ஸ்பெஷல் 1
Published:Updated:

ஆத்தா... நான் டீச்சராயிட்டேன்!

ஆத்தா... நான் டீச்சராயிட்டேன்!

##~##

 'படிக்கும்போதே நான் டீச்சராயிட்டேனே!'' என்று கண்கள் சிமிட்டிச் சிரிக்கிறார், மதுரை, லேடி டோக் கல்லூரியில் எம்.ஏ., ஆங்கில இலக்கியம் முதலாமாண்டு படித்துக் கொண்டிருக்கும் இந்துமதி!

''சின்ன வயசுல இருந்தே ஆங்கில மொழி மேல் எனக்குப் பிரியம். அதனாலதான் பி.ஏ., ஆங்கில இலக்கியம் சேர்ந்தேன். இறுதியாண்டு படிச்சப்போ 'ஸ்பீச் மாஸ்டர்ஸ் இன்ஸ்டிடியூட்’ என்ற ஆங்கில மொழி மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து, மொழித் திறமையை மெருகேத்திக்கிட்டேன். பி.ஏ., ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணி, எங்க காலேஜ்லயே எம்.ஏ. சேர்ந்தேன். என்னோட மொழித்திறன், நான் படிச்ச இன்ஸ்டிடியூட்லயே டீச்சர் வாய்ப்பை வாங்கிக் கொடுத்திருக்கு.

காலை 8 - 1 கல்லூரி நேரத்தில்... மாணவி. மதியம் 2 முதல் இரவு 8 மணி வரை... டீச்சர். ஸ்கூல் படிக்கும்போதே காலேஜ்ல படிச்சுக்கிட்டே பார்ட் டைம் வேலை பார்க்கணும்னு முடிவெடுத்திருந்தேன். நினைச்ச மாதிரியே மாசாமாசம் சம்பளம் வாங்க ஆரம்பிச்சுட்டேன். என் செலவுகளை நானே பார்த்துக்குறேன்!'' என்று பெருமையாகச் சொன்ன இந்துமதி, தொடர்ந்தார்.

ஆத்தா... நான் டீச்சராயிட்டேன்!

''வெளிநாடுகள்ல மேற்படிப்பு மற்றும் பணிக்குப் போறவங்க ஆங்கில அறிவை சோதிக்கும் IELTS, TOEFL தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது அவசியம். அதுக்கான லிஸனிங், ரீடிங், ஸ்பீக்கிங், ரைட்டிங்னு நான்கு விஷயங்களும் அடங்கிய பாடங்களை எடுக்கிறேன். தமிழ் மீடியப் பள்ளிகளில் படிச்சுட்டு வந்து, காலேஜ்ல இங்கிலீஷ் கம்யூனிகேஷன்ல தடுமாறுறவங்களுக்கும் வகுப்புகள் எடுக்குறேன். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமில்லாம... இன்ஜினீயர்கள், டாக்டர்கள்னு எல்லா வயதிலும், வகையிலும் எனக்கு ஸ்டூடென்ட்ஸ் இருக்காங்க. ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி தரும்போது, ஸ்டூடென்ட்ஸுக்கு 'நம்மால் பேச முடியும்’ என்ற தன்னம்பிக்கைதான் முதல் தேவை. அதனால, கூச்சம் போக்கி அவங்கள பேசவிட்டு, முடிச்சதும் அதில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டுவேன்.

பொதுவா, 'நான் டீச்சராகப் போறேன்’னு சொல்லாத குழந்தைகள் ரொம்பக் குறைவு. ஆனா... வளர வளர டாக்டர், இன்ஜினீயர், பிசினஸ்மேன்னு வேற வேற பாதைதான் பலருக்கும் வாய்க்கும். ஆனா, என்னோட சின்ன வயசு ஆசை... அப்படியே நிறைவே ஆரம்பிச்சுருக்குறதுல எனக்கு ஏக சந்தோஷம்!''

ஆத்தா... நான் டீச்சராயிட்டேன்!

- நம்பிக்கையும் நெகிழ்ச்சியுமாக சொன்னார் இந்துமதி டீச்சர்!

- லோ.இந்து 

படங்கள்: பா.காளிமுத்து