ஒவ்வொன்றுக்கும் பரிசு:

200

'எந்தக் கண்ணைக் குத்தும்?’

என் நான்கு வயது மகன்... அகிலேஷ். அவனுக்கு வாய் செம நீளம்! ஏதாவது தவறு செய்யும்போது, ''அப்படி பண்ணாதடா... சாமி கண்ணைக் குத்தும்'' என்று அதட்டுவது வழக்கம். அவ்வாறு ஒருமுறை சொல்லும்போது... ''மம்மி, இப்படி மொட்டையா சொன்னா எப்படி? ரைட் 'ஐ’யா... லெஃப்ட் 'ஐ’யா... எதை சாமி குத்தும்னு கரெக்டா சொல்லுங்க. நான் கேர்ஃபுல்லா இருப்பேன்ல..!'' என்றான்.

இதைக் கேட்டு ஒரே சிரிப்பு மழைதான் வீட்டில்!

- இரா.நந்தினி, வந்தவாசி

தாத்தா கேட்ட 'தம்’!

எங்கள் இரண்டரை வயது அருமை பேரன் ஸ்ரீவிஷ்ணு, விழித்துக் கொண்டிருக்கும் நேரம் முழுவதும் துறுதுறுவென விளையாடி, பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருப்பான். ஒரு நாள் கிச்சனில் இருந்தபோது 'குடுகுடு’வென ஓடிவந்து ''தாத்தா தம் கேட்கறா'' என்று கூற... நான் 'அவருக்கு இந்த பழக்கம் இல்லையே...’ என்று குழப்பமாக அவரிடம் ஓடி வந்தால்... அவர் ஏதோ ஒட்டுவதற்காக 'கம்’ பாட்டிலைத் தேடிக்கொண்டு இருந்தார். 'க’ உச்சரிக்க வராமல் குழந்தை 'த’வை உபயோகித்ததால் வந்த குழப்பம் இது என்பது புரிந்ததும்... நான் சிரித்த சிரிப்புக்கு அளவே இல்லை!

- கிரிஜா நரசிம்மன், சென்னை-600 102

குட்டி பாப்பா... பெரிய பாப்பா!

ஒன்பது மாத கர்ப்பிணியான என்னைக் காண, அக்காவும், அவருடைய குழந்தையும் வந்திருந்தார்கள். என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அந்தச் சுட்டி, ''ஏன் சித்தி உங்களுக்கு மட்டும் வயிறு இவ்ளோ பெரிசாயிடுச்சு!'' என்று கேட்க, ''பாப்பா பெரிசாயிடுத்துல... அதான் வயிறும் பெரிசாயிடுத்துனு’' சொல்லி வைத்தேன். உடனே அவன், ''எனக்கு குட்டி வயிறு... அப்போ பாப்பாவும் குட்டியா இருக்குமா?'' என்று கேட்டானே ஒரு கேள்வி! பதில் சொல்லத் தெரியாமல் சிரித்து வைத்தோம்!

- ஞா.துர்க்கா, கொழுமம்