Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

Published:Updated:
##~##

மீண்டும் ஒரு பாலியல் வக்கிர விவகாரம், பாரதத்தையே பரபரப்பாக்கிஇருக்கிறது. இம்முறை, இது 'மக்களின் பாதுகாவலன்' எனப்படும் பத்திரிகை வட்டாரத்தில் அரங்கேறியிருக்கிறது என்பதுதான் பேரதிர்ச்சி. சட்ட அறிவு, சமயோஜித புத்தி, உலக ஞானம், தைரியம்... என பலவற்றையும் வளர்த்துக்கொள்ள ஏற்ற துறை என்று கருதப்படும் பத்திரிகைத் துறையிலேயே ஓர் இளம்பெண் நிருபருக்கு, இப்படி ஓர் அநீதி!

'டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பரிதாபமாக உயிரிழந்த வழக்கை, போலீஸ் அதிகாரிகள் கொஞ்சம்கூட புரிந்து கொள்ளா மல், இயந்திரத்தனமாக நடத்துகிறார்கள்’ என்று ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியவர், 'தெஹல்கா' எனும் புகழ்பெற்ற புலனாய்வு பத்திரிகை யின் ஆசிரியர் தருண் தேஜ்பால். இந்த சிங்கம், தன் அலுவலகத்தில் பணிபுரியும் இளம் மானிடம், தன் அசிங்க முகத்தைக் காட்டியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தருண் சீண்டியிருப்பது, மகளின் வயதே கொண்ட ஒரு பெண்ணைத்தான். அவர், தருணுடைய மகளின் தோழியும்கூட என்பது கூடுதல் அதிர்ச்சி!  'யாரைத்தான் நம்புவதோ... பேதை நெஞ்சம்? அம்மம்மா... பூமியிலே  யாவும் வஞ்சம்’ என்கிற வரிகள்தான் நினைவலையில் நீந்துகின்றன!

நமக்குள்ளே...

'யோக்கியன்', 'பெண்களுக்கு எதிரான அநியாயங்களைத் தட்டிக்கேட்ட உத்தமன்' என இழக்கக் கூடாத பட்டங்கள் பலவற்றையும் தன்னகத்தே கொண்டிருக்கும் தருண் போன்றவரே, இப்படி ஒரு காரியத்தில் ஈடுபடுகிறார் என்றால்... இழப்பதற்கு எதுவுமே இல்லாத நபர்களால், நாடு முழுக்க வேலைக்குச் செல்லும் பெண்கள், எத்தனை எத்தனை அவஸ்தைகளை அனுபவிப்பார்கள்?

சைகை, வார்த்தை, உடல்ரீதியாக என பலவாறாக இம்சிக்கப்படும் பெண்களின் நிலையை, ஆராய்ச்சி மணியடித்து உணர வைத்திருக்கிறார் இளம்பெண் நிருபர். இது, குற்ற நெஞ்சங்களைக் குறுகுறுக்கச் செய்திருக்கும் அதேவேளையில், கண்டும் காணாமல், 'நெட்டை மரங்களென நின்று புலம்பும்’ பலரின் மனசாட்சியையும் உலுக்கவே செய்திருக்கும்.

'ஒற்றுமை இல்லாமல் தனித்தனியாக செல்லும்போதுதான் சிங்கத்தால் தாக்கப்படக் கூடிய அபாயம் அதிகம். கூட்டம் கூட்டமாக சேர்ந்து இருந் தால்... பாதுகாப்பு தானாகவே வந்துவிடும்’ எனும் பழங்கதை சொல்லும் பாடம், வேலைக்கு செல்லும் பெண்கள் அத்தனை பேருக்கும் இனி, வேதம்!

'வீட்டுக்குள்ளே பெண்ணை மீண்டும் பூட்டி வைப்போம்' என்று புதுவிந்தை மனிதர்கள் புறப்பட்டு வர, நாம் இடம் கொடுத்துவிடக் கூடாதல்லவா தோழிகளே!

உரிமையுடன்

நமக்குள்ளே...

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism