Published:Updated:

வாங்க... அழகாகலாம்!

டெம்ப்ரரி ஸ்ட்ரைட்டன் ஹேர்... சிம்பிள் கம் ஈஸி!

வாங்க... அழகாகலாம்!

டெம்ப்ரரி ஸ்ட்ரைட்டன் ஹேர்... சிம்பிள் கம் ஈஸி!

Published:Updated:
##~##

''என்ன... 'எப்பவுமே ஜடை பின்னி ரொம்ப அலுத்துப் போச்சு. சரி, அப்படியே ஃப்ரீ ஹேர் விடலாம்னு பார்த்தா கர்லி ஹேர்ங்கறதால... இருக்கிற முடிகூட, சின்னதா சுருண்டு போய் தெரியுது' என்று சோக ஸ்மைலி எடுத்துவிட்டுக் கொண்டே இருக்கிறீர்களா... அதற்கு, இனி எந்தத் தேவையும் இல்ல'' என்று ஆறுதலாகப் பேசுகிறார்... மதுரை, 'ரக்சனாஸ் பியூட்டி பார்லர்’ ஹேர் டிசைனர் கம் மேக் அப் ஆர்ட்டிஸ்ட் மோனிகா பதிஜா.

''இப்போல்லாம் கர்லி, நார்மல் ஹேர்னு எல்லா பெண்களுக்கும் ஸ்ட்ரைட்டன் ஹேர் மேல ஒரு தனி கிரேஸ் வந்திருக்கறதை பார்க்க முடியுது. ஆனா, பர்மனென்ட் ஸ்ட்ரைட்டனுக்கு பயப்படுறாங்க. அவங்களுக்காகவே வந்திருக்கு டெம்ப்ரரி ஸ்ட்ரைட்டன் ஹேர். சிம்பிள் கம் ஈஸி. ஷார்ட், லாங் ஹேர்னு உள்ள எல்லாரும் இதைச் செய்துக்கலாம்'' என்றபடி டெம்ப்ரரி ஸ்ட்ரைட்டன் ஹேர் ஸ்டைல் செய்ய ஆரம்பித்தார் மோனிகா.

வாங்க... அழகாகலாம்!

படம் 1: இவ்வகையான ஹேர் ஸ்டைலுக்கு, தலைமுடியில் எண்ணெய் பிசுக்கு அறவே இருக்கக்கூடாது. எனவே, முதலில் கூந்தலை ஷாம்பு, கண்டிஷனர் போட்டு நன்கு அலசி விடுங்கள்.

படம் 2: பின்னர், தலைமுடியை ஈரம் முழுவதும் போகாத அளவுக்கு காயவிடுங்கள். பார்ப்பதற்கு காய்ந்த முடி போல இருக்கும். ஆனால், தொட்டுப் பார்த்தால் ஈரம் இருக்க வேண்டும். அப்படி ஒரு நிலையில் தலைமுடியில் ஹேர்லோஷன் தடவுங்கள். இது கூந்தலின் தன்மையைப் பாதுகாக்க உதவும்.

படம் 3: இனி, தலை முடியை நான்கு பாகமாக பிரித்து சீவி சிக்கெடுத்து, தனித்தனியாக தலைமுடியோடு சேர்த்து க்ளிப் போட்டு விடுங்கள். இதைச் செய்து கொண்டிருக்கும்போதே, ஹேர் ஸ்ட்ரைட்னெர் மெஷினை ஆன் செய்து, உங்கள் முடிக்கேற்ற டெம்பரேச்சரை செட் செய்துவிட்டால் சூடு ஏறிக் கொண்டிருக்கும் (படத்தில் காட்டியுள்ள கூந்தலுக்கு, 190 டிகிரி டெப்ரேச்சர் வைக்கப்பட்டிருக்கிறது)

படம் 4: இனி, பின்பக்கத்தின் கீழ்பகுதியில் போடப்பட்டிருக்கிற க்ளிப்பை கழற்றி, அந்த முடியை அயர்னிங் செய்ய வேண்டும். எப்போதும் தலைபாகத்தையட்டி  ஆரம்பித்து, நுனி வரை ஹேர் ஸ்ட்ரைட்னெரால் முடியை அயர்னிங் செய்ய வேண்டும்.

படம் 5: இப்படி எல்லா முடியையும் அயர்னிங் செய்ய வேண்டும். முடியின் ஈரத்தன்மைக்கு ஏற்ப டெம்பரேச்சரை அதிகரித்துக் கொள்ளலாம் (கவனம், டெம்பரேச்சர் அதிகம் செட் செய்தால் முடி கருக வாய்ப்பிருக்கிறது)

இனி, முடியைப் பளபளப்பாக காட்ட சீரம் தடவி, ஸ்பிரே செய்து, சீப்பால் சீவிவிட்டால், அரை மணி நேரத்தில் பளபளப்பான‌ ஸ்ட்ரைட்டன் ஹேர் ரெடி.

வாங்க... அழகாகலாம்!
வாங்க... அழகாகலாம்!

படம் 6: இனி, உங்கள் ரசனைக்கேற்ப இரண்டு பக்க முடியை சிறிதளவில் எடுத்து பட்டர்ஃப்ளை க்ளிப் போட்டு விடலாம். இல்லை ஃப்ரீ ஹேராககூட விடலாம். புடவை, ஜீன்ஸ், சுடிதார் என எப்படிப்பட்ட உடையாக இருந்தாலும் பொருந்தக்கூடிய அழகான ஹேர் ஸ்டைல் இது.

நிறைவாக பேசிய மோனிகா, ''பார்லர் என்றால், 600 ரூபாய் வரை செலவாகும். வீட்டில் அரைமணி நேரமே போதும். ஆனால், உதவிக்கு ஓர் ஆள் தேவை என்பதுடன் சற்று கவனத்துடன் செய்ய வேண்டிய வேலை என்பதை மனதில் கொள்ளவும்' என்று சொன்னார்.

- ஹா.தௌஜிதா பானு 

படங்கள்: இ.பொன்குன்றம்

  மாடல்: ஜெஸ்ஸி