Election bannerElection banner
Published:Updated:

வாங்க... அழகாகலாம்!

ஃபிரெஞ்சு ப்ளேட் ஹேர்ஸ்டைல்

##~##

'ஒரே மாதிரியான ஹேர்ஸ்டைல்ல காலேஜுக்குப் போறது போர் அடிக்குது.... சில ஹேர்ஸ்டைல் பார்த்துப் பழக்கப்பட்டதுதான். ஆனா, எப்படி போட்டுக்கணும்னு தெரியல’ என்கிற மாணவிகளுக்காக, எப்போதும் டிரெண்டில் இருக்கும் 'ஃபிரெஞ்சு ப்ளேட்’ ஹேர்ஸ்டைலை நமக்காகக் கற்றுக் கொடுக்க வருகிறார் கோவை, பீளமேடு, நேச்சுரல்ஸ் பியூட்டி பார்லரின் ஹேர் டிசைனர் ரேவதி.

''அடர்த்தியாக, ஷார்ட்டாக, முதுகு வரை கூந்தல் இருக்கும் அத்தனை பெண்களுக்கும், இந்த வகை ஹேர்ஸ்டைல் அற்புதமாக இருக் கும். பார்ப்பதற்கு கஷ்டமாகத் தோன்றும் இந்த ஸ்டைல், போட்டுக் கொள்வதற்கு மிகவும் எளிது.

முதலில், கூந்தலை ஷாம்பு போட்டு அலசி ஈரம் போக காயவிடுங்கள்.

வாங்க... அழகாகலாம்!

படம் 1, 1a: இனி, படத்தில் காட்டியுள்ளது போக முன் பக்க முடியை எடுத்து க்ளிப் போட்டுவிடுங்கள்.

படம் 2, 2a: இரண்டு காதுகளுக்கும் மேல் உள்ள முடிகளை படத்தில் காட்டியுள்ளது போல எடுத்து...

படம் 3: ஏற்கெனவே க்ளிப் போட்ட மீதி முடியோடு சேர்த்து வழக்கமான ஜடை பின்னுவது போல பின்ன வேண்டும்.

படம்: 4: இனி, இடது பக்கமிருந்து படத்தில் காட்டியுள்ளது போல சிறிது முடியை எடுத்து, ஏற்கெனவே பின்னி இருக்கும் ஜடை முடியோடு சேர்த்து...

படம் 5: வலது பக்கமிருந்து சிறிது முடியை எடுத்து ஜடையோடு இணைத்து பின்ன வேண்டும்.

வாங்க... அழகாகலாம்!
வாங்க... அழகாகலாம்!
வாங்க... அழகாகலாம்!

படம் 6: இப்படி ஒவ்வொரு முறையும் இரண்டு பக்கமிருந்து முடியெடுத்து, ஏற்கெனவே பின்னியிருக்கும் ஜடை முடியோடு சேர்த்து பின்னிக் கொண்டே வரவேண்டும்.

படம் 7: எல்லா முடிகளையும் சேர்த்து பின்னிய பிறகு, பேண்ட் போட்டுவிட்டால்... அட்டகாசமான ஸ்டைலிஷ் ஃபிரெஞ்சு ப்ளேட் ஹேர்ஸ்டைல் ரெடியாகிவிடும்..

குறிப்பு: ஒவ்வொரு முறை ஒவ்வொரு பக்கமிருந்து முடியெடுக்கும்போது, ஏற்கெனவே பின்னி வைத்திருக்கும் முடிகளை விட்டுவிடக் கூடாது.

இந்த ஹேர்ஸ்டைலை பார்லரில் செய்ய 250 ரூபாய் செலவாகும். வீட்டிலும் அழகாக செய்து கொண்டு அசத்தலாம்!''

கட்டுரை, படங்கள்: மு.சரவணக்குமார்

வாங்க... அழகாகலாம்!

முடி வளர்ச்சிக்கு முத்தான வழி!

தாரிணி கிருஷ்ணன், 'ஹெய்ன்ஸ் நியூட்ரி லைஃப் கிளினிக்’ கன்சல்டன்ட் மற்றும் டயட்டீஷியன், சென்னை:

''புரதச்சத்து குறைபாட்டினாலேயே முடி வளராமல் போகிறது. இதனை போக்க சாப்பாட்டில் தினமும் பருப்பு வகைகள், முட்டை போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். அசைவம் சாப்பிடுபவர்கள் வாரத்தில் இரண்டு நாட்களாவது சிக்கன் எடுத்துக்கொள்ள வேண்டும். இது தவிர சிட்ரஸ் பழவகைகளான நெல்லிக்காய், ஆரஞ்சுப்பழம், எலுமிச்சம்பழம் போன்றவற்றின் ஜூஸை அடிக்கடி அருந்தினால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.''

- அ.பார்வதி  

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு