Published:Updated:

மனதில் உற்சாகம்... கைகளில் பரிசு... கண்களில் ஆனந்தம்!

ஜெ.அன்னாள் நேசமோனி, படங்கள்: ஏ.சிதம்பரம், தி.ஹரிஹரன்

மனதில் உற்சாகம்... கைகளில் பரிசு... கண்களில் ஆனந்தம்!

ஜெ.அன்னாள் நேசமோனி, படங்கள்: ஏ.சிதம்பரம், தி.ஹரிஹரன்

Published:Updated:
##~##

 வாசகிகளுக்கு அன்லிமிட்டெட் ஆனந்தத்தை அள்ளித் தரும் ஜாலி டே, இம்முறை தூத்துக்குடியில் நடந்தேறியது! 'சத்யா’, 'ஃபேர்பீட்’ நிறுவனம் மற்றும் 'சன்லேண்ட்’ சன்ஃப்ளவர் ஆயில் நிறுவனம் ஆகியவை அவள் விகடனுடன் கைகோக்க... அசத்தல், அமர்க்களம், அட்டகாசம் என தூத்துக்குடி தோழிகள் சந்தோஷத்தில் திக்குமுக்காடித்தான் போனார்கள்!

ஜனவரி 25 அன்று தூத்துக்குடி, கே.வி.எஸ். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் முன்தேர்வுப் போட்டிகள். வாசகிகள் உற்சாகத்தோடு திரண்டு வந்து தங்களின் பெயர்களைப் பதிவுசெய்து, போட்டிகளில் பங்கேற்று அசத்தினர். ஜனவரி 26 காலை 10 மணிக்கு தூத்துக்குடி 2-ம் கேட் அருகில் உள்ள அபிராமி மஹாலில் ஜாலி டே! இதற்காக காலை 8 மணி முதலே குவியத் துவங்கிய வாசகிகளின் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்ட... அட்டகாசமாக ஆரம்பமானது ஜாலி டே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கானத்தில் யுத்தம் செய்யும் 'பாட்டுக்குப் பாட்டு’, அமைதியில் அர்த்தம் செய்யும் 'மௌன மொழி’, பழைய, புதிய மெட்டுக்களுக்கு ஸ்டெப் கட்டும் 'உல்டா புல்டா’, ஐ.க்யூ-வை அளக்கும் 'வினாடி வினா’, 'டான்ஸ் மச்சி டான்ஸ்’ என விதவிதமாக நடந்த அனைத்துப் போட்டிகளிலும் அமர்க்களப்படுத்தினர் வாசகிகள். கல்லூரிச் சிட்டுக்களும், இல்லத்தரசிகளும் அவ்வப்போது தொகுப்பாளினி சுபாஷினியுடன் இணைந்து மேடையை கலகலப்பாக்க, அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது. இடையிடையே நடத்தப்பட்ட எதிர்பாராத பரிசுப் போட்டிகள் அனைத்தும் வாசகிகளை வெகுவாகக் கவர்ந்தது, ஹைலைட்!

மனதில் உற்சாகம்... கைகளில் பரிசு... கண்களில் ஆனந்தம்!

நிகழ்வின் முத்தாய்ப்பாக 'என்ன விலை..?’ போட்டியில் மேடையில் வைக்கப்பட்   டிருந்த ஃபிலிப்ஸ் 'LED' டிவி’ -யின் விலையை, 'ரூ.13,290' என மிகத்துல்லியமாகச் சொல்லி அசத்தினார் தூத்துக்குடி, ப்ரயன்ட் நகரைச் சேர்ந்த தங்கக்கனி. அவருக்கு 'சத்யா’ நிறுவனர் ஜான்சன் அந்த டி.வி-யை பரிசாக வழங்க, தங்கக்கனிக்கு முகமெல்லாம் மலர்ச்சி!

மனதில் உற்சாகம்... கைகளில் பரிசு... கண்களில் ஆனந்தம்!

முக்கிய நிகழ்வான பம்பர் பரிசுப் போட்டிக்கு வாசகிகள் அனைவரும் நகம் கடித்தபடி காத்திருந்தனர். பரிசுக்குரியவரைத் குலுக்கல் முறையில் 'சன்லேண்ட்'  சன்ஃப்ளவர்ஆயில் நிறுவனத்தின் எம்.டி-யான நாராயணன் தேர்வு செய்ய, அந்த கூப்பனை 'ஃபேர்பீட்' நிறுவனத்தின் இயக்குநர் பிரகாஷ் பிரித்துப் படித்து... 'ஜீனா’ என்று அறிவித்தார் உற்சாகமாக. தனது பேத்தி ஜீனாவுடைய கூப்பனை எடுத்துக் கொண்டு, மேடைக்கு சந்தோஷப் பெருமூச்சுடன் ஓடிவந்தார் அலிஸ்! பேச வார்த்தைகளின்றி கண்களில் தேக்கிய பெருமகிழ்ச்சியுடன் 'சத்யா’ நிறுவனர் ஜான்சன் அளித்த ஃப்ரிட்ஜை பரிசாகப் பெற்றுச் சென்றார்.

மனதில் உற்சாகம்... கைகளில் பரிசு... கண்களில் ஆனந்தம்!

போட்டிகளில் வென்றவர்களுக்கு சான்றிதழ்களும் மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசுகளும் வழங்கப்பட்டன. மனதில் ஏறிய உற்சாகத்துடனும், கைகள் கனக்கும் பரிசுகளுடனும், கண்கள் நிறைந்த ஆனந்தத்துடனும் பிரியா விடைபெற்றனர் வாசகிகள்!

அடுத்த ஜாலி டே, பிப்ரவரி 23-ல்... கோவை மாநகரில்! வாசகிகளே... பி ரெடி!

மனதில் உற்சாகம்... கைகளில் பரிசு... கண்களில் ஆனந்தம்!

'மாமியாருக்கு தேங்க்ஸ்!’

'உல்டா புல்டா’ டான்ஸ் போட்டியில் முதல் பரிசை வென்று, மீண்டும் மேடையில் நடந்த பொது நடனப் போட்டியிலும் பரிசை வென்று குவித்த பானுமதி, ''மருமக ஆட்டம், பாட்டம்னு போறதை பொதுவா எல்லா மாமியாரும் விரும்ப மாட்டாங்க. என் மாமியார், 'வீட்டை நான் பார்த்துக்குறேன்... 'ஜாலி டே’னாலே கொண்டாட்டம்தான்... நல்லா என்ஜாய் பண்ணிட்டு வா’னு அனுப்பி வெச்சாங்க. எந்த டான்ஸ் கிளாஸும் போனதில்ல... டி.வி-யைப் பார்த்து ஆடக் கத்துக்கிட்டதுதான். பரிசைவிட, இந்த ஆயிரம் வாசகிகளோட கைதட்டல்கள் இருக்கே... இதுக்காகத்தான் மேடை ஏறினேன்!'' என்று பூரித்தார் (மாமியாரை இந்த அளவுக்கு மருமகள் மெச்சுவதன் பின்னணியில் உருக்கமான ஒரு குடும்பக் கதை இருக்கிறது. அதைத் தெரிந்துகொள்ள 84-ம் பக்கத்துக்கு வாருங்கள்!

மனதில் உற்சாகம்... கைகளில் பரிசு... கண்களில் ஆனந்தம்!

'துள்ளிக் குதிக்க தோணுது!’

'டான்ஸ் மச்சி டான்ஸ்’ போட்டியில் முதல் பரிசை தட்டிச் சென்ற குழு  வில் ஒருவரான விஜயலட்சுமி, 'சென்னைதான் எனக்குப் பூர்விகம். இப்போ  தூத்துக்குடிவாசி. சென்னையில் இருந்தப்போ, மயிலாப்பூர் ராக்               அகாடமியில டான்ஸ் கத்துக்கிட்டேன். 'ஜாலி டே’ல கலந்துக்க போறேன்னு சொன்ன உடனே எங்க வீட்டுல இருக்கவங்க கொடுத்த என்கரேஜ்மென்ட்  தான், இந்தப் பரிசு என் கையில் வந்து சேர்றதுக்கு முக்கிய காரணம்.       எனக்கு குழந்தை மாதிரி துள்ளிக் குதிக்க தோணுது!'' என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்!

அசத்தல் 66!

மனதில் உற்சாகம்... கைகளில் பரிசு... கண்களில் ஆனந்தம்!

சர்ப்ரைஸ் பரிசுப் போட்டியில், வாசகிகளில் இருந்து நான்கு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, 'சன்லேண்ட்’ சன்ஃப்ளவர் ஆயில் பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டன. 'சன்லேண்ட் சன்ஃப்ளவர் ஆயிலில் மூன்று வைட்டமின்கள் உள்ளன’ என சரியான பதில் கூறி பரிசைத் தட்டி சென்றார், 66 வயது கே.சுப்பம்மாள்!

''இதுவரை இந்த மாதிரியான நிகழ்ச்சி, போட்டிகள்ல கலந்துக்கிட்டதில்ல. இன்னிக்கு முதல் முறையா கலந்துகிட்டேன். காலையில இருந்து என் சின்ன வயசுக்கே போயிட்ட மாதிரி இருக்கு. பெண்கள் எல்லாம் ஒண்ணா கூடி, இவ்வளவு ஆனந்தமா இருக்கறதைப் பார்க்கவே பரவசமா இருக்கு. இந்த வயசுலயும் நான் போட்டியில் பங்கேற்கவும், பரிசு பெறவும் காரணமாயிருந்த அத்தனை பேருக்கும் நன்றி'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism