Published:Updated:

“என் மாமியார்... தெய்வம் தந்த பரிசு!”

உருகும் ஒரு மருமகள்ஜெ.அன்னாள் நேசமோனி , படம்: எல்.ராஜேந்திரன்

“என் மாமியார்... தெய்வம் தந்த பரிசு!”

உருகும் ஒரு மருமகள்ஜெ.அன்னாள் நேசமோனி , படம்: எல்.ராஜேந்திரன்

Published:Updated:
##~##

 னவரி 26 அன்று, தூத்துக்குடியில் நடைபெற்ற 'ஜாலி டே’-யின் 'உல்டா புல்டா டான்ஸ்' போட்டியில் முதல் பரிசுபெற்ற பானுமதி, தன் புகுந்தகத்தையும் மாமியாரையும் உருகி உருகி மேடையிலேயே பாராட்டினார். அதன் பின்னணியில் உருக்கமானதொரு குடும்பக் கதை இருப்பதாக 81-ம் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தோம். இதோ... அந்தக் கதையைப் பகிர்கிறார் பானுமதி!

''நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் மும்பை. ஆனா, பூர்விகம் திருநெல்வேலிதான். எனக்கு 2006-ம் வருஷம் கல்யாணம் முடிஞ்சுது. வீட்டுல நான்தான் மூத்தவ. எனக்குப் பிறகு மூணு பொண்ணுங்க, ஒரு தம்பினு பெரிய குடும்பம். 'இப்போதைக்கு வேண்டாம்'னு கல்யாணத்தை தள்ளிப் போட்டுட்டே இருந்தேன். அப்போ, எங்க மாமா மூலமா அறிமுகமாகி, மும்பைக்கு வந்து பெண் கேட்டாங்க. மாப்பிள் ளையைப் பார்த்த பிறகு, 'வேண்டாம்'னு கறாரா அப்பாகிட்ட சொல்லிட்டேன் (அன்னிக்கு அப்படி நான் நினைச்சது தப்புனு... இன்னிக்கு வரைக்குமே வருத்தப்பட்டுட்டே இருக்கேன்ங்கிறது தனிக்கதை). 'நீ கவலைப்படாதே... இந்த வரனை ஒப்புக்கோ... உன் வாழ்க்கை நல்லா இருக்கும்'னு சொல்லிட்டு எழுந்து போயிட்டார் அப்பா. அவர், இவ்வளவு சொன்ன பிறகு சம்மதிக்காம இருக்க முடியல.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கணவர் ஸ்ரீதர்... பிறந்து, வளர்ந்ததும் மும்பைதான். பூர்விகம்... என்னைப் போலவே நெல்லை. அவருக்கு துபாய்ல வேலை. 42 நாள் வேலை, 21 நாள் விடுமுறைனு டிராவல் பண்ணிட்டே இருப்பார். மாமியார், மும்பை சைன்ல உள்ள ஒரு முனிசிபல் பள்ளிக்கூடத்துல தலைமை ஆசிரியையா இருந்து ஓய்வுபெற்றவங்க. மாமாவும் அங்கயே ரயில்வேயில வேலை செய்து ஓய்வுபெற்றவங்க.

“என் மாமியார்... தெய்வம் தந்த பரிசு!”

திருநெல்வேலியிலதான் கல்யாணமாச்சு... புகுந்த வீட்டுல காலடி வெச்சதுமே கண்ணுல தண்ணி முட்டிக்கிட்டு வந்துடுச்சு. பக்கவாதத்தால கையும் ஒரு காலும் பாதிக்கப்பட்ட மாமியார்... சர்க்கரை நோயால அவதிப்படற மாமனார்... சிறப்புக் குழந்தையா மூலையில உட்கார்ந்திருக்கற நாத்தனார்... என்ன செய்யறதுனே தெரியல. புரிஞ்சுக்கற பக்குவமும் அந்த வயசுல இல்ல. 'சரி, நம்ம வாழ்க்கை அவ்வளவுதான்'னு புலம்பிக்கிட்டே... ஏனோதானோனு வீட்டு வேலைகளை செய்தேன். வீட்டுல யார் எதைக் கேட்டாலும் எரிஞ்சு விழறது, கோபப்படுறதுனு கேரக்டரே மாறிடுச்சு. என் மகனைக்கூட நாலு மாசத்துக்கு அப்புறம் தான் மாமியார்கிட்ட காட்டினேன்னா பார்த்துக் கோங்க.

நான் இத்தனை வீறாப்பு காட்டினாலும்... என் கிட்ட ரொம்ப அனுசரணையாவே நடந்துக்கிட் டார் மாமியார். நான் இஷ்டம்போல திட்டிட்டு, கோபத்துல இருந்தாலும்... 'ஏண்டா என் மேல கோபமா... வா சாப்பிடலாம்'னு எதுவுமே நடக் காத மாதிரி சமாதானப்படுத்திடுவார். கல்யாணம் ஆன புதுசுல திருநெல்வேலியில ஆறு மாசம், மும்பையில ஆறு மாசம்னு வாழ்க்கை போயிட்டு இருந்துச்சு. 'எவ்வளவு நாள் அங்க இருக்கணும்னு நினைக்கிறியோ அவ்வளவு நாள் சந்தோஷமா இருந்துட்டு வா. ஆனா, உன்னோட வருகைக்காக இங்க ஒரு குடும்பமே காத்திட்டு இருக்குங்கறத மறந்துடாதே'னு சொல்லி அனுப்புவாங்க மாமியார். இதுக்குப் பிறகு, இவங்கள விட்டுட்டு இருக்கமுடியுமா?''

- சொல்லும்போதே கண்ணீர் கசிகிறது பானுமதிக்கு.

''மாமியாருக்கு பணிவிடைகள் செய் றது... சிறப்புக் குழந்தையா இருக்கற என் னோட 32 வயசு நாத்தனாருக்கு எல்லாத் தையும் செய்றதுனு கொஞ்சம் கொஞ்சமா என்னை நான் மாத்திக்கிட்டேன். பிக்னிக், சினிமானு எங்க வெளியில போனாலும் தவறாம நாத்தனாரை கூட் டிட்டுப் போவேன். முதல்லயெல்லாம் ஒரு மணி நேரமா குளிச்சுட்டே இருப்பா... 'அண்ணிய பாரு... எத்தனை சீக்கிரம் குளிக்கறாங்க'னு என் மாமியார் என்னைக் காட்டி சொல்ல ஆரம்பிச் சதும்.. இப்ப சீக்கிரமா குளிச்சு முடிக் கறா. எங்களோட கல்யாண நாள், வீட் டுல இருக்கறவங்களோட பிறந்த நாள்னு எல்லாத்தையும் கரெக்டா ஞாபகப்படுத் துவா. அவ ரொம்ப நல்லா பாடுவா. ஆனா, யாரும் அதை என்கரேஜ் பண் ணல போல. 'நீ நல்லா பாடுறே'னு சொல்லி சொல்லி, இப்ப இன்னும் பிரமாதமா பாடுறா. இப்படி அவமேல நான் அன்பு காட்டறதால... என்கிட்ட அவ ரொம்ப செல்லம். நான் என்ன சொன்னாலும் செய்வா. எங்க வீட்ல இருக்கவங்க அவள ஏதாவது திட்டினா... எனக்கு பயங்கரமா கோபம் வரும்.  மொத்தத்துல அவ எனக்கு இன்னொரு குழந்தை'' என்ற பானுமதி,

''புகுந்த வீடுனாலே பலருக்கும் எட்டிக்காயா கசக்குற நவீன காலம் இது. ஆனா, இப்படிப்பட்ட காலத்துலயும் எனக்கு உலகமே புகுந்த வீடுதான். என் மாமியார் இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருந்தா... என்னை இன்னும் நல்லா பார்த்துப்பாங்களோனு அடிக்கடி தோணும். தாலி கட்டின புருஷனுக்காவது என் மேல அக்கறை இருக்கணும்ங்கிறது கட்டாயம்... ஆனா, என் மாமியாருக்கு என் மேல அன்பைக் கொட்டணும்னு என்ன இருக்கு? மொத்தத்துல தெய்வம் தந்த பரிசுதான் என் மாமியார்'' என்று பானு சொல்ல... அவரை அப்படியே அணைத்துக் கொள்கிறார் மாமியார் வசந்தா ராஜகோபால்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism