Published:Updated:

கனவே கலையாதே!

ஒரு காதல் ரவுண்ட் - அப்காதலர்தின ஸ்பெஷல்

கனவே கலையாதே!

ஒரு காதல் ரவுண்ட் - அப்காதலர்தின ஸ்பெஷல்

Published:Updated:
##~##

காதலை புரமோட் பண்ணினதுல... காதலர்களைவிட, சினிமாவுக்கே அதிக பங்குங்கறது... சொல்லித் தெரியவேண்டியதில்ல! காதலோட அழகை அப்படியே திரையில பதிவு செய்து, டீன் டிக்கெட்டுகளை மட்டுமில்லாம... ஆன்ட்டீஸ்... அங்கிள்ஸ்; தாத்தாஸ்... பாட்டீஸ்னு எல்லார் மனசையும் கொள்ளை கொண்ட காதல் படங்களும், ரொமான்ஸ் காட்சிகளும், சிலிர்க்க வைக்கும் க்ளைமாக்ஸ்களும், ரசிக்க வைக்கும் டூயட்களும், பிடித்தமான ரீல் ஜோடிகளும்... ரியல் ஜோடிகளும் இங்க ஏராளம்!

'இதுல உங்களோட ஃபேவரைட் எது..?’னு நம்ம காலேஜ் பொண்ணுங்ககிட்ட மைக் நீட்டினோம். கிட்டத்தட்ட ஐம்பது பேர்கிட்ட பேசினதிலிருந்து செம இன்ட்ரஸ்ட்டிங்கான தகவல்களா கொட்டுச்சு. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங். இதுல சிலரோட ஃபீலிங்ஸை மட்டும் இங்க கொட்டியிருக்கோம். மொத்தத்தையும் ஓட்டுகளா மாத்தி பொட்டியில போட்டிருக்கோம்... படிச்சுக்கோங்க, ரசிச்சுக்கோங்க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃபெமினா, மருத்துவக் கல்லூரி மாணவி, ரஷ்யா (ரஷ்யாவுக்கே போயிட்டோம்னு சர்ப்ரைஸ் ஆகிடாதீங்க. இவங்க, ரஷ்யாவுல படிக்கிற நம்ம ஊர் பொண்ணு!):

''எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச படம்... 'சில்லுனு ஒரு காதல்'. படத்துல சூர்யா கேரக்டருக்கு கல்யாணத்துக்கு முன்ன காதலியோட ஒரு லவ். கல்யாணத்துக்கு அப்புறம் மனைவியோட ஒரு லவ்... இப்படி ரெண்டு லவ். ரெண்டுமே உண்மையா, அழகா காண்பிக்கப்பட்டு இருக்கும். அதுவும் க்ளைமேக்ஸ்ல சூர்யா, ஜோதிகா, பூமிகா மூணு பேருமே தங்களோட காதலில் நேர்மையா நடந்துக்கறது கொள்ளை அழகு!''

கனவே கலையாதே!

நிவேதா, ஃபேஷன் டெக்னாலஜி மாணவி, கோவை:

''தனுஷ் - ஸ்ருதி ஹாசன் நடிச்ச '3’, 'ஆஷிக் 2’ (இந்தி படம்) இந்த ரெண்டு படமும் அத்தனை அற்புதமா இருக்கும். நாம லவ் பண்ற பையனை/பொண்ணை நாம அவங்க மேல வெச்சுருக்கிற அதீத காதலே பாதிச்சுடக்கூடாதுங்கறதுதான் ரெண்டு படத்தோட கரு. இதை அத்தனை அழகா சொல்லி, எல்லார் மனசுலயும் பதிய வெக்கறதுல... சூப்பர் வெற்றியை அடைஞ்ச படங்கள் இவை ரெண்டும்.

'3’ படத்துல, ஸ்ருதிஹாசனோட வீட்டு வாசல்ல வந்து நின்னு தனுஷ் புரபோஸ் பண்ற ஸீன். 'நீ இப்பவே பதிலை சொல்லிட்டேனா... சாயங்காலம் லூஸு மாதிரி நான் நின்னுட்டு இருக்க மாட்டேன்ல!’னு அப்பாவியா தனுஷ் கேக்க, தன்னையும் அறியாம 'மீ டூ லவ் யூ!’னு ஸ்ருதி சொல்றது... சூப்பர்ல!''

ராகப்பிரியா, பொறியியல் கல்லூரி மாணவி, மதுரை:

''எனக்குப் பிடிச்சது... 'எ மொமென்ட் டூ ரிமெம்பர்' (A Moment to Remember).  இது கொரிய மொழி படம். ஹீரோயின் தன்னோட சின்ன வயசுல ஒருத்தனை உயிருக்கு உயிரா லவ் பண்றா. சில காரணங்களால சேர முடியாமப் போக, வேற ஒருத்தனோட கல்யாணம் முடிஞ்சுடுது. தன் கணவன், தன் மேல காட்டுற அதீத அன்பை பார்த்து, முதல் காதலை முற்றிலும் மறந்து, கணவனோட சந்தோஷமா இருக்கா.  திடீர்னு அவளை ஒருவிதமான நோய் தாக்குது. கொஞ்சம் கொஞ்சமா ரிவர்ஸ் நினைவுகள்ல பயணிக்கிறா. ஒருநாள், தன் கணவனை, முதல் காதலன் பேரைச் சொல்லிக் கூப்பிடறா. மனசொடிஞ்சு போறான் கணவன். கணவனோட கண்கள்ல தெரியற உணர்ச்சிகளை வெச்சு தன் தவறையும், நோயையும் உணரும் ஹீரோயின்... படம் முழுக்க தவிக்க, அதை கணவன் புரிந்துகொள்ள, இறுதியில் அவளுக்கு நினைவே திரும்பலைனாலும் அவ கூடவே அளவில்லா காதலோட கடைசி வரை இருக்கற மாதிரி நிறைவா முடியும் அந்த காதல் காவியம்.''

கனவே கலையாதே!

 சுஹாசினி, பி.காம் மாணவி, மதுரை:

''முன்ன வந்த 'காதலர் தினம்', சமீபத்துல வந்த 'ராஜா ராணி' இந்த ரெண்டு படத்தையுமே எனக்குப் பிடிக்கும். காதலுக்கு அடிப்படையே... காதலர்களுக்குள் உள்ள புரிதலும், நம்பிக்கையும்தான். இந்த ரெண்டு படத்தின் கதையுமே இதை வலியுறுத்தறதுதான்! ஸோ, என்னோட ஃபேவரைட் இது ரெண்டும். 'ராஜா ராணி' படத்துல, 'மேட் ஃபார் ஈச் அதர்னு யாரும் பொறக்குறது இல்ல! வாழ்ந்து காட்டுறதுலதான் இருக்கு’னு ஜெய்கிட்ட நயன்தாரா சொல்லுற ஸீன்... செம நச்!''

கனவே கலையாதே!

ஆசியா, எம்.பி.ஏ மாணவி, சென்னை:

''சான்ஸே இல்ல... 'காக்க காக்க’ படத்துல சூர்யாகிட்ட ஜோதிகா லவ் சொல்ற ஸீன் அத்தனை அருமை. ஸ்கூல் டீச்சர் மாயா கேரக்டர்ல வர்ற ஜோதிகாகிட்ட 'மாயா உனக்கு என்ன வேணும்? நம்ம ரெண்டு பேரை பொறுத்தவரைக்கும் உனக்கு என்ன வேணும்?’னு சூர்யா கேட்க, 'நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கணும்; உங்க கூட வாழணும்; உங்ககூட நான் இருக்கணும்; உங்ககூட நான் சிரிச்சுப் பேசணும்; சண்டை போடணும்; உங்க தோள்ல சாய்ஞ்சு அழணும்; இன்னிக்கு மாதிரி எப்பவுமே உங்கமேல பைத்தியமா இருக்கணும்; மூணு குழந்தைங்க பெத்துக்கணும்; பாக்கறதுக்கும் பழகறதுக்கும் அவங்க உங்க மாதிரியே இருக்கணும்; இந்தக் கண்களை நான் பார்த்துட்டே இருக்கணும்; அப்புறம் ஒரு நாள் செத்து போயிடணும்’னு ஜோதிகா தன் லவ்வை சொல்றப்ப... வாவ், விசிலடிக்க தோணும். அப்படியே காதல்ல கனவுகள்ல மூழ்கத் தோணும்.

கனவே கலையாதே!

மதுப்ரியா, இ.ஐ.இ மாணவி, கோவை:

''காதல் ப்ளஸ் மியூசிக் ரெண்டுமே 'விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்துல செம அசத்தலா இருக்கும். மாடி வீட்டு ஜெஸ்ஸி (த்ரிஷா) அவ சொந்த ஊரான ஆலப்புழைக்கு போயிடுறா. அவளைத் தேடி வீட்டுக்கு போற கார்த்திக் (சிம்பு), அவளை நேர்ல பார்த்து 'உன்ன முதல்தடவை பார்த்தப்போ, சத்தியமா சொல்றேன்... உன் மேல இருந்த நிலா ஃபேடவுட் ஆகியிருச்சு. என் ஹார்ட் ரேட் பின்னி எடுத்திருச்சு. சம்மர்சால்ட்லாம் அடிச்சேன் தெரியுமா. யாரும் இதுவரைக்கும் உன்ன வெரட்டுனதே இல்லியா? பசங்க ரவுண்ட் கட்டி நின்னுருப்பாங்களே’னு கார்த்திக் கேட்க, 'உன் கண் வழியா அவங்க என்ன பார்க்கல போலிருக்கு’னு ஜெஸ்ஸி சொல்ற ஸீன்... கவித கவித!''  

கனவே கலையாதே!

காவ்யா, இ.ஐ.இ மாணவி, கோவை:

''வாரணம் ஆயிரம் படத்துல வர்ற ஒவ்வொரு காதலும் அருமை. குறிப்பா, டிரெயின்ல சூர்யா, சமீரா ரெட்டிகிட்ட புரபோஸ் பண்ணுற ஸீன் செம சூப்பர். 'உலகத்திலேயே நீ ஒருத்திதான் அழகுனு நினைச்சுட்டு இருந்தேன். உன்ன மிஞ்ச ஒருத்தி வந்துட்டாம்மா!’னு தனக்கு தானே ஃபீல் பண்ணிட்டு, கையால நெஞ்சு கிக் பண்றப்ப, 'வாட் ஆர் யூ டூயிங், வாட் யூ வான்ட்?’னு சமீரா கேட்பாங்க. அதுக்கு 'ஐ நீட் சம் ஆக்ஸிஜன்’னு சமீராகிட்ட ஃபீல் பண்ணிட்டு, இளையராஜாவோட 'என் இனிய பொன் நிலாவே’ சாங்கை கிடார் மூலமா பாடி இம்ப்ரஸ் பண்ணி... சூப்பர் ஃபீல் அது.''

தொகுப்பு: மோ.கிஷோர் குமார்
படங்கள்: பா.ஜான்சன், ர.சதானந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism