Published:Updated:

மால் கேர்ள்ஸ்... ஃபேர் கேர்ள்ஸ்!

மால் கேர்ள்ஸ்... ஃபேர் கேர்ள்ஸ்!

மால் கேர்ள்ஸ்... ஃபேர் கேர்ள்ஸ்!

மால் கேர்ள்ஸ்... ஃபேர் கேர்ள்ஸ்!

Published:Updated:
##~##

சிட்டி சென்டர், ஃபோரம் மால், எக்ஸ்பிரஸ் அவென்யூ, ஃபீனிக்ஸ் மால், ரமீ மால்.... இப்படி ஊர்ல எந்த 'மால்’லையும் விட்டு வைக்காம... சண்டே ஆச்சுனா, கால் தேய... கலர் கலர் பேக் மாட்டிட்டு போற சென்னை கேர்ள்ஸ் சிலரை, ஒரு சேஞ்சுக்காக நாம கூட்டிட்டு போன இடம்... சென்னை, தீவுத்திடல், டிரேட் ஃபேர் (பொருட்காட்சி)!

''சண்டே அதுவுமா இவ்ளோ சீக்கிரமா (காலை 12 மணி) எங்களை எழுந்திரிக்க வெச்ச பாவம், உங்களை சும்மா விடாது. ஆனாலும், ஸ்பான்சர் நீங்கங்கிறதுனால மன்னிச்சு விடறோம்'' என்று பெருந்தன்மையாக மன்னித்தபடி டூ வீலர்களில் வந்திறங்கினார்கள் கார்த்திகா அண்ட் கோ.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஒருநாளாவது சொந்தக் காசுல.... ஐ மீன் உங்க காசுல, ஒரு கைல டெல்லி அப்பளம், இன்னொரு கைல பஞ்சுமிட்டாய்... இன்ன பிற அயிட்டங்கள்னு சாப்பிட்டுக்கிட்டே ராட்டினம், கொலம்பஸ், குதிரை வண்டினு ஜாலி ரைடு போறதுல இருக்கிற கிக்கே தனி!'' என்றபடியே, டெல்லி அப்பள ஸ்டால் நோக்கி கார்த்திகா நடக்க,

''கிக்கெல்லாம் இருக்கட்டும் மச்சி... ஆனா, நீ இதை சாப்பிட்டுகிட்டே ரைடு போனா... அடுத்த நிமிஷம் உனக்குள்ள நடக்கிற ரியாக்ஷனே தனி'' என்று லட்சுமி நக்கலடித்து சிரிக்க...

''கலாய்ச்சுட்டாங்களாமாம்'' என்று கடுப்பானார் கார்த்திகா.

மால் கேர்ள்ஸ்... ஃபேர் கேர்ள்ஸ்!

''யேய்ய்ய்ய்ய் குடைராட்டினம்'' என்று லஷ்மி கத்த... ஒட்டுமொத்த கும்பலும் குதிரை பொம்மைகளில் ஏறிக்கொள்ள, மெதுவாக சுற்ற ஆரம்பித்தது ராட்டினம். மூன்றாவது சுற்றுக்கே தலைசுற்றி... 'ஸ்டாப் ஸ்டாப் ப்ளீஸ் ஸ்டாப்’ என்று வீரமங்கைகளாக குதித்து இறங்கினார்கள் அத்தனை பேரும். ''பில்டிங் ஸ்ட்ராங்தான்... ஆனா, ராட்டினம் போன ஸ்பீட்ல பேஸ்மென்ட் கொஞ்சம் வீக் ஆயிருச்சு... ஹி ஹி'' என்றபடியே அவர்கள் என்டர் ஆனது... வளையல், பர்ஸ், க்ளிப் ஏரியா. நாம் பரிதாபமாக பர்ஸைப் பார்க்க, துளிகூட கண்டுகொள்ளாமல் ''இங்க வாங்குறதை வெச்சே ஒரு வாரம் ஓட்டுவோம்ல'' என்று அள்ளி எடுத்தார்கள்.

''ஷாப்பிங், ரைடு இதுக்காக நான் இங்க வரல’' என்று வாலன்ட்ரியாக வாய்தா வாங்கிய காயத்ரி...

''மால்க்கு போனாலே வெட்டி பீட்டர் விடுற பசங்களைப் பார்த்து பார்த்து போர் அடிச்சு போச்சு. இங்கதான் பந்தா விடாத நம்மூர் மாமன்ஸ் அண்ட் மச்சான்ஸை பார்க்க முடியும்'' என்று சத்தம்போட்டுச் சொல்ல...

''மச்சி பப்ளிக்... பப்ளிக்...'' என்று அவர் வாயைப் பொத்தினார் பூர்ணா.

மால் கேர்ள்ஸ்... ஃபேர் கேர்ள்ஸ்!

அதுவரை சாந்த சொரூபினியாக வலம் வந்த பூர்ணா... ''ஐ... பீப்பி'’ என்று துள்ளி குதித்து ஓடிச்சென்று 'குருவி பீப்பி' வாங்க, 'எனக்கும்... எனக்கும்’ என்று ஒட்டுமொத்த கேங்கும் கிளி, குருவி என ஆளாளுக்கு தினுசு தினுசாக வாங்கி ஊதித் தள்ளினார்கள்.

''என்ன ஷ்ஷ்ஷ்ஷாலும்மா... ஆரம்பத்தில்இருந்தே ரொம்ப அமைதியா வர்றே? பெருசா எதுக் கும் அடி போடுறியோ?'' என்று இந்து வாரிவிட,

''அங்க பாரு டாட்டூஸ்...'' என்று ஒற்றை வார்த்தையில் நமக்கு ஒரு டஜன் செலவை வைத்தார் 'ஷ்ஷ்ஷ்ஷாலும்மா' அலயஸ் ஷாலினி. அவர் போட்டுக் கொண்டது... சூப்பர்மேன் டாட்டூ.

''ரொம்ப சீப்பாவும், ஸ்டைலாவும் போட்டு விடுறாங்க. ஆல் சென்னை மக்காஸ்... ப்ளீஸ் விசிட் ஹியர்’' என்று விளம்பர மாடல்களாக மாறியவர்கள், ''ரொம்ப டயர்டா இருக்கு ஸ்நாக்ஸ் ப்ளீஸ்’' என்று அடுத்த கரன்சிக்கு அடி போட்டு டெல்லி அப்பளம், பஜ்ஜி ஆரம்பித்து ரணகளப்படுத்தினார்கள்.    

மால் கேர்ள்ஸ்... ஃபேர் கேர்ள்ஸ்!

ஜெயன்ட் வீல் ராட்டினம், டாய் டிரெயின் என அடுத்தடுத்து செம ரகளையாக போய்க்கொண்டே இருக்க...

''இப்ப எடுத்த போட்டோஸ் எல்லாம் எங்களுக்கு கொடுப்பீங்கள்ல... ஃபேஸ்புக்ல அப்லோட் பண்ணி, ச்ச்சும்மா லைக்ஸ், கமென்ட்ஸ் அள்ளணும்ல. அதுக்காகத்தான்'' என்று காலரை தூக்கிவிட்டுக் கொண்டார் இந்து.

உச்சிவெயில் மண்டையை பிளந்ததைக்கூட கவனிக்காமல் ஒரு கடை விடாமல் அத்தனை கடைகளிலும் அட்டெண்டென்ஸ் போட்ட டெரர் கேங்க், ''இந்த சண்டேவை மறக்க முடியாது. ஊராங் காசுல ஊரைச் சுத்துறதுனா எவ்வ்வ்வ்ளோ ஜாலி. ஆமா... இங்கேயே அடுத்த ரவுண்ட் போக ஸ்பான்சர் பண்ணுவீங்களா'' என்று கேட்க...

குச்சிமிட்டாய், குருவி ரொட்டி வாங்கிக் கொடுத்து வாயை அடைத்து, அபீட் ஆனோம்!

- அ.பார்வதி

படங்கள் : எஸ்.பி.ஜெர்ரி ரினால்டு விமல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism