Published:Updated:

செல்போன் காலத்துலயும் (நாங்கள்லாம் ) நாவல் படிக்கிறோம்ல!

செல்போன் காலத்துலயும் (நாங்கள்லாம் ) நாவல் படிக்கிறோம்ல!

செல்போன் காலத்துலயும் (நாங்கள்லாம் ) நாவல் படிக்கிறோம்ல!

செல்போன் காலத்துலயும் (நாங்கள்லாம் ) நாவல் படிக்கிறோம்ல!

Published:Updated:
##~##

 ''முன்னயெல்லாம் திரைப்படங்கள்லயும், பத்திரிகை ஓவியங்கள்லயும் கல்லூரிப் பெண் என்றாலே, கையில ஒரு நாவல் இருக்கறது மாதிரியான ஓவியங்களைத்தான் பார்த்திருப்போம். இப்போ... எங்கெங்கு காணினும் மொபைல்ல புதைஞ்சுருக்கற கல்லூரிப் பெண்களையே பார்க்க முடியுது...''

- இப்படி வேதனையை வெளிப்படுத்தினா...

''அதெல்லாம் இல்ல. இப்பவும் நாவல் படிக்கிற நல்ல பிள்ளைங்க நிறைய இருக்காங்க... இருக்கோம்!''னு சொல்லிச் சிரிக்கறாங்க... இந்தப் பெண்கள். இங்கிலீஷ், தமிழ் நாவல்கள்னு அந்த மைசூர் பெண்களோட நாவல் ஆர்வத்துக்கு கொஞ்சம் காது கொடுத்தப்போ...

'ஒரு நாவலை கையில் எடுத்தேன்னா, அதை முடிக்கும் வரையான இரவுகள் எல்லாம் அந்த நாவல் பத்தின கனவுகள்தான் எனக்கு வரும். அப்படி சமீபமா என் கனவில் வந்தது, 'ஒன்பது ரூபாய் நோட்டு’! 'கடல்புறா’ நாவல்ல வரும் நாயகன், ஏன் இப்படி எல்லாம் செய்றான்னு ஆரம்பத்தில் குழப்பமா இருக்கும். கடைசியில் காதல் உட்பட  அதுவரை அவன் செய்த எல்லாமே அவன் திட்டத்தோட ஒரு அங்கம்னு தெரிய வரும்போது, அந்த டிவிஸ்ட் ஆவ்ஸம்!''

''ராஜேஷ்குமார் நாவல்கள்னா எனக்கு உயிர். அவர் கதை சொல்ற களமே தனி. அவருடைய ஒரு நாவல்ல கும்பகோணத்திலும், நியூயார்க்கிலும் ஒண்ணுக்கு ஒண்ணு தொடர்பில்லாம கதை நகரும். எந்த ஒரு நொடியிலும் இது இரண்டும் ஒன்று சேராது. ஆனா, நாவலோட கடைசிப் பகுதியில் அந்த இரண்டு கதைகளையும் நாம எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் கொடுத்து அவ்வளவு அழகா இணைத்திருப்பார். சுஜாதா சாரோட ஒரு கதையில் வரும் பெண் கதா     பாத்திரத்தை அறிமுகப்படுத்தும்போது, அந்தப் பெண்   ணோட கையில் இரண்டு ஆங்கிலப் புத்தகத்தோடு ஒரு தமிழ்ப் புத்தகமும் இருப்பதா எழுதியிருப்பார். அவர் தமிழ்ப் பெண்களை இதேபோல இருக்க சுட்டிக்காட்டுறார்னு உணர்ந்தேன்''.

செல்போன் காலத்துலயும் (நாங்கள்லாம் ) நாவல் படிக்கிறோம்ல!

'சின்ன வயசுல படக் கதைகள் படிக்கிறதுல ஆரம்பிச்ச ஆர்வம், பத்திரிகைகள்ல சிறுகதைகள் படிக்கிறதுல வளர்ந்து, இப்போ சரித்திர நாவல்கள் மேல பித்துப் பிடிக்கிற அளவுக்கு வந்திருக்கு. அதிலும் கல்கியோட 'பொன்னியின் செல்வன்’ என்னோட ஆல் டைம் ஃபேவரைட். கதையின் ஒரு நாயகனான வந்தியத்தேவன் மேல எனக்கு ஒரு காதல்னே சொல்லலாம். கதையில், நந்தினியைப் பார்த்தவொடன அவளோட அழகை ரசித்து தங்களோட வேலையை மறந்துடுற ஆண் மகன்களுக்கு நடுவுல, அவளோட மாயவலையில விழாம, அவளையே அவர் மயக்கும் அழகே அழகு! கதையின் நடுவில் வரும் செய்யுள்கள் ஒவ்வொண்ணும் முத்து. அந்தக் காலத்து ஆடை, அணிகலன்கள், அரசியல், சூழல்னு இதோட எல்லாம் நம்மையும் ஒன்றிப் பயணிக்க வைக்கும் கல்கியோட மொழி நடைக்கு நான் ரசிகை, அடிமை!''

செல்போன் காலத்துலயும் (நாங்கள்லாம் ) நாவல் படிக்கிறோம்ல!

''ஸ்கூல் படிக்கும்போது ஹாரி பாட்டர் சீரிஸ் படிக்க ஆரம்பிச்சேன். அதுல இருந்துதான் வாசிக்கும் பழக்கம் வந்தது. நம்மளச் சுத்தி 100 பேர் இருந்தாலும், நாம மட்டும் ஒரு தனி உலகத்தில் இருக்கும் மேஜிக்கை நாவல்கள் எனக்குத் தந்தது. சேத்தன் பகத் எழுதின '2 ஸ்டேட்ஸ்’ நாவல், என்னோட ஃபேவரைட். அதுல வர்ற க்யூட் ஜோடி, சூப்பர்! ஆங்கில நாவல்களில் வரும் லவ் ட்ராக்கும் நல்லா இருக்கும்னாலும், இந்திய நாவல்களில்தான் பெண்கள் வெட்கப்படுவதை உணர்ந்து, ரசித்துப் படிக்க முடியும்!''

''பொதுவா பொண்ணுங்க ரொமான்ஸ் நாவல்களைத்தான் தேடிப் படிப்பாங்க. ஆனா, எனக்கு அந்த 'ஜானர்’ பிடிக்கவே பிடிக்காது... நம்புங்க. பேய்க் கதைகள் ரொம்பப் பிடிக்கும். ஆங்கில நாவல்கள் பிடிக்கும்னாலும், பேய்க் கதைகளைப் பொறுத்தவரைக்கும் இந்திய எழுத்தாளர்களே என் சாய்ஸ். 'பூத்தர் ராஜா’ என்ற ஹிந்தி பேய்க் கதையை, வயிற்றைக் கலக்க கலக்கப் படிச்சேன். எனக்குப் பிடிச்ச எழுத்தாளர், ரவீந்திரநாத் தாகூர். அவரோட 'கீதாஞ்சலி’யை படிக்கும்போது என்னையே மறந்து இன்னொரு உலகத்துக்குப் போயிடுவேன். 'ஹிட்லர்’ சுயசரிதை புத்தகத்தை படிக் கும் போதெல்லாம் ஒரு படம் பார்த்த மாதிரி இருக்கும். எந்த ஒரு நாவலையும் மத்தவங்ககிட்ட 'ஓசி’க்கு வாங்கிப் படிக்கிறதைவிட, விலை கொடுத்து வாங்கிப் படிக்கணும் என்பதை ஒரு கொள்கையாவே வெச்சுருக்கேன்!''

- கட்டுரை, படங்கள்: இ.பிரியதரிசினி