Published:Updated:

‘உங்களுக்கு உதவி வேண்டுமா..?’ கரம் நீட்டும் கோவை மாணவர்கள்!

‘உங்களுக்கு உதவி வேண்டுமா..?’ கரம் நீட்டும் கோவை மாணவர்கள்!

‘உங்களுக்கு உதவி வேண்டுமா..?’ கரம் நீட்டும் கோவை மாணவர்கள்!

‘உங்களுக்கு உதவி வேண்டுமா..?’ கரம் நீட்டும் கோவை மாணவர்கள்!

Published:Updated:
##~##

''ஹலோ, உங்களத்தான், 'ஹேப்பி ஹார்ட்ஸ்...'ங்கற பேரு நல்லாயிருக்கா..?!''

- புன்னகையுடன் கேட்கிறார்கள், கோயம்புத்தூர், இன்ஃபோ கல்லூரி மாணவர்கள்.

தேவையோடும், தவிப்போடும் இருப்பவர்களுக்கு உதவிகளைச் செய்வதற்காகவே, இவர்கள் உருவாக்கியிருக்கும் அறக்கட்டளைதான்... 'ஹேப்பி ஹார்ட்ஸ்’. இதன் மூலம், பாராட்டுகளைக் குவித்துக் கொண்டிருக்கின்றன இந்த இளம் எனர்ஜிகள்.

அறக்கட்டளையின் முன்னோடிகளில் ஒருவரான பிரகலாதன் ஆரம்பித்தார்... ''புத்தாண்டுக் கொண்டாட்டம் யூத்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல். அப்படி போன வருஷம் நாங்க புத்தாண்டு கொண்டாட பிளான் போட்டப்போதான், பைக் ரைடு, அவுட்டிங், காபி ஷாப்னு வழக்கமானதா இல்லாம... அர்த்தமுள்ள கொண்டாட்டமா மாத்த நினைச்சோம். நாம சந்தோஷமா கொண்டாடுற புத்தாண்டை, எளிமையானவர்களும் கொண்டாட உதவணும்னு நினைச்சு, எங்க கேங்ல இருந்த நான், நிர்மல், விக்னேஷ் மூணு பேரும் கொஞ்சம் பணம் சேர்த்தோம். ஏழைகளுக்கு சின்னச் சின்ன சந்தோஷங்கள் கொடுத்தாலும், அதை பெரிய அளவில் ரீச் பண்ண முடியல. முயற்சிகளைத் தொடர்ந்து, 2012-ம் வருஷம் குடியரசு தினத்துல கருணை இல்லத்துக்கு ஒரு வேளை உணவு தந்தோம். அதுதான் எங்களோட முதல் முயற்சினு சொல்லலாம்!'' என்று கண்களில் பெருமையோடு சொன்னவர்,

''அதுக்கு அப்புறம் எங்க முயற்சி பற்றி அறிந்து எங்க நண்பர்களும் கூட சேர்ந்தாங்க. அந்த உற்சாகத்தில் 'ஹேப்பி ஹார்ட்ஸ்’ங்கற அமைப்பை உருவாக்கி, முறையா பதிவு பண்ணி, முயற்சிகளைத் தொடர்ந்தோம். கொஞ்சம் தொகையும் சேர்ந்தது. அடுத்த கட்டமா ஆகஸ்ட் 15 அன்று விரும்பிக் கேட்ட பொதுமக்களுக்கு இலவசமா 300 மரக்கன்றுகள் கொடுத்தோம். அதுதான் எங்களோட இரண்டாவது முயற்சி'' என்ற பிரகலாதனை இடைமறித்து தொடர்ந்தார் ஆர்த்தி.

‘உங்களுக்கு உதவி வேண்டுமா..?’ கரம் நீட்டும் கோவை மாணவர்கள்!

''இதையெல்லாம் பார்த்துட்டு கல்லூரி முழுக்க எங்களுக்கு ஆதரவு கிடைச்சுது. பலரும் ஆர்வமா எங்களோட கைகோத்தாங்க. 3 பேரோட ஆரம்பிச்ச எங்க அமைப்புல, இப்ப 500 பேர் இருக்காங்க. மாணவர்கள் தங்களால் முடிந்த பணத்தை எங்ககிட்ட சேர்க்க, நாங்க அதை தேவையானவங்ககிட்ட கொண்டு போய் சேர்க்கிறோம்... அவ்ளோதான். இதையெல்லாம் பார்த்துட்டு, மற்ற கல்லூரி மாணவர்களும் வந்து எங்களோடு சேர்ந்தாங்க. நாங்க எடுத்து வெச்ச முதல் அடி, இப்ப பிரமாண்ட ஊர்வலமா மாறி இருக்கு. இதுக்காக எங்க ஜூனியர்ஸுக்குதான் நன்றி சொல்லணும்!'' என்றவர்,

‘உங்களுக்கு உதவி வேண்டுமா..?’ கரம் நீட்டும் கோவை மாணவர்கள்!

''எங்க அமைப்பில் இருக்கற எல்லாரும் தினமும் ஒரு ரூபாய்னு மாசம் 30 ரூபாய் தந்துருவோம். தவிர, அவங்கவங்க விருப்பப்பட்ட பணமும் தருவாங்க. அதை எல்லாம் வங்கிக் கணக்குல சேர்த்துடுவோம். கல்லூரியில ஒவ்வொரு வகுப்புக்கும் 2 மாணவர்களை இதுக்காக நியமிச்சுருக்கோம். இவங்க எல்லாரையும் ஒருங்கிணைச்சு போகும் தலைவர், செயலாளர், பொருளாளர்னு நிர்வாகம் சரியா நடக்குது. இது எந்த வகையிலும் எங்க படிப்பை பாதிக்கிறதில்ல'' என முடித்த ஆர்த்தி, தற்போதைய தலைவர் ஆக்னலிடம் அறிமுகம் செய்தார்.

''கல்லூரி முதல் வருஷத்தில் இருந்து 'ஹேப்பி ஹார்ட்ஸ்’ல் இருக்கேன். எங்க சீனியர்ஸ் விட்டுட்டுப் போன பொறுப்பை, அதே அக்கறையோட தொடர்றோம். நாங்க கல்லூரிக்குள்ள வேலைகளை செஞ்சா, இவங்க வெளியில இருந்து உதவிகளை பெற்றுத் தர்றாங்க. தவிர, பெற்றோர்களும் உதவிகள் செய்றாங்க. இன்னும் கல்லூரி நிர்வாகம், பொதுமக்கள்னு எல்லா திசைகளில் இருந்து எங்களுக்கு ஆத ரவு, பாராட்டு, உதவி கிடைக்குது'' என்று நன்றியோடு சொன்ன ஆக்னல்,

''இதுவரை ரெண்டு தடவை ரத்ததான முகாம் நடத்தி, விழிப்பு உணர்வை ஏற்படுத்தியிருக் கோம். கல்லூரிக் கட்டணம் கட்ட முடியாம தவிக் கும் மாணவிகள், அறுவை சிகிச்சைக்கு பண மின்றி தவிக்கும் ஏழைகள்னு தேடித் தேடி உதவு றோம். வருடந்தோறும் ஆதரவற்றோர் இல்லங்களை தேர்ந்தெடுத்து இலவச உணவளித்து, ஆடல், பாடல்னு கல்லூரி மாணவர்களோட பங்களிப்பையும் இடம்பெறச்செய்து அவங்களை மகிழ்விக்கிறோம். இன்னும் எவ்வளவு பேர் வந்தாலும் ஒருங்கிணைந்து செயல்பட தயாரா இருக்கோம். இப்போ எங்க தேவை எல்லாம்... உதவி தேவைப்படுபவர்கள் பற்றிய தகவல்தான்!''

- சேவை செய்யத் தயாராக இருக்கும் தங்கள் கரங்களை விரித்துக் காண்பித்தார்.

- ஞா.சுதாகர்,  படங்கள்: அ.ஜெஃப்ரி தேவ்