Election bannerElection banner
Published:Updated:

‘அட்டைப்படத்தில் நீங்கள்’ - போட்டி முடிவுகள் ஆரம்பம்!

இந்துலேகா.சி

##~##

 ஹாய் கேர்ள்ஸ்..!

அவள் விகடன் 16-ம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஸ்பெஷல் அட்ராக்ஷனாக... 'அட்டைப்படத்தில் நீங்கள்’ போட்டியை அறிவித்திருந்தோம். இதற்கு நீங்கள் கொடுத்த ரெஸ்பான்ஸ்... பிரமாதம்! போஸ்ட், கொரியர், இ-மெயில்... மட்டுமல்லாது... சிலர், நேரில் வந்த தேவதையாக, அலுவலகம் தேடி வந்து போட்டோக் களைக் கொடுத்துச் சென்றது... சர்ப்ரைஸ்!

அப்பப்பா... எத்தனை ஐஸ்வர்யா ராய், எத்தனை ஆண்ட்ரியா... ஆகமொத்தம் செலக்ஷன் டீமை ஒரு வழி செய்துவிட்டீர்கள். பதினாறு, இருபத்தியன்று இவற்றோடு போட்டிப் போட்டுக் கொண்டு ஆன்ட்டீஸ் மற்றும் பாட்டீஸ்களும் பட்டையக் கிளப்பி விட்டீர்கள். கூடவே, நண்டுசிண்டுகளும்கூட போட்டோக்களை  அனுப்பி அசரடித்துவிட்டார்கள். 

'அவள் விகடன்' மீது நீங்கள் வைத்திருக்கும் அளவிலாத  அன்புக்கு...  ரொம்ப தேங்க்ஸ்!

இந்தப் போட்டியில் செலக்ட் ஆன சிண்ட்ரெல்லாக்களின் 'ராம்ப் வாக்’, இனி தொடரும்...

‘அட்டைப்படத்தில் நீங்கள்’ - போட்டி முடிவுகள் ஆரம்பம்!

இந்த இதழ் அட்டையை அலங்கரிக்கும் பியூட்டி... கேரளாவில் வசிக்கும் சீதாலஷ்மி.

''என்னோட சொந்த ஊரு கொச்சின். அப்பா ஹரிஹரன், அம்மா கீதா, அண்ணா ராமநாதன், அப்புறம் கடைக்குட்டிதான் நான். பூர்விகம் தமிழ்நாடுதான். ஆனா, நான் பிறந்தது, வளர்ந்ததெல்லாம் கேரளா. கொச்சியில பி.டெக். கெமிக்கல் இன்ஜினீயரிங் படிச்சுட்டு, இப்போ கோயமுத்தூர்ல எம்.பி.ஏ பண்ணிட்டிருக்கேன். படிக்கும் போதே கேரளாவுல தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டா இருந்தேன். சென்னை யில கூட ஷோ பண்ணியிருக்கோம். அப்புறம் மலையாள மியூஸிக் ஆல்பத்துல ஹீரோயின் ரோல் பண்ணியிருக்கேன். மலையாள சேனல் 'கைரளி'யில காம்பயரிங்கூட பண்ணிட்டிருந்தேன்.

என்னோட அப்பாவுக்கு எழுதறதுனா ரொம்ப இன்ட்ரஸ்ட். தமிழ், மலையாள இதழ்களுக்கு நிறைய எழுதி அனுப்பிட்டே இருப்பார். அவள் விகடனுக்குகூட டிப்ஸ் எல்லாம் எழுதியிருக்கார். அவர்தான், 'அட்டைப்படத்தில் நீங்கள்’ போட்டியில என்னை கலந்துக்க சொன்னார். இப்போ நான் செலக்ட் ஆனதுல என்னைவிட, அப்பாவுக்குத்தான் ரொம்ப ரொம்ப சந்தோஷம். 'தமிழ்ல வர்ற நம்பர் ஒன் பெண்கள் இதழோட அட்டைப்படத்துல என் பொண்ணோட போட்டோ வரப்போகுது!'னு தன் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட எல்லாம் சொல்லி சொல்லி சந்தோஷப்பட்டுட்டிருக்கார். அண்ணா, அம்மா, என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாருமே... 'புக் எப்போ வரும்?'னு காத்துட்டே இருக்கோம்'' என்று சிலிர்த்த சீதாலஷ்மி,

''தாங்ஸ் டு அவள் விகடன்...!'' என்றார் நெகிழ்ச்சியுடன்.

அட்டைப்படத்தில் நீங்கள் !

16 முதல் 25 வயதுக்குட்பட்ட பெண்ணா நீங்கள்? உங்களுடைய சமீபத்திய‌ போர்ட்ஃபோலியோ, தரமான மற்றும் தெளிவான முழு புகைப்படம் ஆகியவற்றை எங்களுக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படுபவர், அவள் விகடன் அட்டைப்படத்தில் இடம் பிடிப்பதோடு... அழகான 'Tab’ பரிசாகக் காத்திருக்கிறது!

அனுப்ப வேண்டிய முகவரி: 'அட்டைப்படத்தில் நீங்கள்', அவள் விகடன், 757 அண்ணா சாலை, சென்னை - 600 002. இ-மெயிலிலும் அனுப்பலாம்: aval@vikatan.com

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு