சுவோம்.
ஞாயிற்றுக்கிழமை எங்களுக்கு 'ஸ்பெஷல் டே’தான். ஏனென்றால், அன்று முழுவதும் எல்லா கவலை, வேலைகளையும் தூர வைத்துவிட்டு விளையாடுவோம். அவர் என்னை உப்புமூட்டை தூக்குவார். சிலநேரம் 'எப்படா கொஞ்சுவார்?’ எனத் தோன்றும். அவர் அமைதியாக இருந்தாலும், நான் அவரை என் அன்பு முத்தங்களால் நனையவிடுவேன். அவர், என்னைக் குளிக்க வைப்பார். நான் அவரைக் குளிக்க வைப்பேன்.
நான் மல்லிகைப்பூ வைத்துக் கொண்டால், சாருக்கு மூட் பற்றிக் கொள்ளும். அளவுக்கு அதிகமாக கொஞ்ச ஆரம்பித்துவிடுவார். அதற்காகவே தேடிப்போய் மல்லிகைப்பூ வாங்கி வந்து வைத்துக் கொள்வேன். வேலை விஷயமாக வெளியூர் சென்று வந்தால்... கை, கால்களை அமுக்கிவிடுவேன். அவரும் அப்படியே!
முத்தப் பரிமாற்றம் இல்லாமல், ஒரு நாளும் அவர் வெளியே கிளம்பியதில்லை. தலை முதல் கால் வரை முத்த விளையாட்டுதான்!

அந்த 3 நாட்கள் வந்தாலே... பெண்களுக்கு அலர்ஜி. ஆனால், என்னவரோ... அந்த நாட்களும் இன்னும் வரவில்லையே என்று ஏங்க வைத்துவிடுவார். வீட்டு வேலைகள் அனைத்தையும் அவரே பார்ப்பார். முழுக்க முழுக்க எனக்கு 'ரெஸ்ட்’. அந்த நாட்களில் பூரண 'ரெஸ்ட்’ கிடைப்பது என்பது எத்தனை சந்தோஷம் என்று நமக்குத்தானே தெரியும்!
'எத்தனை ஜென்மம் எடுத்தாலும். இவனே எனக்குத் துணைவனாக வரவேண்டும் இறைவா!'
- இதுதான் என்னுடைய ஒரே வேண்டுதல்... எப்போதுமே!
- மேட்டுப்பாளையம் வாசகி
ரொமான்ஸ் சீக்ரெட்!
ரசிக்கத்தக்க உங்களின் ரொமான்ஸ்களை... பகிர்ந்து கொள்ளுங்களேன். சிறப்பான ரொமான்ஸ்களுக்கு எலெக்ட்ரிக் ரைஸ் குக்கர் பரிசாகக் காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய முகவரி: 'ரொமான்ஸ் சீக்ரெட்!’,
அவள் விகடன், 757 அண்ணா சாலை, சென்னை - 600 002. இ-மெயிலிலும் அனுப்பலாம்: aval@vikatan.com