Published:Updated:

குட்டீஸ் குறும்பு!

குட்டீஸ் குறும்பு!

குட்டீஸ் குறும்பு!

குட்டீஸ் குறும்பு!

Published:Updated:
##~##

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

குட்டீஸ் குறும்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

200

கறார் சுட்டி!

பஸ்ஸில் குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தோம். என் தங்கையும், 4 வயதைத் தொட இருக்கும் அவள் குழந்தையும் வந்திருந்தார்கள். கண்டக்டர் டிக்கெட் கேட்க, ''பாப்பாவுக்கு வயசு...'' என்று நான் சொல்லி முடிக்கும் முன், ''எனக்கு வயசு நாலு'' என்று அவள் முந்திக் கொண்டாள். குழந்தைக்கும் டிக்கெட் போட்டார் கண்டக்டர். அடுத்த ஸ்டாப்பில் கும்பல் ஒன்று ஏறியது. ''பாப்பா, என் மடியில் உட்கார்'' என்று சொன்னேன். ''எனக்குத்தான் டிக்கெட் வாங்கியாச்சே... ஸீட் உண்டு'' என்று அவள் கறாராக கூறியதைக் கேட்டு, அருகில் இருந்தவர்கள் சிரித்த சிரிப்பில் பஸ்ஸே அதிர்ந்தது. அதைப் பார்த்த கண்டக்டர் ''பாப்பா, நீ ஸீட்டிலேயே உட்காரும்மா'' என்று சொன்னதும், அவள் முகத்தில் ஏகத்துக்கும் பெருமிதம்!

- எஸ்.மீனா, ஸ்ரீரங்கம்

அசர வைத்த 'ஐடியா’!

எங்கள் பக்கத்து வீட்டுக் குட்டியின் வயது நான்கு. எல்.கே.ஜி படிக்கிறாள். ஒரு நாள், விளையாட்டாக அவளிடம், ''ஏம்மா, நானும் உன்கூட ஸ்கூலுக்கு வரட்டுமா... என்னை சேர்த்துப்பாங்களா?'' என்று கேட்டேன் (என் வயது எழுபது). அந்த வாண்டு படுசீரியசாக ''இல்லை பாட்டி, நீங்க உங்க அம்மாவைக் கூட்டிட்டு வந்தால்தான் சேரலாம்'' என்று சொல்ல... ''என் அம்மாதான் சாமிகிட்ட போயிட்டாங்களே...'' என்றேன். ''அதனால என்ன.. நீங்க சாமியிடம் போய் பர்மிஷன் வாங்கி, அவங்களை அழைச்சுட்டு வாங்க. நீங்க ஸ்கூல் சேர்ந்ததும், அவங்களை திருப்பி அங்கே கொண்டுபோய் விடலாம்'' என்று அந்தக் குட்டி 'ஐடியா’ கொடுத்ததைக் கேட்டு, அசந்து போனேன்.

- சாவித்திரி விஸ்வநாதன், போரூர்

குட்டீஸ் குறும்பு!

'அக்காவுக்கு முத்தம் கொடுப்பா..!’

என் இரண்டு குட்டி மகள்களும் கீரியும் பாம்பும் போல ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை. எப்போதும் ஏட்டிக்குப் போட்டிதான். ஒரு நாள் பேப்பர் படித்துக் கொண்டிருந்த என் கணவரிடம், இளையவள் சுப்ரஜா ''அப்பா... அப்பா... அக்காவுக்கு முத்தம் கொடுப்பா'' என்றாள். என் கணவரும் ''ஒருநாளும் இல்லாத திருநாளா இருக்கே...'' என்றவாறே பெரியவள் ஐஸ்வர்யாவுக்கு முத்தம் கொடுத்தார். உடனே இளையவள், பெரியவளிடம் சென்று ''அப்பா மீசை குத்துச்சா... குத்துச்சா...'' என்று கும்மாளமிட... அவளது சாதுர்யமான புத்தியை எண்ணி, தான் ஏமாற்றப்பட்டதையும் மறந்து சிரித்துவிட்டாள் பெரியவள்.

- சித்ரா சிவகுமார், பரங்கிப்பேட்டை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism