Published:Updated:

குட்டீஸ் குறும்பு!

குட்டீஸ் குறும்பு!

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

குட்டீஸ் குறும்பு!

200

 'லேட்’டஸ்ட் காமெடி!

ங்கள் வீட்டுக்கு எந்த கல்யாண பத்திரிகை வந்தாலும், பெரியம்மா ஒரு வரி விடாமல் படிப்பார். ஒருமுறை அவருக்கு கண் ஆபரேஷன் ஆகியிருந்ததால், நான் படித்துக் காட்டினேன். அப்போது, 'லேட் ராமசாமி ஐயரின் பௌத்ரனும், லேட் சுவாமிநாத ஐயரின் தௌஹித்ரனும்’ என்று படித்துவிட்டு, தொடர்ந்து... 'லேட் ஹரிஹர ஐயரின் பௌத்ரியும், லேட் கிருஷ்ணய்யரின் தௌஹித்ரியும் ஆன’ என்று படித்ததும், அருகே விளையாடிக் கொண்டிருந்த என் அக்காவின் பேரன், ''என்ன பாட்டி, அவங்க வீட்டுல யாருமே சீக்கிரமா வரமாட்டாளா? எல்லாருமே 'லேட்டா’தான் வருவாங்களா?'' என்று கேட்டதும்... நாங்கள்  சிரித்துவிட்டோம். எங்கள் பெரியம்மா புரியாமல் விழிக்க, விளக்கி சொல்லியதும், அவர் சிரித்து முடிக்க சில மணி நேரம் ஆனது!

- ஜி.ராஜி, வளசரவாக்கம்

 ஸ்பைடர்மேன்... சூப்பர்மேன்... ஜென்டில்மேன்!

 ன் பேத்திக்கு 4 வயதாகிறது. சுட்டித்தனம் சொல்லி மாளாது. அடிக்கடி டி.வி நிகழ்ச்சிகளில் போனில் உரையாடுவதைப் போல அழகாக பேசுவாள். ஒரு நாள் என் மகனிடம் ''உங்கள் பெயரென்ன? என்ன செய்யறீங்க?'' என்று வரிசையாக கேட்டாள். தொடர்ந்து, ''உங்களுக்கு என்ன பாட்டு வேண்டும்'' என்றாள். என் மகனோ ''எனக்குப் பிடிச்ச பாட்டு உனக்கு தெரியாது'' என்று சொன்னான். ''பரவாயில்லை... சொல்லுங்க'' என்றாள் அந்த சுட்டி. ''எனக்கு 'ஜென்டில்மேன்’ பட பாட்டு வேணும்'' என்று என் மகன் சொல்ல, சட்டென அவள் ''ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் மாதிரியா? ஓகே... வைக்கிறேன்'' என்றாளே பார்க்கலாம்... அவளுடைய சமாளிஃபிகேஷன் கண்டு, வீட்டில் இருந்த எல்லோருக்கும் சிரிப்போ சிரிப்புதான்.

- உதயா ராஜேந்திரன், சென்னை-83

 'ராமு இல்லேனா சோமு!’ 

தொலைக்காட்சி தொடர் ஒன்றை  உறவினர்களுடன் பார்த்துக் கொண்டிருந்தோம். அதில் ஒரு காட்சியில், திருமணம் ஆன முதல் நாள், கணவனிடம் மனைவி... ''இனிமே நான் உங்களை 'ராமு’னு எப்படிப் பேர் சொல்லிக் கூப்பிட முடியும்?'' என்று கேட்க... என் பேரன் அக்ஷத் ''ராமுனு கூப்பிட முடியலைனா, சோமுனு கூப்பிடேன்'' என 'டைமிங்’காக சொல்ல... உறவினர்கள், முகம் நிறைய சிரிப்புடன், அவனை பாராட்டு மழையில் நனைத்தனர்!

- அஸ்வினி ஆனந்த், அம்பத்தூர்

குட்டீஸ் குறும்பு!

'டாக்டர்... உங்க மம்மி    அடிப்பாங்களா?!’

ன் மகனை டாக்டரிடம் அழைத்துச் சென்றிருந்தேன். அவர் மருந்துகளுக்கான 'பிரிஸ்கிரிப்ஷன்’ எழுதிக் கொடுத்தார். அதில் சில மருந்துகளின் பெயர்களை படிக்க முடியாமல் போனதால், அவரிடமே கேட்டுத் தெரிந்து கொண்டேன். இதை பார்த்துக் கொண்டிருந்த என் மகன் அபிஷேக், டாக்டரிடம்... ''உங்கள் மம்மி உங்களை கையில் அடிக்க மாட்டாங்களா?'' என்று கேட்டான்.

குட்டீஸ் குறும்பு!

''எதற்கு?'' என்றார் டாக்டர்.

 ''நான் புரியாத மாதிரி எழுதினா... என் மம்மி, என் கையியே அடிப்பாங்க. நீங்கள் இப்படி கிறுக்கி எழுதுகிறீர்களே... அதனால தான் கேட்டேன்!'' என்று அபிஷேக் சொல்ல, டாக்டர் புன்னகை புரிந்தார்.

- ஆர்த்தி சிவக்குமார், மேற்கு தாம்பரம்