Published:Updated:

‘ஹிப் ஹிப்... ஹுர்ரே’!

‘ஹிப் ஹிப்... ஹுர்ரே’!

‘ஹிப் ஹிப்... ஹுர்ரே’!

‘ஹிப் ஹிப்... ஹுர்ரே’!

Published:Updated:
##~##

'கரிஷ்மா 2014’ - வருடா வருடம் கோயம்புத்தூர், கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் களைகட்டும் 'இன்டர் காலேஜ் ஃபெஸ்டிவெல்', வழக்கம்போல் இந்த வருடமும் அதே உற்சாகத்துடன் துவங்கியது!

நிகழ்ச்சியின் ஆரம்பமே அசத்தல். பின்னணிப் பாடகர் ஹரிஹர சுதன் மேடை ஏறும்போதே... 'ஒத்தக்கட ஒத்தக்கட மச்சான்’ என மாணவிகள் கூச்சலிட்டு குஷியாக, 'ஊதா கலரு ரிப்பன்’ பாடலைப் பாடி கூட்டத்தின் டெம்போவை ஏற்றினார் ஹரி. ''ரெண்டு பாடல்கள் மட்டும் பாடுறதாதான் முடிவாகியிருந்தது... நீங்கள் கொடுக்குற உற்சாகத்தைப் பார்த்தா பாடிட்டே இருக்கலாம் போல...' என அவர் இன்னும் பல பாடல்களைப் பாட, நிகழ்ச்சி ஜெட் வேகத்தில் டேக் ஆஃப்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அழகு மயில்களின் ஒய்யார நடையுடன் 'ஃபேஷன் ஷோ’ துவங்கியது. பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் விதம்விதமாக ஆடை உடுத்தி வலம் வர, பி.எஸ்.ஜி கல்லூரி மாணவி ஒருவர் அணிந்து வந்த பட்டர்ஃப்ளை ஆடைக்கு கூட்டத்தில் ஏக விசில் சத்தம். கோவை மரைன் இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள், தங்கள் சீருடையையே கொஞ்சம் வித்தியாசப்படுத்தி கடலில் பணி யாற்றுபவர்களின் உடைகளாக அணிந்து மேடை யில் நடைபோட... பெண்கள் கூட்டத்திலிருந்து ஆர்ப்பரிக்கும் கரகோஷம். இதை நடுவர்கள் அப்படியே ஆமோதிப்பதுபோல, இந்த மாணவர் களுக்கே முதல் பரிசை வழங்கினார்கள்.

‘ஹிப் ஹிப்... ஹுர்ரே’!

ஒரு நிகழ்ச்சிக்கும் அடுத்த நிகழ்ச்சிக்கும் இடையிடையே கிடைத்த சைக்கிள் கேப்களில் மேடை ஏறி கூட்டத்தை குஷிப்படுத்தினர் இன்ஸ்டன்ட் சூப்பர் சிங்கர்ஸ். 'ஆஷிக் 2’ படத்தின் 'தும் ஹி ஹோ’ பாட்டைத் தொடர்ந்து அனைவரும் ஹிந்திப் படப் பாடல்களையே பாட, பொறுமை இழந்து மேடையேறிய மாணவி ஒருவர் 'கண்டாங்கி கண்டாங்கி...’ என ஆரம்பிக்க... விசில் சத்தம் வான் வரை கேட்டிருக்கும்!

ஆன் ஸ்டேஜ் போட்டிகள் தவிர, ஆஃப் ஸ்டேஜ் போட்டிகளும் சத்தமில்லாமல் நடந்து கொண்டிருந்தன. தாவரவியல் துறை வகுப்பறையில் நடந்த 'வெஜிடபிள் கார்விங்’ போட்டியில், கொடுக்கப்பட்ட இரண்டு மணி நேரத்துக்குள் காய்கறிகளைக் குடைந்து அழகான மயில் செய்திருந்த நேரு கலைக் கல்லூரி மாணவர்களுக்கு கிடைத்தது முதல் பரிசு. பக்கத்து வகுப்பறையில் நடந்த 'ஃபேஸ் பெயின்ட்டிங்’ போட்டியில் முகங்களில் மும்முரமாக சுண்ணாம்பு அடித்துக் கொண்டிருந்தது மாணவிகள் பட்டாளம்.

‘ஹிப் ஹிப்... ஹுர்ரே’!

அதற்குள்ளாக ஆடிட்டோரியத்தில் இருந்து பெரும் சத்தம் எழ, ஓடிப் போய் பார்த்தால்... நடந்து கொண்டிருந்தது நடனப்போட்டி. பெரும்பாலான போட்டியாளர்கள் 'லுங்கி டான்ஸ்' ஆட, வி.எல்.பி ஜானகியம்மாள் கல்லூரி மாணவர்கள் 'காஞ்சனா’ பட பாட்டுக்கு போட்ட பேய் ஆட்டம்... ஆத்தாடி!

நிகழ்ச்சியின் ஹைலைட்... 'பெஸ்ட் ஆஃப் கரி¢ஷ்மா’ போட்டி. மேடையில் ஆன் தி ஸ்பாட்டில் கேட்கப்படும் கேள்விகளுக்கு, சடசடவென பதில் கூறிக்கொண்டே வர வேண்டும். யார் வெகு விரைவாக பதில் கூறி, அதேசமயம் நல்ல என்டர்டெய்னராக இருக்கிறார்களோ அவர்களுக்குதான் முதல் பரிசு. செம கலாய்ச்சலான அந்தப் போட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சற்றும் சளைக்காமல் அட்டகாசமாக பதிலளித்து முதல் பரி¢சையும், இந்த வருட 'கரி¢ஷ்மா’ திருவிழாவின் ஓவர் ஆல் சாம்பியன்ஷிப் டிராஃபியையும் தட்டிச் சென்றனர்... கோவை மரைன் இன்ஜினீயரி¢ங் கல்லூரி மாணவர்கள்!

''எங்க கல்லூரி மாணவிகள் எங்களுக்குள்ளயே அணிகள் பிரித்து, பல வாரங்கள் உழைத்து, பல கல்லூரிகளை ஒருங்கிணைத்து நடத்திய இந்த வருட 'கரிஷ்மா 2014’ விழா, வெற்றிவிழா!'' என்று 'ஹிப் ஹிப்... ஹுர்ரே' பாடினார்கள் கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவிகள்!

- தி.ஜெயப்பிரகாஷ் 

படங்கள்: அ.ஜெஃப்ரி தேவ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism