Published:Updated:

வாங்க... அழகாகலாம்!

ஃபிரெஞ்சு ரோல் ஹேர்ஸ்டைல்

பிரீமியம் ஸ்டோரி
##~##

''தலை முடியில காண்பிக்கும் சின்னச் சின்ன வித்தியாசம்கூட, நம்மை பேரழகாகக் காட்டும். அதனால், எப்போதுமே ஹேர்ஸ்டைல் விஷயத்தில் தனி கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்’' என்று அக்கறையோடு சொல்லும் திருநெல்வேலி, பாளையங்கோட்டை 'அஸென்கா பியூட்டி  கேர்' பியூட்டிஷியன் தே.ஜான்சி அன்ன முத்து, இங்கே பார்ட்டி, ஃபங்ஷன் இதற்கெல் லாம் ஏற்ற 'ஃபிரெஞ்சு ரோல்’ ஹேர்ஸ்டைல் செய்து காண்பிக்கிறார்.

நீளமான மற்றும் மீடியமான கூந்தல் உள்ளவர்கள்... இந்த ஹேர்ஸ்டைலை எளிதாக செய்து கொள்ளலாம்.

முதலில் முகத்தின் முன் பக்கத்தில் சிறிது முடியை எடுத்து அயர்ன் செய்து தொங்கவிடுங்கள்.

படம் 1: படத்தில் காட்டியுள்ளதுபோல முன்பக்க முடியை சீவி, பஃப் செய்து, ஹேர்பின் கொண்டு குத்திவிடுங்கள்.

வாங்க... அழகாகலாம்!

படம் 2: இடது பக்கத்தில் இருந்து சிறிது முடியை எடுத்து சீவி, ஹேர்பின் பயன்படுத்தி குத்திவிடுங்கள்.

படம் 3: இதேபோல வலது பக்கத்திலும் முடியை எடுத்து, ஹேர்பின் பயன்படுத்தி குத்த வேண்டும்.

படம் 4: மீதம் இருக்கும் பின்பக்க முடிகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக சீவி, படத்தில் காட்டியுள்ளது போல கையால் பிடித்துக் கொள்ளுங்கள்.

படம் 5: ஒரு விரலை நடுவில் வைத்து, அதைச் சுற்றி முடியை சுழற்றுங்கள்.

படம் 5a,5b: சுற்றும்போது அவை நேராக, நீளமாக வரும்.

வாங்க... அழகாகலாம்!
வாங்க... அழகாகலாம்!

படம் 5a: இப்படி சுற்றிய முடியை, தலையை ஒட்டியிருக்கும் முடியோடு சேர்த்து ஹேர்பின் கொண்டு குத்திவிடுங்கள்.

படம் 6, 6a: அடியில் மிஞ்சும் முடியை அப்படியே மேலாக நிமிர்த்தி, சுருட்டிய தலை முடி ஓரத்தோடு ஹேர்பின் கொண்டு குத்திவிட்டால், ஃபிரெஞ்சு ரோல் ஹேர்ஸ்டைல் ரெடி! பிறகு, டிரெஸ்ஸுக்கு மேட்சான க்ளிப்பை ஃபிரெஞ்சு ரோல் ஓரத்தில் இணைத்துவிடுங்கள்.

இனி, முடியில் ஆங்காங்கே குட்டி குட்டி பீட்ஸ்களை செருகிவிடுங்கள். பின்னர் லைட்டாக முகத்துக்கு 'டச்-அப்’ செய்து புடவை யின் நிறத்துக்கு ஏற்றாற்போல் ஐஷேடோ மற்றும் லிப்ஸ்டிக் போட்டுக் கொள்ளவும். புடவை யின் நிறத்துக்கேற்ப குந்தன் அட்டிகை, கம்மல் மற்றும் வளையல் அணிந்தால்... உங்கள் அழகு மேலும் மெருகேற்றப்பட்டு பார்ட்டியின் ஹீரோயின் நீங்களென மாறிவிடுவீர்கள்.

- ஜெ.அன்னாள் நேசமோனி  

மாடல்: மகாலட்சுமி, படங்கள்: தி.ஹரிஹரன்

வாங்க... அழகாகலாம்!
வாங்க... அழகாகலாம்!

உடல் எடையை குறைப்பது,  கூட்டுவது எப்படி?

தாரிணி கிருஷ்ணன், 'ஹெய்ன்ஸ் நியூட்ரி லைஃப் கிளினிக்’ கன்சல்டன்ட் மற்றும் டயட்டீஷியன், சென்னை.

'உடம்பை எப்படி குறைப்பது?’ என்பவர்கள் முதலில் நேரம்கெட்ட வேளையில் சாப்பிடுவதையும், ஸ்நாக்ஸ் என்கிற பெயரில் போண்டா, பஜ்ஜி, போன்ற வற்றை சாப்பிடுவதையும் அறவே குறைக்க வேண்டும். சாப்பாட்டில் சமையல் எண்ணெயின் அளவைக் குறைக்க வேண்டும். ஒரு மாதத்துக்கு அரை லிட்டர் சமையல் எண்ணெய் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். இது தவிர பழங்கள், காய்கறிகள் ஒவ்வொன்றிலும் தினமும் தலா மூன்று கப்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

உடம்பை எப்படி தேற்றுவது என்று நினைப்பவர்கள்... சத்துமாவு கஞ்சியை சற்று கெட்டியாக செய்து சாப் பிடலாம். முதல் நாள் இரவே 6 பாதாம் பருப்புகளை ஊற வைத்து, மறுநாள் காலையில் தோலை உரித்துச் சாப்பிட வேண்டும். இது, பசியைத் தூண்டும் என்ப தால், அதிகமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கும். பால், முட்டை இவற்றுடன் சர்க்கரை கலந்து, அதில் பிரெட் ஸ்லைஸ்களை நனைத்தெடுத்து டோஸ்ட் செய்து சாப்பிட்டால்... உடல் எடை கூடும்.

- அ.பார்வதி  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு