Published:Updated:

தைரியம் கொடுத்த தையல்!

வே.கிருஷ்ணவேணி, செ.கிரிசாந், படங்கள்: ப.சரவணக்குமார், தே.தீட்சித்

தைரியம் கொடுத்த தையல்!

வே.கிருஷ்ணவேணி, செ.கிரிசாந், படங்கள்: ப.சரவணக்குமார், தே.தீட்சித்

Published:Updated:
##~##

'அவள் விகடன்' சார்பில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடாகிறது என்றால், அப்படி ஓர் ஆர் வத்தோடு தோழிகள் வந்து குவிவது வாடிக் கையாகி விட்டது. காரணம்... 'இந்த நிகழ்ச்சி மூலமாக கிடைக்கப்போகும் பலன்கள், நூற்றுக்கு நூறு நம் வாழ்க்கைக்கு பயன்படும்' என்று வாசகிகள் நம்புவதுதான். அந்த வகையில், 'மதுரா கோட்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து, 'நீங்களும் தொழிலதிபர் ஆகலாம்’ என்ற தலைப்பில், சென்னையில் 'அவள் விகடன்' ஏற்பாடு செய்திருந்த அலங்கார தையல் பயிற்சிக்கு... வெள்ளமென வந்து குவிந்துவிட்டனர் தோழிகள்!

நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய இரண்டு தேதிகளில் தி.நகர், ஜே.ஒய்.எம் திரு மண மண்டபத்தில், காலை 10 மணி முதல் 12 மணி வரை, மதியம் 2 மணி முதல் 4 மணி வரை என இரண்டு பகுதிகளாக பிரித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 350 ரூபாய் மதிப் புள்ள தையல் பொருட்கள், 250 ரூபாய் விலையில் வழங்கப்பட்டன. இந்தப் பொருட் களை கையில் வாங்கியதும் தோழிகள் அனைவரும் ஆர்வத்தோடு பரபரக்க, அவர் களையெல்லாம் சிறுசிறு குழுக்களாக பிரித்து, 'மதுரா கோட்ஸ்' பயிற்சி ஆலோசகர் அருணா ராஜேஸ்வரி மற்றும் குழுவினர் தனித்தனியாக தையல் வகுப்பு எடுத்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இரண்டு நாட்கள் நடந்த பயிற்சியின் முடிவில், கனகச்சிதமாக பயிற்சியைப் பெற்று, சிறப்பாக தங்களுடைய கைவண்ணத்தைக் காட்டிவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் நாளில் பங்கு கொண்ட மூவர், இரண்டாம் நாளில் பங்கு கொண்ட மூவர் என பரிசுக்குத் தேர்ந் தெடுக்கப்பட, அந்தத் தோழிகளின் முகத்தில் 'பளீர்’ புன்னகை. பயிற்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப் பட்டன.

தைரியம் கொடுத்த தையல்!

பயிற்சியில் பங்கேற்றவர்களில் ஒருவரான கவிதா, ''தையல் பத்தி ஒரு கோடு போட்டு காட்டியிருக்கீங்க. கூடிய சீக்கிரமே நாங்க ரோடே போட்டுடுவோம்'’ என்று கம்பீரமாகச் சொன்னார்.

''தையல்ங்கிறது ஒரு கடல் மாதிரி. உள்ள போகப் போக... இன்னும் கத்துகிட்டே இருக்கலாம். அப்படித்தான் இன்னிக்கும் நிறைய விஷயங்களைக் கத்துகிட்டேன்'’ என்று சொல்லும் வனஜா அம்மாவுக்கு வயது 65.

பயிற்சி சென்னையில் நடந்தாலும்... கோவை, காஞ்சிபுரம், வேலூர், திருவாரூர், சேலம் என பல இடங்களில் இருந்தும்கூட குவிந்துவிட்ட தோழிகள்... அவள் விகடனின் பொறுப்பை உணர வைத்தனர். ''சொந்த கால்ல நிக்கறதுக்கான நம்பிக்கையை விதைச்சுருக்கீங்க'’ என்று நன்றி சொல்லி அவர்கள் விடைபெற்றபோது, அவர்களுடைய பொறுப் பும் கூடியிருப்பதை உணர முடிந்தது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism