Published:Updated:

மொட்டை மாடி தேன்நிலவு!

ரொமான்ஸ் சீக்ரெட் பரிசுக்குரிய படைப்பு - 4

மொட்டை மாடி தேன்நிலவு!

ரொமான்ஸ் சீக்ரெட் பரிசுக்குரிய படைப்பு - 4

Published:Updated:
##~##

 ன் செல்லத்தை முதல்ல சந்திச்சப்போ... அவர் அடிச்ச சைட்டுல, என் இதயக் கதவு சட்டுனு ஓபனாகி... 'குபுக்’னு பொங்கினது ஒரு பரவசமும் அன்பும். அப்போ வொர்க் அவுட்டான எங்களின் ரொமான்ஸ் கெமிஸ்ட்ரி, திருமணத்துக்குப் பிறகும் கலர்ஃபுல் ஊடல், கூடல், கொஞ்சல், கெஞ்சல், தலையணைச் சண்டை, முத்தம், பாட்டு, கூத்துனு நான்-ஸ்டாப் கொண்டாட்டமாய்... ஓடிக் கொண்டே இருக்குது!

'என்னமோ ஏதோ... மின்னி மறையுது விழியில்!’னு தன் ஃபேவரைட் பாட்டைப் பாடி என் செல்லம் கைநீட்டி அழைக்க, 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்..!’னு என் ஃபேவரைட் பாட்டோட அவர் கேசம் கோதி, நெற்றியில முத்தமிட்டு, கைக்குள் சிறைபடும் சூப்பரான 'சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி, எங்களோட டெய்லி ரொமான்ஸ் புரோகிராம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதிகாலையில அவரே தயாரிச்சு தந்த சூடான டீயை அருந்திட்டு, அவர் கைக்குள் கை கோத்து, நைட்டியோட வாக்கிங் போறதில் இருந்து, வேலைப்பளுவால் இடுப்பொடிஞ்சு ராத்திரி பெட்டுல விழற வரைக்கும் ஹெல்ப்பும் கொஞ்சலுமாய் கூடவே ஒட்டிக்கிட்டு இருப்பாரு. அப்புறம் வலியெடுக்கும் என் இடுப்புக்கு அக்கறையா மசாஜ் ஆரம்பிப்பாரு. ''ப்ளீஸ்... போதும் மச்சான்''னு (நமீதா ஸ்டைல்ல) நான் சொல்ல, ''ஓ.கே... ஓ.கே... என் லவ்லி ஃபிகரே!''னு இடுப்பைக் குறும்பா கிள்ளி மசாஜை முடிச்சு சிரிப்பாரு பாரு... அடிவயிற்றில் உருளும் அந்த ஆனந்தம்!

விடுமுறை நாட்கள்ல தலை சீவி, ஜடை போட்டு, கண் மை தீட்டி, புடவை கட்டிவிடுவது அவருக்குப் பிடிச்ச பொழுதுபோக்கு. தினமும் என் செல்லம் குளிக்கும்போது என்னையும் கொஞ்சம் நனைய வெச்சு, என் கையால கொஞ்சம் 'ஆ’ ஊட்டிக்கிட்டு, லிப்புல ஒரு 'இச்’ கொடுத்துட்டுதான் ஆபீஸுக்கே கிளம்புவாரு! ஒவ்வொரு பௌர்ணமியிலும் மொட்டை மாடி இருட்டுல செல்லம் மடியில நான் இருப்பேன். இல்லைனா, என் லவ் பேர்டு... ஆங்க்ரி பேர்டா மாறிடும். உரசலும், உணர்வுகளுமாய் நாங்க கொண்டாடும் அந்த 'தேன் நிலவு’தான் எங்க ரொமான்ஸோட ஹைலைட்!

- திருநெல்வேலி வாசகி

ரொமான்ஸ் சீக்ரெட்!

சிக்கத்தக்க உங்களின் ரொமான்ஸ்களை... பகிர்ந்து கொள்ளுங்களேன். சிறப்பான ரொமான்ஸ்களுக்கு எலெக்ட்ரிக் ரைஸ் குக்கர் பரிசாகக் காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய முகவரி: 'ரொமான்ஸ் சீக்ரெட்!’, அவள் விகடன், 757 அண்ணா சாலை, சென்னை - 600 002. இ-மெயிலிலும் அனுப்பலாம்: aval@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism